திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -8
கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் ஓடத்தை செலுத்த தயங்கிய ஓடக்காரர்களிடம் ஓடத்தின் கயிறை அவிழ்க்கும்படி செய்த ஞானசம்பந்தர் ஓடத் தில் அமர்ந்தார்.கொட்டமே கமழும் என்னும் பதிகத்தைப் பாடினார். ஓடம் தானாகவே கரையை அடைந்தது. அதைக் கண்டு ஓடக்காரர்கள் அதிச யித்தார்கள்.கரையை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வணங்கி மகிழ்ந்து பல திருத்தலங்களைத் தரிசித்து போதிமங்கை என்னும் இடத் துக்கு வந்து சேர்ந்தார்.
சிவநாமம் முழங்கி வந்த ஞானசம்பந்தரைக் கண்டு சினங்கொண்ட போதிமங்கை பவுத்தர்கள் தங்கள் தலைவன் புத்தநத்தியிடம் சென்று முறை யிட்டார்கள். சம்பந்தருடன் வந்த அடியார்களின் உள்ளம் வருந்தியது. அவர்கள் சம்பந்தரிடம் பவுத்தர்களைப் பற்றி முறையிட்டார்கள். சம்பந்தர் புத்தநத்தியின் தலையில் இடிவிழக்கடவது என்றார். அடுத்த நொடி புத்தநத்தி இடி இடித்து மடிந்தான். பவுத்தர்கள் அஞ்சி ஓடினாலும் அடுத்த தலைவனை சாரிபுத்தனை தலைவனாக ஏற்று சம்பந்தரிடம் வந்து வீண் வாதத்துக்கு அழைத்தார்கள்.
பவுத்தர்களும் சமணத்தின் வழி சென்று சம்பந்தரிடம் தோற்றுப்போனார்கள்.சம்பந்தர் மீண்டும் தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்து திருக்கட லூரை அடைந்து அங்கிருக்கும் இறைவனை வணங்கி மகிழ்ந்தார். அப்பரடிகள் நினைவு வரவே அவர் இருக்குமிடத்தை அடியார்களிடம் கேட்டார். திருப்பூந்துருத்தியில் இருப்பதாக கேள்விபட்டு அங்கு சென்றார். தொண்டர்கள் அடிசூழ வரும் சம்பந்தரைக் கண்டு மகிழ்ந்த அப்பரடிகள் தொண் டர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து அப்பரடிகளின் முத்துசிவிகையைத் தமது திருக்கரங்களால் ஏந்தினார். அப்பரடிகளை தேடிய சம்பந்தரரின் கண்க ளுக்கு அவர் புலப்படவில்லை. எங்கே அப்பரடிகள் என்று கேட்டார்.
உமது அடிகளைத் தாங்கும் பேறை பெற்று மகிழ்ந்தேன் என்றார். அப்பரடிகளின் குரல் வந்த திசையைக் கண்டு திகைத்து நோக்கிய சம்பந்தர் இவ் வாறு செய்யலாமா என்று கேட்டபடி அருகில் வந்தார். இரு சிவநேசர்களின் அன்பைக் கண்டு தொண்டர்களும், அடியார்களும் கண்ணீர் சிந்தினார் கள். இருவரும் ஒருவரையொடுவர் ஆரத்தழுவிக்கொண்டார்கள். பிறகு அப்பரடிகள் தொண்டை மண்டலத்து சிவத்தலங்களைப் பற்றி கூறவும் சம்பந்தரருக்கும் அந்த சிவத்தலங்களைக் காண ஆவலாக இருந்தது சில நாட்கள் அப்பரடிகளுடன் தங்கியிருந்து அவரிடம் விடைபெற்று சீர் காழிக்கு திரும்பினார். அவரை சிவபாதவிருதயர் சம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்று எம்பெருமானைத் தரிசிக்க சென்றார்கள்.
சம்பந்தர் தோணியப்பரை வழிபட்டு உற்று உமை சேர்வது மெய்யினையெ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி பரவசமுற்றார். சீர்காழியில் சில காலம் பெற்றோர்களுடன் வசித்துவந்தார். பிறகு மீண்டும் சிவயாத்திரைக்கு சென்றார். தில்லை சிற்றம்பலம் வந்து நடராசரைத் தரிசித்து அங்கி ருந்து பல சிவத்தலங்களை அடைந்து தேவாரப் பாடலை பாடியவாறு வேதபுரீஸ்வரரை வணங்கினார். இத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்த சம்பந்தரை அடியார்களிடமும், சிவனிடமும் பக்தி கொண்ட அடியார் ஒருவர் வந்து வணங்கினார்.
