திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -5

உங்கள் வெப்பு நோயைத் தீர்த்து வைப்பது யார் என்று சைவர்களுக்கும், சமணர்களுக்கும் போட்டி நடத்துங்கள். அவர்களது பயனால் தாங்கள் குணமடைந்தாலும் குணமடையக் காரணம் நானே என்று சொல்லுங்கள் என்று சூசகமாக பேசினார்கள்

திருஞான சம்பந்த மூர்த்தி  நாயனார் -5
X

பாண்டி நாடு வந்த சம்பந்தரை வரவேற்க ஏற்பாடு செய்தார் அரசியார் குலச் சிறையார் சம்பந்தரரைக் கண்டு மயங்கி நின்றார். ஞான சம்பந்தர் திருக்கோயிலுக்கு வரவிருக்கும் செய்தி அறிந்த அரசியாரும் கோவிலுக்கு வந்தார். நீலமாமிடற்று ஆலவாயிலான் என்னும் திருப்பதிகத்தைப் பாடி சோமசுந்தரபெருமானை வணங்கினார்.

ஞானசம்பந்தரின் கால்களில் பணிந்து விழுந்த அரசியாரை நிறுத்தி அருளினார் சம்பந்தர். என்ன தவம் செய்தேன் தங்களது திருவருளைப் பெறுவ தற்கு என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உம்மை சுற்றி சமணர்கள் பலர் இருந்தும் சிவத்தொண்டு புரிந்துசிவனை நினைத்து வாழும் உம்மை காணவே இங்கு வந்தோம் என்ற சம்பந்தரின் பதிலில் பெருமகிழ்ச்சியுற்றார் மங்கையர்க்கரசி.

சம்பந்தரும் அவருடன் வந்த அடியார்களும் தங்குவதற்கு மடம் ஏற்பாடு செய்திருந்தார் மங்கையர்க்கரசியார். மடத்தில் இருந்து வெளிப்பட்ட வேத முழக்கங்களும், திருப்பதிக ஒலியும் சமணர்களைக் கலங்க வைத்தது. அவர்கள் சைவ மதம் பரப்ப வந்த சம்பந்தரரை பழிவாங்க எண்ணி னார்கள். மன்னன் ஏற்கனவே சமணம் பக்கம் சாய்ந்த நிலையில் அவரை குழப்பி அவர் வாயாலேயே செய்வது எதுவாயினும் சரி என்று சொல்ல வைத்தார்கள்.

மன்னன் எதற்கும் சம்மதம் என்று தெரிவித்திருந்தாலும் சொல்லொணாத்துயர் மனதை வாட்டவே உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட மங்கையர்க்கரசியார் அரசனிடம் சென்று என்னவாயிற்று உங்கள் முகம் ஏன் வாடியிருக்கிறது என்றார். மன்னன் சமணர்களின் வருகையைத் தெரிவித்து தாம் கூறிய பதிலையும் சொன்னார். பதறிய அரசியார் சமணர்களுக்கும், சைவர்களுக்கும் வாதம் வைப்போம். அதில் வெற்றி பெறுபவர்கள் பக்கம் சேர்ந்துகொள்ளலாம் என்று ஆலோசனை செய்தார்.

எனினும் சமணர்களின் சூழ்ச்சியை நினைத்து அஞ்சிய அரசி சம்பந்தரருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் உயிரையும் துறக்கலாம் என்று நினைத் தார். அச்சமயம் சமணர்கள் தந்திரத்தால் மடத்துக்கு தீ வைத்து மகிழ்ந்தனர். அதைக் கண்டு தொண்டர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார் கள். சமணர்களின் சூழ்ச்சி என்று அறிந்த சம்பந்தரருக்கு அரசன் மீது தான் வருத்தம் அதிகமாகியது. எனக்காக வைத்த தீயாயிற்றே தொண்டர்கள் அல்லவா பாதிப்படைந்திருப்பார்கள் என்று பதறினார். எனவே மனம் வருந்தியபடி எம்பெருமானை நினைத்து ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் சமணர் இட்ட தீயானது பாண்டிய மன்னனைச் சேரட்டும் என்றே பாடினார். சம்பந்தரரின் வாக்கு உண்மையானது.

மன்னன் உடல் தணலில் இட்ட புழுவாய் துடித்தது. தீயின் தீவிரம் அதிகமாக அதிகமாக மன்னனின் உயிர் ஊசலாடியது.செய்வதறியாமல் அரசி யாரும், குலச்சிறையாரும் திகைத்தார்கள். சமணர்கள் ஓடிவந்து பீலி கொண்டு மந்திரம் ஓதியபடி மன்னனின் உடலை தடவினார்கள். பீலிகள் உடலின் மீதுபட்டதும் எரிந்து சாம்பலாயின.மன்னனின் உடலில் இருந்த வெப்பம் யாரையும் அருகில் அண்டவிடவில்லை. பெருகி வரும் வெப் பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சமணர்கள் மீது மன்னனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.சமணர்களை விரட்டி அடித்தார்.


அரசியாரும்,குலச்சிறையாரும் சைவ நேசனின் மீது பகைமை கொண்டு தீ வைத்ததால் தான் உங்கள் உடலும் தீயில் எரிகிறது என்றார்கள். மன் னன் கண்ணீர் மல்க உங்கள் சைவநேசனை சம்பந்தரரை வந்து இந்நோயை தீர்க்க சொல்லுங்கள். அப்போதுதான் நான் சைவம் பக்கம் துணை நிற் பேன் என்றார்.அரசனும், குலச்சிறையாரும் உடனடியாக சம்பந்தரரைக் காண மடத்துக்கு சென்றார்கள். அங்கிருந்த அடியார்களிடம் சம்பந்தரரைக் காண வந்திருப்பதாக அனுமதி கோரினார்கள். சிவஞான வடிவமாய் அமர்ந்திருந்த சம்பந்தரைக் கண்டதும் இருவரும் பணிந்து வணங்கினார்கள். அவர்களுக்கு அருள் வழங்கியவர் என்ன தீங்கு நேர்ந்தது என்றார்.

சமணர்கள் செய்த கொடுமையால் அரசனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறி அதிலிருந்து விடுதலைக் கொடுக்கும்படி கோரினார்கள். அஞ்ச வேண் டாம் யாமே அத்துயரை நீக்குகிறோம் என்று மடத்திலிருந்து அரண்மனைக்கு வந்தார். வழியில் சிவனை தரிசித்து வாது செய்வது உமது திருவுள் ளமே என்னும் பதிகம் பாடி மீண்டும் அரண்மனையை அடைந்தார்.

அமைச்சர் அரசனிடம் சென்று சைவ நேசர் வந்திருப்பதைப் பற்றி கூறினார்கள். மனம் மகிழ்ந்த அரசர் அவரை உடனடியாக வரசொல்லி ஆணைப் பிறப்பித்தார். ஆனால் சைவர்கள் அரசனின் நோயை தீர்க்க வருவதைக் கண்ட சமணர்கள் முன்னதாக அரசனை சந்தித்தார்கள். சமண மதம் காக் கும் தாங்கள் அவர்களை அரண்மனைக்குள் அனுமதிக்கலாமா என்று வேந்தனிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் மீது வெறுப்பில் இருந்த அரசன் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான்.

சமணர்கள் மேலும் உங்கள் வெப்பு நோயைத் தீர்த்து வைப்பது யார் என்று சைவர்களுக்கும், சமணர்களுக்கும் போட்டி நடத்துங்கள். அவர்களது பயனால் தாங்கள் குணமடைந்தாலும் குணமடையக் காரணம் நானே என்று சொல்லுங்கள் என்று சூசகமாக பேசினார்கள். அதற்கு மன்னன் செவிசாய்த்தானா இல்லையா நாளை பார்க்கலாம்….

newstm.in


newstm.in

Next Story
Share it