திருநாவுக்கரசர் நாயனார்-2

குருமார்கள் மயிலிறகைத் தடவி,மந்திரிக்க செய்த போதும் வலியின் தீவிரம் மேலும் மேலும் அதிகமாகியது. காப்பாற்றவே முடியாத சூலை நோயால் மருள்நீக்கியார் பாதிக்கப்பட்டி ருக்கிறார். எங்களால் எதுவும் செய்ய முடிய வில்லை என்று தோல்வியை ஒப்புக் கொண் டார்கள்...

திருநாவுக்கரசர் நாயனார்-2
X

திலகவதியார், தனது சகோதரன் மருள்நீக்கியார் உலக பற்றிலிருந்து விடுபட சமண மதமே சிறந்தது என்னும் எண்ணத்தை உறுதியாக கொண்டி ருப்பதை அறிந்து மனம் வாடினாள். எம்பெருமானிடம் சென்று சமண மதத்திலிருக்கும் தன்னுடைய உடன் பிறப்பை சைவ மதத்துக்கு மாற்றும் படி வேண்டினாள்.

ஒரு நாள் எம்பெருமான் திலகவதியின் கனவில் எழுந்தருளினார். திலகவதி அம்மையாரே…முற்பிறவியில் மருள்நீக்கியார் முனிவனாக இருந்து என் மீது பக்தி கொண்டு தவம்புரிந்தவன். இப்பிறப்பில் சூலைநோயை உண்டாக்கி அவனை என் பக்தனாக மாற்றுவோம் என்றார். உறக்கத்திலும் சிவனை நினைத்து சிந்தையில் ஆழ்ந்த திலகவதியார் எம்பெருமானின் சொல்லைக் கேட்டு மனம் மகிழ்ந்தாள்.

எம்பெருமான் திலகவதியாருக்கு கொடுத்த வாக்கின் படி மருள் நீக்கியாருக்கு சூலை நோயை உண்டாக்கினார். சூலை நோயும் மருள் நீக்கியாரின் வயிற்றுக்குள் நுழைந்து தணலை போன்ற வலியை உண்டாக்கியது. தாங்கொணா துன்பத்தால் துயருற்ற நிலையிலும் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைத் தன் நோய் நீக்க பயன்படுத்தினார். ஆனால் மாறாக வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போனது. அனலில் இட்ட புழுவாய் மயங்கி சரிந்தார் மருள்நீக்கியார்.

அதைக் கண்ட சமணர்கள் விரைந்து வந்து அவரது வலியைப் போக்க முனைந்தனர். குருமார்கள் மயிலிறகைத் தடவி,மந்திரிக்க செய்த போதும் வலியின் தீவிரம் மேலும் மேலும் அதிகமாகியது. காப்பாற்றவே முடியாத சூலை நோயால் மருள்நீக்கியார் பாதிக்கப்பட்டிருக்கிறார். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

மருள் நீக்கியார் எதுவும் செய்ய இயலாமல் தமது தமக்கையிடம் தாம் சூலை நோயால் துன்புற்று இருப்பதாக சேதி அனுப்பினார். ஆனால் தமக் கையாரோ சமணர்கள் இருக்கும் இடத்துக்கு தான் ஒருபோதும் வரப் போவதில்லை என்று உறுதிபடக் கூறினார். அதைக் கேட்டதும் மனம் வருந் திய மருள்நீக்கியார் தமக்கையைக் காண புறப்பட சென்றார். அக்கணமே அவர் உடம்பில் இருந்த அனல் குறைவதை உணர்ந்தார்.

ஆடைகளைக் களைந்து கமண்டலத்தையும், பீலியையும் ஒதுக்கி வெண்ணிற ஆடைகளைத் தரித்து சமணர்கள் அறியாவண்ணம் இரவோடு இர வாக தமக்கையைக் காண விரைந்தார். திருவதிகையில் மடம் அமைத்திருந்த திலகவதியார் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தியானத்தில் இருந்தவர் தேடி வந்த மருள்நீக்கியார் ஒருபுறம் மகிழ்ச்சி பொங்க மறுபுறம் வேதனையடைய சகோதரனை நோக்கினார்.

