Logo

திருக்குறிப்புத் தொண்டர்

இத்தகைய துரோகத்தை அடியாருக்கு செய்த நான் இனியும் இப்பூமியில் வாழத்தகுமா என்று நீர்த்துறையில் ஆடை தோய்க்கும் கல்லில் தன் தலையை இடித்துக்கொள்ள சென்றார். அது வரையிலும் பொறுமை காத்த எம்பெருமானின் திருவுளம் அதற்கு மேல் அவரை சோதிக்க விரும்பவில்லை...
 | 

திருக்குறிப்புத் தொண்டர்

சிவனின் மீது அன்பையும், பக்தியையும் கொண்டிருப்பவர்கள் சிவனடியார்கள் மீதும் அதே பக்தியைத் தவறாமல் கொண்டிருந்தார்கள். சிவனடி யார்களுக்குத் தொண்டு செய்து மகிழ்ந்த நாயன்மார்கள் மத்தியில் குறிப்பறிந்து தொண்டு செய்யும் நாயனார் ஒருவர் இருந்தார்.

காஞ்சி மாநகரில் ஏகாலியர் மரபில் தோன்றிய  இவர் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். குறிப்பறிந்து சிவனடியார்களுக்கு இவர் திருத்தொண்டு செய்து வந்ததாலேயே இப்பெயர் பெற்றார். சிவனடியார்களின் ஆடைகளில் இருக்கும் மாசுக்களை நீக்கி புனிதமாக்கி தருவதன் மூலம் தமது பிறப்பும் தூய்மையாகி இறைவனை அடைய முடியும் என்று இத்தொண்டை மகிழ்ச்சியுடன் செய்துவந்தார்.

திருக்குறிப்புத் தொண்டரின் சிறப்பை உலகெங்கும்  தெரிவிக்க திருவுளம் கொண்டார் எம்பெருமான். ஒருநாள் கந்தலான ஆடையுடன் வயோதிக தோற்றம் கொண்டு திருநீறு பூசி திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்துக்கு வந்தார். குளிர்காலம் என்பதால் குளிரில் நடுங்கியபடி வந்தார்.  அவரை இன்முகத்துடன் வரவேற்ற திருக்குறிப்புத் தொண்டரின் கண்களின் அடியாரின் கந்தல் துணியும் அதை மீறி தெரிந்த மெலிந்த உடலும் மனதை வருத்தியது.

அடியாரே தங்கள் உடல் இவ்வளவு மெலிந்திருக்க காரணம் என்னவோ என்று கேட்டார். பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் அமைதி காத் தார் அடியாராக வந்த எம்பெருமான்.தாங்கள் எமது இல்லத்துக்கு வந்தது அடியேன் செய்த பாக்கியம் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும். தாங்கள் எனக்கு மேலும் புண்ணியம் தரும் வகையில் தங்கள் ஆடையைத்  தூய்மைபடுத்தும் பணியை தந்தருள வேண்டும். இந்த அடியேன் தங் கள் மேனியில் இருக்கும் திருநீறு போல் தங்கள் ஆடையை தூய்மை செய்து தருகிறேன் என்றார்.

அதிர்ச்சி அடைந்த அடியார் இந்தக் குளிரில் கந்தலை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் எப்படி இருக்க முடியும் என்றார். அடியாரே அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லாதீர்கள். நான் உங்களை வாடவிடாமல் விரைவில் தூய்மைப்படுத்தி தருகிறேன் என்றார். சிறிது நேரம் யோசித்த அடி யார் கந்தலை கொடுத்தார். மகிழ்வுடன் வாங்கிசென்ற திருக்குறிப்புத் தொண்டர்  நீர்த்துறை நோக்கி புறப்பட்டார்.

எம்பெருமான் அடுத்த விளையாடலைத் தொடங்கினார். வருணணை பூமிக்கு வரவழைத்தார். வருணனின் வருகையால் பூமி இருள் சூழ்ந்தது. மழை பயங்கரமாக  பெய்தது. கந்தலை தூய்மை செய்த திருக்குறிப்புதொண்டர் மழை நின்றுவிடும் என்றார். வருணனோ திரும்பி செல்லாமல் பூமியிலேயே தங்கிவிட்டான். நடுங்கினார் திருக்குறிப்பு தொண்டர்.  குளிராலோ  மழையாலோ நடுங்கவில்லை. அடியாரின் ஆடையை காய வைக்க முடியவில்லையே என்ற எண்ணமே அவரை நடுங்க வைத்தது.

ஐயன் குளிரில் நடுங்குவாரே அவருக்கு என்ன பதில் உரைப்பேன். முதுமையால் அவதிப்படுபவருக்கு மேலும்  கொடுமையைச் செய்து விட் டேனே  எம்பெருமானே...இத்தகைய துரோகத்தை அடியாருக்கு செய்த நான் இனியும் இப்பூமியில் வாழத்தகுமா என்று நீர்த்துறையில் ஆடை தோய்க்கும் கல்லில் தன் தலையை இடித்துக்கொள்ள சென்றார். அதுவரையிலும் பொறுமை காத்த எம்பெருமானின் திருவுளம் அதற்கு மேல் அவரை சோதிக்க விரும்பவில்லை.

கல்லிலிருந்து எம்பெருமானின் கை திருக்குறிப்புத் தொண்டரின் தலையைத் தாங்கியது. திகைத்து நோக்கினார். வானத்தில் ஒளி சூழ எம்பெரு மான் துணைவியாருடன் காட்சி அளித்தார். திருக்குறிப்பு தொண்டரின் கீழே விழுந்து எண் சாண்கிடையாய் விழுந்து பணித்தார்.திருக்குறிப்புத் தொண்டர் வாழும் வரை திருத்தொண்டுகள் செய்து இறைவனுடன் கயிலாயத்தில் ஐக்கியமானார்.

சிவாலயங்களில் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது. 

newstm

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP