Logo

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -4

மடத்தில் ஒவ்வொரு நாளும் தாமதமாகவே அமுது தயாரிக்கப்பட்டது. இதற்கு என்ன கார ணம் என்று கேட்டார் ஞான சம்பந்தர். நாம் கொடுக்கும் பொற்காசு தரமானதல்ல என்பதால் வேண்டிய பொருள்கள் கிடைக்க தாமதமாகிறது. அப்படியானால் அப்பரடிகளுக்கு மட்டும் உரிய நேரத்தில் ...
 | 

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -4

திருஞான  சம்பந்தர்  அப்பரடிகளிடம் தாங்கள் முன் சென்று எழுந்தருளுங்கள் தங்கள் விருப்பப்படி முத்துப்பல்லக்கில் பவனி வருகிறேன் என் றார். சொன்னது போல் இருவரும் சிவத்தலங்களைத் தரிசித்த வண்ணம் இருந்தார்கள்.இறுதியாக திருக்கடவூர், திருவம்பர் தரிசித்து திருவீழி மழலையை அடைந்தார்கள்.

ஞானசம்பந்தர் வீழிமழலை பெருமானைத் துதித்து சடையார் புனலுடையார் என்னும் பதிகத்தை உருகிப்பாடினார். அனுதினமும் எம்பெரு மானை அழகு தமிழ்மாலைகளால் பாடி மகிழ்ந்தார்கள். ஊர்மக்களும் சந்தோஷ மிகுதியில் இருசிவநேசர்களையும் வணங்கி மகிழ்ந்தார்கள். அச் சமயம் சீர்காழி அந்தணர்கள் திருத்தோணியப்பரைத் தரிசிக்க வரும்படி இவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் ஞானசம்பந்தர் வீழி மழலை இறைவன் அனுமதித்தால் மட்டுமே வரமுடியும் என்றார்.

அன்றிரவே எம்பெருமான் இவரது கனவில் காட்சி தந்து இங்கே தோணியப்பர் திருக்கோலத்தைக் காட்டி அருளுகிறோம் என்றார். மறுநாள் அப்பர டிகளோடு வீழிமழலை பெருமானைத் தரிசிக்க சென்ற ஞான சம்பந்தருக்கு இறைவன் திருத்தோணியப்பராக காட்சி அளித்தார். கைம்மரு பூங்கு ழல் என்னும் பதிகம் பாடி மகிழ்ந்த ஞான சம்பந்தராரிடம் விடைபெற்று சென்றார்கள் சீர்காழி அந்தணர்கள்.

சிவநேசர்கள் இருவரும் வீழிமழலைப் பெருமானைத்  தரிசிக்க அங்கேயே தங்கியிருந்தார்கள். அனுதினமும் பெருமானைத் தரிசித்து பாடி மகிழ்ந் தார்கள். அப்போது மழையின்மையால் அவ்வூர் மக்கள் பஞ்சத்தில் திளைத்தார்கள். அவர்களது கனவில் காட்சிதந்த எம்பெருமான் மக்கள் யாரும் துன்புற மாட்டார்கள்.திருக்கோயில் நாள்தோறும் கிழக்கு பீடத்திலும் மேற்கு பீடத்திலும் பொற்காசுகள் வைக்கப்படும். அதைக் கொண்டு அடியார் களின் வயிற்றுப்பசியைத் தீர்த்து வைப்பீர்களாம் என்றார்.

மறுநாள் பீடத்தில் இருந்த பொற்காசுகளை அப்பரடிகளும் ஞானசம்பந்த மூர்த்தியும் எடுத்து அடியார்களுக்கு உதவி வந்தார்கள். அப்பரடிகளது மடத்தில் தொண்டர்களுக்கு உரிய நேரத்தில் அமுது வழங்கப்பட்டது. ஞான சம்பந்தரரது மடத்தில் ஒவ்வொரு நாளும் தாமதமாகவே அமுது தயாரிக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டார் ஞான சம்பந்தர். நாம் கொடுக்கும் பொற்காசு தரமானதல்ல என்பதால் வேண்டிய பொருள்கள் கிடைக்க தாமதமாகிறது. அப்படியானால் அப்பரடிகளுக்கு மட்டும் உரிய நேரத்தில் கிடைக்கிறதே என்றார் ஞான சம்பந்தர். அடியார் கள் அப்பரடிகள் பொற்காசுகள் தரமானவை என்று வணிகர்கள் கூறுவதாக பதிலுறுத்தார்கள்.