தமக்கையின் பாதங்களைப் பற்றிய மருள்நீக்கியார் அல்லல் படுத்தும் சூலை நோய் அகல அருள்புரிவாய் என்று தமக்கையின் காலில் விழுந்து கதற கவலைப்படாதே சகோதரா உமது நோய்க்கு காரணம் எம்பெருமானே. சமயம் மாறி நீ சென்றதை உணரவே இத்தகைய நோயை எம் பெரு மான் உனக்கு அருளினார் அவரை நினைத்து வெண்ணீறு தரித்து பூசிக்கொள் என்றார். பரமனை நினைத்து மகிழும் பெரும்பேறை பெற்றேன் என்று மேனி முழுவதும் பூசிக்கொண்டார் மருள்நீக்கியார்.

திருவெண்ணீறு தரித்து நோய் நீங்கப் பெற்றார். மீண்டும் சைவம் தழைக்க விளங்கினார். தமக்கையோடு சிவத்தலத்துக்கு வந்து எம்பெருமானை பக்தியுடன் தரிசித்தார் மருள்நீக்கியார். சூலை நோயிலிருந்து தம்மை விடுவித்த பரமனை கூறிறாயினை வாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.அவர்முடித்ததும் பற்றியிருந்த கொஞ்ச நோயும் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் பெருமையை உணர்ந்து இருவரும் போற்றி வணங்கினார்கள்.

இனிய செந்தமிழ்ப் பாக்களால் பாடிய மருள்நீக்கியாரே இனி நீ ஏழுலகிலும் திருநாவுக்கரசு என்று அழைக்கப்படுவாய் என்று வானிலிருந்து அச ரீரி எழுந்தது. திருநாவுக்கரசர் ருத்திராட்ச மாலைகள் அணிந்து மேனியெங்கும் விபூதி தரித்து பக்தி பழமாக காட்சியளித்தார். சமணத்திலிருந்து சைவமதத்திற்கு மாறுவதா என்று சமணர்கள் கொதித்தெழுந்தார்கள். உடனே மன்னரிடம் சென்று மருள்நீக்கியார் சமண மதத்திற்கு மாற சூலை நோய் பீடித்துள்ளதாக பொய்யுரைத்ததாக மன்னனிடம் கூறினார்கள். மன்னன் மருள் நீக்கியாரை அழைத்துவர பணித்தான்.

ஆனால் அரசரின் ஆணையக் கேட்டு அஞ்சாது எம்பெருமானை நினைத்து நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம் என்று தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார். அதைகேட்ட அமைச்சர்கள் திருநாவுக்கரசரின் பாதத்தில் வீழ்ந்து வந்தருள வேண்டும் என்று அன்பு பொங்க கூறினார்கள். பல்லவ மன்னன் முன்பு வந்த மருள்நீக்கியாரைக்கண்டு சமணர்கள் பொங்கி எழுந்தார்கள். சமணர்கள் மருள்நீக்கியாரை சுண்ணாம்பு காளவாயில் தள்ளுமாறு கூறினார்கள். சமண மயக்கத்தில் இருந்த மன்னனும் அதையே மொழிந்தான்.

மருள்நீக்கியாரைக் கொழுந்துவிட்டெறியும் அறைக்குள் தள்ளி கதவைத்தாழிட்டார்கள்.எம்பெருமானின் துணை இருக்க என்னபயம் என்று நினை த்த மருள்நீக்கியார் அவரை தியானித்தபடி அமைதி காத்தார். எம்பெருமானின் அருளால் நெருப்புத்தீ தென்றலாய் மாறியது. ஏழு நாட்களுக்குப் பிறகு கதவை திறந்த போது கூடியிருந்த அனைவரும் அதிர்ந்தார்கள். தூய்மையான ஆடை அணிந்தபடி வெண்ணீறு பூசியபடி பக்தி மணம் கம ழும் மருள்நீக்கியாரை அங்கே கண்டது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

சமண மந்திரத்தை ஜபித்து சாகாமல் இருக்கிறார் என்ற குற்றச் சாட்டை முன்வைத்தார்கள். அப்படியாயின் தருமசேனரை என்ன செய்ய வேண் டும்? என்று கேட்டார். அதற்கு சமணர்கள்…

newstm.in
newstm.in

Next Story
Share it