சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை

வ- என்பது இன்பம் தரும் போகத்தையும் ண- என்பது வெற்றி தரும் சத்ரு ஜெயத்தையும், ப- என்பது முக்தி தரும் ம்ருத்யு ஜெபத்தையும்,வ- என்பது நோயற்ற வாழவும் இருக்க உதவுகி றது. அதனால் இயலும் போதெல்லாம்...

சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை
X

தகப்பனுக்கே பாடம் சொன்ன சாமியா முருகனை.. சுப்ரமணியனை.. வணங்கினால் கிடைக்கும் பேறு அளவிடமுடியாதது. ஆறுமுகம் கொண்ட ஷண்முகனை திருச்செந்தூர் புராணத்தில் அழகாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம்:
மனிதர்களிடம் இருக்கும் ஆறு தீய குணங்களைப் போக்குபவன் என்று சொல்கிறார்கள். காமம், குரோதம்,லோபம்,மதம்,மாத்சர்யம், மோகம் போன்றவையே அவை.

ஷட்விகாரம்:
இருத்தல், உண்டாக்குதல், அழித்தல், வளர்த்தல், குறைதல், மாற்றமடைதல் என ஆறுசெயல்களை அற்றவன் என்று பொருள்படும்.

ஷட்கோசம்:
அன்னமய, பிராணமய,மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்று ஆறு நிலைகளிலும் இருப்பவன் ஆறுமுகன் என்று சொல்வார் கள்.

ஷட்ரசம்:
ஆறுவகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை உள்ளடக்கியவன் சுப்ரமணியன்.

ஷட்ஸூத்ரம்:
ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்று ஆறு சாஸ்திரங்களாக இருப்பவன் இவன்.

ஷண்மதம்:
காணாபத்யம், கெளமாரம், சைவம், சாக்தம், வைணவம், செளரம் என்று ஆறு மத தத்துவமாக இருப்பவன் ஷ்ணமுகன்.

ஷட்வேதாங்கம்:
சிக்ஷு, கல்பம்,வ்யாகரணம்,நிருக்தம்,ஜ்யோதிஷம், சந்தம் என்று ஆறுவேதங்களின் அங்கங்களாக இருப்பவன்.

ஷண்முகம்:
ஈசானம், தத்புருஷம், வாமதேவம்,அகோரம், ஸத்யோஜாதம் என்று சர்வேஸ்வரனின் ஐந்து முகங்களையும் அதோ முகத்தையும் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்.

இப்படி ஒவ்வொன்றிலும் ஆறு விதமான அருளைக் கொண்டிருப்பவன் எம்பெருமானாகிய திருமுருகன். முருகப்பெருமானே பஞ்ச பட்சி சாஸ்தி ரங்களுக்கு தலைவனாகவும், மூலவனாகவும் இருக்கிறான். திருமுருகன் அன்றி பஞ்ச பட்சிகள் கைகூடாது.இத்தகைய சிறப்பு மிக்க முருகனை வணங்க ஸரவணபவ என்னும் ஆறெழுத்து போதும் என்கிறார் வள்ளலார்.

ஸ- என்பது செல்வம் தரும் லஷ்மி கடாட்சத்தையும், ர- என்பது கல்வி தரும் ஸரஸ்வதி தேவியையும், வ- என்பது இன்பம் தரும் போகத்தையும் ண- என்பது வெற்றி தரும் சத்ரு ஜெயத்தையும், ப- என்பது முக்தி தரும் ம்ருத்யு ஜெபத்தையும்,வ- என்பது நோயற்ற வாழவும் இருக்க உதவுகி றது. அதனால் இயலும் போதெல்லாம் ஸரவணபவ என்னும் மந்திரத்தைச் சொன்னால் மேற்கண்ட அனைத்து பேறுகளும் கிட்டும்.

ஆறுமுகனை வணங்கினால் சிவனையும் சக்தியையும் சேர்ந்து வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் தான்சுக்குக்கு மிஞ்சிய மருத்துவமும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்கிறார்கள் பெரியவர்கள்.

newstm.in

newstm.in

Next Story
Share it