ஞான சம்பந்தர் எம்பெருமானிடம் நல்ல காசு வேண்டும் என்று வேண்டி நிற்க எம்பெருமானும் அவர் வேண்டுதலுக்கு செவி சாய்த்தார். அதன் பிறகு எம்பெருமானின் கருணையினால் வருண பகவானும் மழையைக் கொடுக்கவே ஊரில் பஞ்சம் நீங்கியது. பிறகு இருவரும்  சிவத்தலங்க ளைக் காண புறப்பட்டார்கள். வேதாரண்யத்துக்கு வந்த அவர்கள் திருக்கோயில் கோபுர தரிசனத்தை முடித்து கோயில் வெளி முற்றத்தைக் கடந்து வாயிலை அடைந்தார்கள்.

அங்கு திருவாயில் தாழிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வேறொரு வாயில் வழியே கோயில் உள்ளே சென்று வருவதைக் கண்டார் கள். காரணம் என்னவோ என்று சம்பந்தர் வினவ அவ்வூர் அடியார்கள் இறைவனை வழிபட்ட அருமறைகள் வாயிலை அடைத்துவிட்டன என்று வருந்தினார்கள் அடியார்கள். சம்பந்தர், அப்பரிடம் இத்திருவாயில் திறக்கும்படி ஒரு பதிகத்தைப் பாடுவீர்களாக என்றார். அப்பரும் மகிழ்வோடு தனது பதினொரு பாட்டுகளால் கதவின் தாழைத் திறக்க செய்தார். சுற்றியிருந்தவர்கள் ஆனந்தக்கண்ணீரோடு தரையில் ஊன்றி விழுந்து எம் பெருமானை வேண்டி துதித்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்களோடு மகிழ்ந்த இரு சிவநேசர்களும் பதிகங்கள் பாடி எம்பெருமானை குளிர்வித்தார் கள்.

தரிசனம் முடிந்து வெளியேறும் போது அப்பர், சம்பந்தரிடம் கதவை அடைக்கும் பொருட்டு பதிகம் பாட வேண்டினார். சதுரம் என்று தொடங்கும் பதிகத்தைப்  பாடியதும் கதவுகள் காப்பு நிரம்பின. கதவை திறக்கவும், மூடவும் எளிதாக மாறியது. அடியார்கள் அவ்வழியில் சிரமமின்றி இறை வனை வணங்கிவந்தார்கள். இப்படி ஒவ்வொரு தலங்களை தரிசிக்கும் போதும் பல அற்புத நிகழ்வுகளை நிகழ்த்தி வந்தார்கள் அப்பரும், சம்பந்தரும்.

அப்போது பாண்டிய நாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன்ஆண்டு வந்தான். அவன் சோழ மன்னனின் புதல்வி மங்கையர்க்கரசியை மணந் திருந்தான். அம்மன்னனிடம் பணியாற்றியவர் குலச்சிறையார் என்பவர். (இது குறித்து குலச்சிறை நாயனார் என்னும் நாயன்மாரை பற்றிய கட்டு ரையில் விரிவாக கண்டிருக்கிறோம்). சமண சமயம் பரவிய வேளையில் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயத்தைப் பாது காக்க தங்களால் இயன்ற பணிகளைச் செவ்வனே செய்துவந்தார்கள். அப்போது திருமறைக்காட்டில் இருசிவநேசர்கள் தங்கியிருந்த செய்தி கிடை த்ததும் சைவம் தழைக்க அவர்களது உதவியை நாடினார்கள் அரசியும் குலச்சிறையாரும்.

சமண மதத்தின் மீது மையல் கொண்டு அரசனும் மாறிவரும் இவ்வேளையில் நாம் அங்கு செல்வது உசிதமல்ல என்றார் அப்பர். ஆனால் சம்பந் தர் நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? எம்பெருமானின் துணையோடு  அவனுக்கு செய்யும் திருத்தொண்டில் ஆபத்து எங்கனம் நேரும். அதனால் தாங்கள் இங்கிருந்து தொண்டு புரியுங்கள். நான் சென்று வருகிறேன் என்றார். எப்போதும் எம்பெருமானின் நினைவில் மூழ்கிய சம்பந் தர் பதிகம் பாடியபடி பாண்டிய நகருக்குள் நுழைந்தார்.அவர் வருகையைக் கேட்டு அரசிக்கும், குலச்சிறையாருக்கும் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. அமைச்சரான குலச்சிறையாரை அனுப்பி சம்பந்தரை வரவேற்க ஏற்பாடு செய்தார் அரசியார். குலச்சிறையார் சம்பந்தரரைக் கண்டு மயங்கி நின்றார்..
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP