Logo

திருநாவுக்கரசர் நாயனார் -7

அப்பரடிகள் பொய்யான உடலை சுமப்பதை விட நான் எம்பெருமானை சந்திப்பதையே பெரும் பேறாக கருதுகிறேன்.அவரை சந்தித்த பிறகு இந்த உடலோடு நான் மீண்டு திரும்பிவர விரும்பவில்லை என்றார். தவசியாக வந்த பெருமான் மறைந்தார்.
 | 

திருநாவுக்கரசர் நாயனார் -7

சிவத்தலங்களைத் தரிசித்து வந்த அப்பரடிகள் திருக்காளகத்தி மலையை வந்தடைந்தார். திருக்காளத்தியப்பரையும், அவருக்கு வலப்பக்கத்தில் இருக்கும் கண்ணப்ப நாயனாரையும் வணங்கி இன்ப தமிழ் பாமாலையால் பாடி வணங்கினார்.அங்கிருந்து ஸ்ரீ சைலம் வந்து மல்லிகார்ச்சுன ரை வணங்கி வழிபட்டு அங்கிருந்து தெலுங்கு, மாளவதேசம், மத்தியப்பிரதேசம் கடந்து இறுதியாக புனித யாத்திரைத் தலமான காசிக்கு வந்த டைந்தார் அங்கிருந்த தொண்டர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்றார்கள்.அவரோடு சேர்ந்து விசுவ லிங்கத்தையும், தடங்கண்ணித் தாயா ரை யும் போற்றி பதிகம் பாடினார். அங்கிருந்து திருக்கயிலாயத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.

வழியில் அடர்ந்த மலைகள், காடுகள், ஆறுகளைக் கடந்து  எம்பெருமானை மட்டும் நினைத்தபடி நடக்கலானார். வழியில் தென்படும் கொடிய மிருகங்கள் அவரைக் கண்டு அஞ்சி ஒதுங்கியது. கனிகளையும், கிழங்குகளை உண்ணும் பழக்கத்தையும் அறவே ஒதுக்கினார். மனம் முழுக்க சிவநாமத்தை மட்டுமே பரப்பி சிந்தையில் இருத்தி பயணத்தைத் தொடர்ந்தார்.

பாலைவனத்தை அடைந்தார். பாதங்கள் வலுவிழந்து கற்களால் காயமடைந்த நிலையில் குருதி வரத்தொடங்கியது. அதை உணரும் நிலை யில் அப்பரடிகள் இல்லை. சிவமயமாகவே இருந்தார். குருதி பெருகி நடக்க இயலாமல் போன போது கைகளால் ஊன்றியபடி நடந்துச்சென்றார். கை மணிக்கட்டுகள் தேய்ந்து அங்கும் குருதி வழியவே பிறகு தன் உடலை மண்ணில் வைத்து தேய்த்தபடி உருண்டு சென்றார், பிறகு மயங்கி சரிந்தார். அன்பனின் இத்தகைய பக்தியைக் காண பொறுக்காமல் எம்பெருமான், அப்பரடிகள் முன்பு அழகிய தடாகத்தை உருவாக்கி தவசி வடி வம் கொண்டு அப்பரடிகள் முன்பு தோன்றினார்.

இடையில் கண்விழித்த அப்பரடிகள், அருகில் இருக்கும் தடாகத்தை கண்டு வியந்தார்.அருகில் நின்றிருந்த தவசியார், அப்பரடிகளிடம் உடல் முழுக்க குருதியை சுமந்தும் அதை பொருட்படுத்தாமல் யாரைக் காண வருகிறீர்கள் என்றார். எம் அப்பன் கயிலையில் குடிகொண்டிருக்கிறான். அவனைக் காணும் பொருட்டு யாம் இந்த பயணத்தை மேற்கொண்டோம். அவனைக் கண்டுவிட்டால் எடுத்த இப்பிறவி முற்றுப்பெறும் என்றார். அதைக் கேட்டு சிரித்த தவசி. மானுடர்களுக்கு எம்பெருமான் கயிலையில் எப்படி தரிசனம் தருவார் தேவர்களுக்கே கிட்டாத அரிய பேறு சாதா ரண மனிதனான உனக்கு கிட்டுமா? திரும்பி போனால் உன் உடலாவது அழிவிலிருந்து மீளும் என்றார்.

அப்பரடிகள் பொய்யான உடலை சுமப்பதை விட நான் எம்பெருமானை சந்திப்பதையே பெரும்பேறாக கருதுகிறேன்.அவரை சந்தித்த பிறகு இந்த உடலோடு நான் மீண்டு திரும்பிவர விரும்பவில்லை என்றார். தவசியாக வந்த பெருமான் மறைந்தார். எழுந்திரு திருநாவுக்கரசரே என்று அசரீரி ஒலித்தது, உறுப்புகள் முன்பை விட பலம் பெற்று ஒளிவீச எழுந்தார் அப்பரடிகள்.

மண்ணிலே தோன்றி விண்ணிலேமறைந்தருளிய தேவநாயகனே.திருக்கயிலையில்நீஎழுந்தருளியிருக்கும்திருக்கோலத்தைக்காணும் பேறை எனக்குத் தருவாயாகா என்றார். அப்பரடிகளே உம் அருகில் இருக்கும் பொய்கையில்  மூழ்கி திருவையாற்றில் எழுந்தருள்வீர். அங்கு உமக்கு திருக்கயிலை தரிசனத்தை தருகிறோம் என்னும் அசரீரி ஒலித்தது.

பிறையணிந்த பெருமானின் பெருமையை யார் அறிவார் என்று தடாகத்தில் மூழ்கி திருவையாறில் கரையேறினார். எம்பெருமானின் அருளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். விண்ணுலகத்திலிருந்த தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். சிரம் மீது கரம் உயர்த்தியபடி எழுந்த அப்ப ரடிகள் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். எம்பெருமான் அப்பரடிகளுக்குவாக்கு கொடுத்தப்படி சக்தி சமேதராய் திருகாட்சி கொடுத்தார்.அள வில்லாத இன்பம் அடைந்த அப்பரடிகள் திருக்கண்களால் பருகி எழுந்தார். மாதர் பிறைக் கண்ணியாளை மலையான் மகளோடும் என்னும் பதி கத்தை பாடினார்.

திருக்கயிலாய எம்பெருமானின் தரிசனத்தை திருவையாறில் தரிசித்ததால் அத்தலத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்தார்.

newstm.in
                     

 


 
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP