திருஞானசம்பந்த மூர்த்தி -6

மன்னனிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மன்னா அவரவர்களது சமயக் கொள்கையை ஏட்டில் எழுதி தீயிலிட்டு எரிக்க வேண்டும் யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர் களே வெற்றிபெற்றவர்கள்...

திருஞானசம்பந்த மூர்த்தி -6
X

பாண்டி மன்னனின் வெப்பு நோய் தீர்க்க அரசியாரின் விருப்பப்படி வந்த சைவ சமயத்தைச் சார்ந்த சம்பந்தரரின் வருகையை விரும்பாத சமணர் கள் மன்னனிடம் வஞ்சகமாக பேசினார்கள். உங்கள் நோயை அவரே குணப்படுத்தினாலும் நாங்கள் தான் குணப்படுத்தினோம் என்று சொல்லுங் கள் என்றார்கள். ஆனால் பாண்டி மன்னன் இதற்கு செவிசாய்க்கவில்லை.

மாறாக இரு பிரிவினருமே அவரவர் சமயங்களை வேண்டி எனக்கு சிகிச்சை செய்யுங்கள். அவற்றால் பலன் அடையும் பொருட்டு அவர்கள் பக்க மே நான் துணை நிற்பேன் என்று உறுதியாக கூறினான்.சமணர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது தனது படைகள் புடை சூழ வந்தார் திருஞான சம்பந்தர். அவரது கண்களை நேருக்கு நேராக கண்டதுமே மன்னனின் நோய் நீங்கியது போன்று உணர்ந்தார். தனது வலியையும் மீறி இருகைகளையும் கூப்பி வணங்கி அவரை வரவேற்று தனது தலைப்பகுதியில் இருக்கும் பொன் ஆசனத்தில் அமரும்படி கூறினார். மகிழ்ந்த சம் பந்தர் அவ்வாறே ஆசனத்தில் அமர்ந்தார்.

மன்னன் சம்பந்தரை நலம் விசாரிக்க தான் பிறந்து வளர்ந்த சீர்காழி நகரைப் பற்றி பன்னிரண்டு திருநாமங்களில் செந்தமிழ் பாட்டால் உரைத்தார் சம்பந்தர். அவர் பேச மேனியில் இருக்கும் வெப்பு நோய் நீங்குவது போன்ற மனநிலையை அடைந்தார் மன்னன். மன்னனுடன் அவருடையநெருக் கம் கண்டு வஞ்சம் கொண்ட சமணர்கள் தங்கள் வேத நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். அரசியார் மனதில் எழுந்த கோபத்தை அடக்கி முத லில் உங்கள் வெப்புநோய் தீரட்டும். அதன் பிறகு வாதங்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.

மன்னன் அரசியைச் சமாதானம் செய்து சமணர்களைக் கண்டு, உங்கள் ஆற்றலை என் மீது உள்ள வெப்பு நோயைக் குணப்படுத்துவதில் காண்பி யுங்கள் என்றான். சமணர்களும் சம்மதித்து இடப்பக்கத்தை நாங்கள் குணப்படுத்துகிறோம். வலப்பக்கத்தை அவர்கள் குணப்படுத்தட்டும் என்று சொல்லி மன்னனைச் சம்மதிக்க வைத்தார்கள்.

பிறகு பீலி கொண்டு மந்திரங்கள் சொல்லியபடி வெப்பு நோய் மீது பீலி தடவினார்கள். பீலி தீய்ந்ததோடு அல்லாமல் வெப்புநோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மன்னன் வலியால் துடித்தான். கதறினான். சமணர்கள் திகைத்தார்கள்.மன்னன் வேதனையை அடக்கியபடி சம்பந்தரைப் பார்க்க அவர் குறிப்பறிந்து அந்நோய் தீர மந்திரமாவது நீறு என்னும் பதிகத்தைப் பாடினார்.

எம்பெருமானை நினைத்தப்படி திருநீறை அள்ளி அவரது கரங்களால் மன்னனின் வலப்பாகத்தின் மீது பூசினார். மன்னனின் உடலில் இருந்த வெப் பம் குறைந்தது. அதே நேரம் இடப்பக்கம் சமணர்கள் சுற்றி நின்ற இடத்தில் வெப்பம் அதிகமாகியது. அருகில் இருந்த சமணர்களைத் தாக்கியது.
பாண்டி மன்னனுக்கு அளவிடமுடியாத அன்பு ஞான சம்பந்தர் மீது உண்டானது அதே நேரம் அளவில்லாத வெறுப்பு சமணர்களிடம் தோன்றியது. உங்கள் ஆற்றலின் பொய்மையை உணர்ந்தேன். இனியும் இங்கு நிற்காமல் வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டான். பிறகு சம்பந்தரிடம் என் உடல் வெப்பமும் குளிர்ச்சியும் கலந்து இருக்கிறது. என் உடல் முழுவதும் தங்கள் திருக்கரங்களால் வெண்ணீறு பூசி என்னை குளிர்ச்சியடைய செய்யுங்கள் என்றான்.

மகிழ்ந்த சம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லியபடி மன்னனின் இடப்பாகத்தில் தடவினார். மன்னனின் உடல் முழுவதும் இருந்த வெப்பு நோய் முழுவதுமாக நீங்கியது. மங்கையர்க்கரசிக்கும், குலச்சிறையாருக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி தோன்றியது. சம்பந்தரின் கால்களில் விழுந்து பணிந்து வழங்கினார்கள். மன்னனும் யானும் வெப்பு நோய் நீங்கி நின்றேன் என்று எழுந்தவாறு சம்பந்தரின் பாதங்களில் பணிந்து எழுந் தான்.

அதுவரை அக்காட்சிகளைக் கண்ட சமணர்கள் வெளியேறாமல் வெட்கித் தலைகுனிந்தார்கள். ஆனாலும் மனதில் இருந்த வஞ்சம் சற்றும் அடங்க வில்லை. அப்போதும் மன்னனிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மன்னா அவரவர்களது சமயக் கொள்கையை ஏட்டில் எழுதி தீயிலிட்டு எரிக்க வேண்டும் யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர்களே வெற்றிபெற்றவர்கள் என்றார்கள். மன்னன் பேசுவதற்கு முன்பு சம்பந்தர் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

மக்கள் முன்னிலையில் தீ மூட்டப்பட்டது. போகம் ஆர்த்த பூண் முலையாள் என்னும் திருநள்ளாற்று பதிகத்தை எடுத்த சம்பந்தர் தளிர் இள வளர் என்னும் திருப்பதிகத்தைப் பாடியபடி அனலில் இட்டார். ஆனால் என்ன ஆச்சர்யம் ஏடு எரியாமல் பசுமையாக அதே பளபளப்போடு இருந்தது. அதைக் கண்டு சமணர்கள் கர்வத்தோடு மந்திரங்களைச் சொல்லி தீயில் ஏட்டை இட அது பற்றி எரிந்தது. மன்னன் புன்னகைத்தான். இனியும் உங் கள் சமயத்தை நான் நம்புவதற்கோ ஏற்பதற்கோ அல்ல என்றான்.

வஞ்சத்தை மனம் முழுக்க நிரப்பியவர்கள் ஆயிற்றே. விடுவார்களா சமணர்கள். மீண்டும் மன்னனிடம் முறையிட்டார்கள். என்னவென்று நாளை பார்க்கலாம்.

newstm.in


newstm.in

Next Story
Share it