திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -7

அங்கிருந்தவர்கள் இந்த வாதத்திலும் சமணர்கள் தோற்றால் என்ன செய்யலாம் வேந்தே என்றார் கள். உடனடியாக சமணர்கள் இம்முறை நாங் கள் தோற்று விட்டால் எங்களைக் கழுவில் ஏற் றலாம் என்றார்கள் உரக்க. அவர்களது பகைமை யும் வஞ்சமும் நன்றாக அறிந்திருந்த பாண்டிய மன்னனுக்கு நிச்சயமாக வெற்றிப்பெறபோவது...

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -7
X

வஞ்சத்தை மனம் முழுக்க நிரப்பியவர்கள் ஆயிற்றே. விடுவார்களா சமணர்கள். மீண்டும் மன்னனிடம் முறையிட்டார்கள். மக்கள் முன்னிலை யில் உங்கள் ஏடுகள் எரிந்து நாசமாகி போனதைk கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதோடு உங்கள் சமயமும் தோற்றுவிட்டது. இனியும் என்ன கதை சொல்ல போகிறீர்கள் என்று கேட்டான் பாண்டிய மன்னன்.

இல்லை மன்னா எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார்கள் சமணர்கள். ஆனால் உங்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்று பாண்டிய மன்னன் சொல்லும்போது இடையில் சம்பந்தர் அடுத்த வாதம் என்னவோ? என்றார். அவரவர் கொள்கைகளை ஏட்டில் எழுதி நீரில் விட வேண்டும். யாருடைய ஏடு நீரை எதிர்த்து செல்கிறதோ அவர்களது சமயமே உயர்ந்தது ஆகும் என்றார்கள்.

அங்கிருந்தவர்கள் இந்த வாதத்திலும் சமணர்கள் தோற்றால் என்ன செய்யலாம் வேந்தே என்றார்கள். உடனடியாக சமணர்கள் இம்முறை நாங் கள் தோற்று விட்டால் எங்களைக் கழுவில் ஏற்றலாம் என்றார்கள் உரக்க. அவர்களது பகைமையும் வஞ்சமும் நன்றாக அறிந்திருந்த பாண்டிய மன்னனுக்கு நிச்சயமாக வெற்றிப்பெறபோவது சம்பந்தரரே என்று தோன்றியது. அதனால் வாததுக்கு சம்மதம் தெரிவித்ததோடு அனைவரையும் வைகை ஆற்றுக்கு செல்லுமாறு கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் முத்து சிவிகையில் ஏறி ஆற்றுக்குப் புறப்பட்டார். மன்னன்பரிவாரங்களோடு கிளம்ப அவர் பின்னே அமைச்சரும் அரசியாரும் சேனைகளோடு வைகை ஆற்றுக்கு வந்தார்கள். மக்களும் ஆற்று வெள்ளம் போல் வைகை ஆற்றின் பக்கம் குழுமியிருந்தார்கள். ஆற்றின் கரை ஓரத்தில் அரசனும், அரசியும் இருக்க, அவர்களுக்கு அருகிலேயே ஞான சம்பந்தரும் அமர்ந்திருந்தார். வெண்ணீறு தரித்த அடியார்களும் காத்தி ருந்தார்கள்.

புனல்வாதம் தொடங்கட்டும். உங்கள் ஏடுகளை நீரில் விடுங்கள் என்று சமணர்களிடம் கட்டளையிட்டான் மன்னன். சமணர்கள் தமது கொள்கை கள் அடங்கிய அவர்களது மூலமந்திரமான அத்திநாத்தி (அத்தி என்றால் உள்ளது உண்டு என்றும் நாத்தி என்றால் இல்லாதது இல்லை என்றும் பொருள்படும்) என்னும் ஏட்டை வைகையில் வீசி எறிந்தார்கள். ஏடு நீரோடு பின்னிப்பிணைந்து சுழன்று ஓடியது. அதை எதிர்பார்க்காத சமணர்கள் திகைத்து நின்றார்கள்.

