Logo

அதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்

தர்மம் மீறி அதர்மம் செய்பவர்களின் கரங்கள் ஓங்கியிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. அந்தக் கரங்கள் ஒடுங்கும் போது அகல பாதாளத் தில் எழுந்திருக்கவே முடியாமல் விழுந்திருப்போம். துரியோதனனுக்கு மட்டுமல்ல தர்மத்தை மீறும் மனிதர்களுக்கும் இத்தகைய நிலைமை வந்தே தீரும்.
 | 

அதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் மீறப்பட்டு அதர்மம் தலைதூக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை செய்து மனசாட்சியை மீறு பவர்கள்  அழிந்துவிடுவார்கள்.மகாபாரதத்தில் கிருஷ்ணனே இதைக் கூறியிருக்கிறார்.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் தங்கள் தண்டனைக்காலம் 12 வருடங்கள் முடிவடைந்ததும் தங்களுடைய நாட்டை  திரும்ப பெற விரும்பினார்கள்.ஆனால் துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு இடத்தைக் கூட தரமுடியாது என்று உறுதியாக மறுத்து சஞ்சயன் மூலமாக தூதனுப்பினான். அதனால் பாண்டவர்கள் கிருஷ்ணனைத் தூதுவனாக அனுப்ப விரும்பினார்கள்.

கிருஷ்ணனை வரவழைத்து சஞ்சயன் கூறியதையும், திருதராஷ்டிரன் தன்னுடைய மகன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினால் அவரும் விட்டுகொடுக்க சொல்கிறார். எங்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஐந்து ஊர்களையாவது கொடுங்கள் என்று கேட்டு தூது செல்லுங்கள் என்றார்கள். கிருஷ்ணன் தூது செல்வதை அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து ஒப்புவித்தார்கள்.

முக்காலமும் உணர்ந்த கிருஷ்ணனுக்கு நடப்பவை அனைத்தும் தெரியும் என்றாலும் பாண்டவர்களின் வார்த்தைகளுக்காக தூது செல்ல சம்மதித் தார்.கிருஷ்ணன், சாத்யகியை அழைத்துக்கொண்டு தேரில் ஏறி அஸ்தினாபுரம் சென்றார். துரியோதனனும் திருதராஷ்டிரனும் கிருஷ்ணனை வர வேற்க விழாவை ஏற்பாடு செய்தார்கள்.ஆனால் கிருஷ்ணன் நேராக திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்தார். 

கிருஷ்ணரைக் கண்டதும் பீஷ்மர், துரோணர் அனைவரும் மரியாதை செய்தார்கள்.அவர்களுடன் உரையாடிய பிறகு காந்தாரியைச் சந்திக்கச் சென்ற கிருஷ்ணர் அவளிடமும் நலம் விசாரித்து துரியோதனனைக் காண சென்றார். துரியோதனன், கிருஷ்ணனை உணவருந்த அழைத்தான். ஆனால்  கிருஷ்ணன் மறுத்து தூதுவனாக வந்திருக்கும் நான் அவர்கள் சார்பில் கேட்பதைப் பெற்ற பிறகு தான் விருந்தை ஏற்கமுடியும் என்று சொல்லிவிட்டார்.

திருதராஷ்டிரனிடம்  சென்ற கிருஷ்ணன், பாண்டவர்களும் உங்கள் மக்களே. அதனால் துரியோதனனின் பிடிவாதத்தைத் தளர்த்த சொல்லுங்கள் என்றார். திருதராஷ்டிரன் வருத்தத்தோடு, கிருஷ்ணா நீ சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் எனது புத்திமதியை ஏற்கும் நிலையில் துரியோத னன் இல்லை. என்னை மன்னித்து விடு கிருஷ்ணா என்றார். கிருஷ்ணர் இறுதியாக துரியோதனனை அணுகினார். துரியோதனைச் சுற்றி இருந் தவர்களும் அவனுக்கு புத்தி உரைத்தனர். ஆனால் எதையும் கேட்க துரியோதனன் தயாராக இல்லை.

அதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்

மாறாக கோபத்துடன் கிருஷ்ணா, பாண்டவர்கள் என் மாமாவிடம் தோற்றுப்போனது அவர்களது தவறு. அவர்கள் சூதாட்டத்தில் வென்றிருந்தா லும் நாங்கள் கட்டுப்பட்டிருப்போம். அதனால் அவர்களுக்கு ஊசி அளவு இடமும் கொடுக்க இயலாது. மீறி செயல்பட்டால் எங்கள் வீரர்கள் இருக்கிறார்கள், தக்க பதிலடி தருவோம் என்றான்.

கோபம் கொண்ட கிருஷ்ணன், துரியோதனனை எச்சரித்தார்.வார்த்தைகளை அதிகம் பிரயோகிக்கிறாய் துரியோதனா இது நல்லதல்ல. அதர் மத்தை கையில் எடுக்கும் எவருக்கும் இந்த பூமியில் இடம் கிடையாது என்றார். கிருஷ்ணரின் வார்த்தையைக் கேட்ட துரியோதனன் கிருஷ்ண ரையே கட்டிப்போட ஆட்களை ஏவினான். இதனால் கிருஷ்ணர் விஸ்வரூபமெடுக்க அந்த ஒளியால் சூழ இருந்தவர்கள் கண்களைப் பொத்திக் கொண்டார்கள். திருதராஷ்டிரரும் அந்த ஒளியினால் இழந்த கண்களைப் பேற்றார். ஆனால் மகனது கொடூர செயலால் பார்வை விரும்பவில்லை என்று கிருஷ்ணரிடம் வேண்டி பார்வையை மீண்டும் இழந்தார். 

தர்மம் மீறி அதர்மம் செய்பவர்களின் கரங்கள் ஓங்கியிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. அந்தக் கரங்கள் ஒடுங்கும் போது அகல பாதாளத் தில்  எழுந்திருக்கவே முடியாமல் விழுந்திருப்போம். துரியோதனனுக்கு மட்டுமல்ல தர்மத்தை மீறும் மனிதர்களுக்கும் இத்தகைய நிலைமை வந்தே தீரும். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP