களை கட்டும் மாசிமகத் திருவிழா!! ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை!

தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். இந்த கோயிலின் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே உயரமான பிரமாண்ட குதிரை சிலை, நம் மண்ணையும் குலத்தையும் காத்த அய்யனாரின் வாகனமாக திகழ்கிறது.

X

சுற்றுவட்டார கிராம மக்கள் மாசி மகத்திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப் பூ வில் மாலை செய்து அணிவித்து சிறப்பு செய்து வருகின்றனர். காலங்காலமாக நடக்கும் இந்த நிகழ்வில் பக்தர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடும் பெரிய திருவிழா இது. அதிலும் குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே அதிகமான மக்கள் கூடுகிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

களை கட்டும் மாசிமகத் திருவிழா!! ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை!

இந்த ஆண்டு மாசி மகத் திருவிழா மார்ச் 8ந் தேதி நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it