திருநாவுக்கரசர் நாயனார் -6

நானும் அங்கேதான் செல்கிறேன் என்றார் அந் தணர் வடிவில் வந்த எம்பெருமான். பிறகு இரு வரும் ஆலயத்துக்குள் சென்ற போது அந்தணர் வடிவிலிருந்த எம்பெருமான் மறைந்தார். அந்த ணர் வடிவில்வந்து தாகம் தீர்த்தது எம்பெரு மானே என்று அகமகிழ்ந்தார் அப்பரடிகள்...

திருநாவுக்கரசர் நாயனார் -6
X

சம்பந்தர் பாண்டிய நாட்டுக்கு சென்று சைவ மதத்தைப் பரப்ப தீர்மானித்ததை அறிந்து அப்பரடிகள் அவரை தடுத்ததோடு அங்கே செல்ல நான் அனுமதிக்கமாட்டேன் என்றார்.ஆனால் சம்பந்தர் அச்சம் கொள்ளாதீர்கள் அப்பரே. அரசியும், அமைச்சரும் சைவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். சமணர்களால் அதர்மம் செய்யும் பாண்டிய மன்னனே அந்த சமணர்களை விரட்டியடிக்க செய்யும்படி செய்கிறேன்.

பாண்டிய நாட்டில் சூழ்ந்துள்ள பிற சமயங்களை நீக்கி சைவ நெறியை பரப்புவேன். மறுக்காமல் என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் என்றார் சம் பந்தர். அப்பரடிகள் எல்லாமே எம்பெருமானின் ஏற்பாடு என்று வழியனுப்பி வைத்தார். அதன் பிறகு அப்பரடிகள்திருமறைக்காட்டில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு தொண்டுகள் செய்து வந்தார்.

அப்பரடிகள் சிவத்தலங்களுக்கு செல்ல மீண்டும் பயணித்தார். அப்போது வடதளி என்னும் பெயர் பெற்ற பழையாறை அடுத்துள்ள கோயிலில் இருந்த சிவலிங்கப் பெருமானைசமணர்கள் தங்கள் சூழ்ச்சியால் மறைத்து சமணக்கோயிலாக மாற்றியிருந்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்த அப்பரடிகள், கோயிலின் தெய்வசன்னிதானத்தில் அமர்ந்து எம்பெருமானை நினைத்து, பித்தா! பிறைசூடி பெருமானே அருளாளா! சமணர்களின் சூழ்ச்சியை தகர்த்தெறிந்து, ஐயனின் திருவுருவத்தை வடதளி விமானத்தில் கட்டாமல் நான் இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன் என்றார்.

அன்றிரவே சோழ மன்னனின் கனவில் தோன்றிய எம்பெருமான் சமணர்கள் சிவஅன்பர்களுக்கு தொடர்ந்து இன்னல் கொடுத்து வருகிறார்கள். வடதளி கோயிலை என்னை மண்ணிற்குள் புதைத்து தங்கள் சமயத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் என்னுடைய பக்தன் ஒரு வன் என்னை அங்கு தரிசிக்க காத்திருக்கிறான். அவனது வேண்டுதலை நிறைவேற்றுவாயாக என்றார்.

சோழ மன்னர் கனவு தெளிந்து எழுந்தார். நடந்ததை அறிந்து மறுநாள் காவலாளிகளுடன் வடதளி ஆலயம் சென்று எம்பெருமானின் கூற்றுப்படி மண்ணிற்குள் புதைக்கப்பட்ட எம்பெருமானை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்தார். சிவாலயங்களில் முன்பு போல் வழிபாடும், பூஜைகளும் நடந்தது. தீங்கு செய்த சமணர்களின் மீது சினம் கொண்ட சோழ மன்னன் சமணர்களை யானைகள் கொண்டு கொன்று அழித்தார். மகிழ்ந்த அப்பரடிகள் எம்பெருமானின் மீது பதிகங்கள் பாடி, காவிரி வழியாக திருவானைக்காம் திருவெறும்பூர், திருச்சி, திருக்கற்குடி, திருப்பாத்துறை வழி யாக திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்தார்.

களைப்பினால் சோர்வடைந்திருந்த அப்பரடிகள் களைப்பை பொருட்படுத்தாமல் எம்பெருமானை நோக்கி நடந்தார். ஆனால் எம்பெருமான் தமது தொண்டரின் தாகத்தைப் போக்க குளிர்நீர் பொய்கை, எழில் மிகு சோலையையும் உருவாக்கினார். அந்தணர் வடிவம் தரித்து பொதி சாறு கொண்டு அப்பரடிகளின் தாகம் தணிக்க செய்தார். அந்தணர் வடிவிலிருந்த எம்பெருமான் அப்பரடிகளிடம் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க, திருப்பைஞ் சிழீயில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை தரிசிக்க செல்வதாக கூறினார். நானும் அங்கேதான் செல்கிறேன் என்றார் அந்தணர் வடிவில் வந்த எம்பெருமான். பிறகு இருவரும் ஆலயத்துக்குள் சென்ற போது அந்தணர் வடிவிலிருந்த எம்பெருமான் மறைந்தார். அந்தணர் வடிவில்வந்து தாகம் தீர்த்தது எம்பெருமானே என்று அகமகிழ்ந்தார் அப்பரடிகள்.

பிறகு அங்கிருந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களுக்கு வந்தார். காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலில் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தார் அப்ப ரடிகள். சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து பிறகு திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவெற்றியூர், திருவாலங்காடு, திருக் காரிகை வழியாக திருக்காளகத்தி மலையை அடைந்தார் அப்பரடிகள்.

newstm.in

newstm.in

Next Story
Share it