நான் இட்ட பனை மரங்களில் காய்க்காத மரங்கள் இருக்கின்றன. அதைக் கண்டு சமணர்கள் என்னை வெறுப்பூட்டுகிறார்கள் என்று வருந்தினார். உடனே பூதேர்ந்தாய் என்னும் பதிகத்தை சம்பந்தனார் பாட பனை காய்த்து குலை விட்டது. அவரது அருளைக் கண்டு வியந்தார்கள். ஆண்பனை என்று இழித்துக்கூறிய சமணர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.அவர்களில் சிலர் சைவத்துக்கு மாறினார்கள்.அங்கிருந்து காஞ்சியை அடைந்தார் சம் பந்தனார். அவரை வரவேற்கும் பொருட்டு மாவிலைகளால் வீட்டை அலங்கரித்தும், தோரணங்களால் வீதியை அலங்கரித்தும் வாழை மரம் கட்டி யும், மேளம் கொட்டியும் இவரை வரவேற்றார்கள்.
எல்லைக்குள் வந்த திருஞான சம்பந்தரைப் பொற்கும்ப கலசங்கள் தந்து வரவேற்றார்கள். காஞ்சி காமாட்சியையும், ஏகாம்பரநாதரையும் தரிசித்து அருகிலுள்ள சிவத்தலங்களுக்கு சென்றார். அங்கிருந்து திருக்காளத்தி தரிசனம் முடித்து திருவெற்றியூரை அடைந்தார். விடையவன் எனத் தொடங்கும் பதிகம் பாடியபடி முத்துச்சிவிகையில் இருந்து இறங்கி திருக்கோவிலினுள் சென்று திருவெற்றியூரானைத் தரிசித்தார்.அவரை பிரிய மனமில்லாமல் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து இறைவனை மனதார தரிசித்தார்.
திருமயிலையில் ஒருவர் சிவனடியார்கள் மீது பக்தியும் அன்பும் கொண்டு நல்வாழ்வை வாழ்ந்தார். இவருக்கு பூம்பாவை என்னும் மகள் அழகும் அறிவும் கொண்டு இருந்தாள். ஞானசம்பந்தரை மனதில் நினைத்து அவருக்கே பூம்பாவையையும், தன்னுடைய பொன்னையும், தன்னையும் உட் பட அர்ப்பணிப்பது என்று வாழ்ந்துவந்தார்.
ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவையை நாகம் ஒன்று தீண்டியது.வைத்தியங்களால் பயனுறாமல் உயிர் நீத்த மகளை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் இட்டு கன்னிமாடத்தில் வைத்து பாதுகாத்தார். இந்நிலையில்தான் சம்பந்தரின் வருகையை உணர்ந்து மகிழ்ந்திருந்தார். ஞானசம்பந்தரை திருவெற்றியூரில் சந்தித்து திருமயிலைக்கு அழைப்பு விடுத்தார். சம்பந்தரும் ஒப்புக்கொள்ளவே திருவெற்றியூரிலிருந்து மயிலை வரை அலங்கரித்து ஞானசம்பந்தரை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார். மயிலை அடைந்த சம்பந்தர் கற்பகாம் பாளையும், கபாலீஸ்வரரையும் தரிசித்து போற்றினார்.
சம்பந்தர் அங்கிருந்த சிவநேசரிடம் தங்கள் மகளின் சாம்பலையும், எலும்பையும் வைத்திருக்கும் குடத்தை கோயிலுக்கு புறத்தே கொண்டு வரும் படி பணித்தார். அதன் பிறகு மட்டிட்ட புன்னையைக் கானல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களைப் பாடி முடித்த போது தாமரை மலர்போல்.. திருமகளின் அழகைக் கொண்டு ‘எழுந்து நின்றாள் பூம்பாவை. என்னுடைய வேண்டுத லின் படி தாங்கள் எனது மகளை மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று கோரினார். அதற்கு சம்பந்தர்..
newstm.in
newstm.in