ஞானசம்பந்தரை அன்புடன் நோக்கிய மன்னன் தங்களது முறை இப்போது. தாங்கள் ஏடு விடும் பணியைத் தொடங்கலாம் என்றான். அந்தணர் வா வர் ஆனினம் எனும் கெளசிகப் பண்ணில் அமைந்த 12 திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாசுரத்தை ஏட்டில் எழுதி வைகையில் மிதக்க விட்டார். ஆனால் ஏடு மழைக்காலத்தில் பெருகி வரும் வைகையில் விடப்பட்டும் வெள்ளப்பெருக்கினூடே செல்லாமல் எதிர்நோக்கி சென்றது. வெள்ளத்தை எதிர்த்து சென்ற ஏட்டை அனைவரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சைவ சமயமே மெய் சமயம் என்பதைச் சுற்றியிருந்தவர்கள் மட்டுமல்ல வஞ்சத்தில் இருந்த சமணர்களுக்கும் உணர்த்தியது. பாண்டிய மன்ன னும் ஆர்வம் மேலிட ஆற்றில் எதிர்த்து நிற்கும் ஏட்டை எட்டிப்பார்த்தான். அப்போது அவனுடைய வளைந்த கூன் நிமிர்ந்தது. கூன் போல் இருந்த சைவ சமயமும் நிமிர்ந்து நின்றதை உணர்த்தியது. மாறாக சமண சமயம் கூன் போல் வளைந்து போனது.

குலச்சிறையார் ஆற்றில் அடித்து சென்ற ஏட்டை எடுத்து வர குதிரை மீதேறி ஆற்றின் கரை ஓரம் சென்றார். வெள்ளத்தில் ஓடம் போல் செல்லும் ஏடு கரைக்கு வரும் வண்ணம், வன்னியும் மந்தமும் எனத் தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடத்தொடங்கியதும், ஏடு திருவேடகம் என்னும் தலத்தில் எம்பெருமான் இருக்கும் இடத்தை அடைந்தது. அந்த ஏட்டை வணங்கி கொண்டு வந்து சம்பந்தர் இருக்கும் இடத்துக்கு வந்து ஏட்டை சமர்பித்து வணங்கினார் குலச்சிறையார்.சுற்றியிருந்தவர்கள் சிவநாமத்தை சொல்லி சொல்லி இன்புற்றார்கள்.

சமணர்கள் கூற்றுப்படிஅவர்கள் அனைவரும் கழுவிலேற்றப்பட்டார்கள். மன்னன் சைவ சமயத்துக்கு பணிந்தான். தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினான்.எம்பெருமானை நினைக்க தவறிய தன் நிலையை அறிந்து வெட்கினான். கலங்கினான். சம்பந்தரை வணங்கி அவரிடம் விபூதி வாங்கி இன்புற்றான். அரசியாரும், குலச்சிறையாரும் மன்னனின் மன மாற்றத்தால் மகிழ்ந்தார்கள். கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாற நாய னார் என்னும் சிறப்பு பெயரைப் பெற்றார். மன்னனின் விருப்பத்துக்கிணங்க திருஞான சம்பந்த மூர்த்தியார் அங்கேயே தங்கியிருந்து எம்பெரு மானை நினைத்து பதிகங்கள் பாடினார்.

சிவபாதவிருதயர் தன் மகனை காண சீர்காழியிலிருந்து புறப்பட்டு மதுரை வந்தார். தந்தையைக் கண்டு ஆரத்தழுவி மகிழ்வுற்ற சம்பந்தர் தோணி யப்பரைக் குறித்து பதிகம் பாடினார். சிலகாலம் புதல்வனுடன் தங்கியிருந்த சிவபாதவிருதயர் மீண்டும் அனைவரிடமும் விடைபெற்று சீர்காழி திரும்பினார். அதன்பிறகு பாண்டிய மன்னன், அரசி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறையாருடன் பாண்டிய நாட்டில் உள்ள சிவத்தலங்க ளைத் தரிசித்து பதிகம் பாடி மகிழ்ந்த சம்பந்தர் சோழ நாட்டுக்கு சென்றார்.

வழியில் இருக்கும் எம்பெருமானைத் தரிசித்தபடி சென்றார். முள்ளிவாய் ஆற்றங்கரையின் எதிரில் உள்ள திருக்கொள்ளம் புதூர் இறைவனை தரிசிக்க விரும்பினார். ஆற்றில் மிகுந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடவே ஓடக்காரர்கள் ஆற்றில் ஓடம் செலுத்த தயங்கினார்கள். ஓடத்தில் அமர்ந்த ஞானசம்பந்தர் ஓடத்தின் கயிறை அவிழுக்கும்படி அவர்களிடம் பணித்தார். ஒடம் வைத்திருந்தவர்கள் என்ன செய்தார்கள்…

newstm.in

newstm.in

Next Story
Share it