திருமூலர் நாயனார் -2

நான்குநெறிகளைசரியை, கிரியை, யோகம், ஞானம் வகுத்து, தொகுத்து,விரித்து கூறும் திரு மந்திர மாலையைப் பாடினார்.ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடி னார்...

திருமூலர் நாயனார் -2
X

ஆநிரைகளுக்காக மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதர், அந்திசாயும் நேரத்தில் ஆநிரைகள் வீடு திரும்ப அவர் செய்வதறியாமல் தனிமை யில் அமர்ந்திருந்தார். நேரம் கழிந்தது.

ஆநிரைகள் வீட்டுக்கு வந்து சேரும் காலம் தாண்டி கணவர் வரவில்லையே என்று கவலைக்கொண்ட மூலனின் மனைவி தேடி வந்தார். அவள் வழியில் வரும் போது திருமூலரைக் கண்டாள். என்னவாயிற்று வீட்டுக்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டாள். அவர் மெள னம் கலையவில்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது.என்னவாயிற்று உங்களுக்கு என்ன கேட்டாலும் பதிலுரைக்காமல் மெளனம் காக்கிறீர் களே. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா என்று கேட்டாள். அப்போதும் அவரது மெளனம் கலையாமல் இருக்கவே அவரது கையை பிடித்து அழைக்க முயன்றாள்.

அதைக் கண்டு பதறியபடி எட்டி நின்றார் திருமூலர். அப்பெண்மணி காரணம் புரியாமல் கண்கலங்கினாள். ஏன் விலகி நிற்கிறீர்கள் என்றாள். என் னால் உன் வீட்டுக்கு வரமுடியாது. இனி எனக்கும் உனக்கும் உறவு என்று எதுவும் கிடையாது. அதனால் என்னை வற்புறுத்தாதே என்றார். மேலும் சிவாலயம் சென்று அரனாரை வழிபடு உனக்குஅமைதி கிடைக்கும் என்றார்.அவள் திகைப்புடன் நிற்கும்போதே இனி இங்கே இருப்பது நல்ல தல்ல என்று அருகில் இருந்த மடம் ஒன்றினுள் புகுந்துகொண்டார். அங்கு சிவயோக நிலையில் அமர்ந்தார்.

மறுநாள் மூலனின் மனைவி தமது சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத் தில் வீசிய தெய்வ ஒளி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. எனினும் மூலனின் மனைவி இரவு முழுவதும் வருந்தியதும், காரணம் புரியாமல் திகைப்பதும் கண்டுஅவர்கள் திருமூலரிடம் காரணம் கேட்டார்கள்.ஆனால் அவர்களால் எத்தகைய பதிலையும் பெற முடியவில்லை என்பதோடு அவர் ஞானியாகி விட்டார் இனி இல்லற வாழ்வில் அவரை ஈடுபடுத்த வைப்பது பாவம் என்று கூறி சென்றார்கள்.

அதைக் கேட்டுமேலும் கலங்கிய மூலனின் மனைவி இவர்கள் சொல்வதுபோல் இவருக்கு பித்து பிடித்துவிட்டது போல் என்றுஅவரது கால்களில் பணிந்து வருத்தத்தோடு சென்று விட்டாள்.சற்று நேரம் கழித்து திருமூலர்மறைவாக வைத்திருந்த தமது உடலை தேடினார். ஆனால் அங்கு அவ ருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு அவரது உடல் இல்லை. இதுவும் எம்பெருமானின் திருவிளையாடலே என்பதை உணர்ந்துக் கொண்டார்.

இறைவன் அருளிய ஆகமப்பொருளை தமிழில் வகுத்து உலகோர் அறியும் வண்ணம் உணர்த்த தம்மை எம்பெருமான் பணித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டார். இறைவனின் கட்டளைக்கேற்ப அதைச் செயல்படுத்த வேண்டி பசுபதி நாதர் ஆலயத்துக்குச் சென்று பெருமாளை நினைத் தவாறு அரசமரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிய தொடங்கினார். எம்பெருமானின் நினைவில் அவருடன் கலந்தார்.

நான்குநெறிகளைசரியை, கிரியை, யோகம், ஞானம் வகுத்து, தொகுத்து,விரித்து கூறும் திருமந்திர மாலையைப் பாடினார்.ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார். இந்துமதத்தில் திருமந்திரம் அற்புதநூலாக போற் றப்படுகிறது. இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது.பன்னிரு திருமுறையில்,பத்தாம் திருமுறையாக விளங்குகிறது இத் திருமந்திரம்.

எம்பெருமானின் விருப்பத்துக்கிணங்க திருமந்திரத்தை நிறைவுசெய்து பசுபதியின் திருவருளால் திருக்கயிலை அடைந்து எம்பெருமானின் திரு வடி நிழலை பெற்று பேரின்ப நிலையை அடைந்தார்.சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிறப்பாக கொண்டாடப்படு கிறது.


newstm.in

newstm.in

Next Story
Share it