Logo

ஷீரடி சாய்பாபா பெயர் வந்த ரகசியம்! பாகம்.2

"யா, சாய்" என்று உற்சாகம் பொங்க வார்த்தைகளை அள்ளித்தெளித்து அவரை வரவேற்றார் சபதி. மராத்தி மொழியில் அப்படி இவர் அழைத்தற்கு தமிழில் , "சாமியாரே வருக" என்று அர்த்தம்.
 | 

ஷீரடி சாய்பாபா பெயர் வந்த ரகசியம்!  பாகம்.2

ஃபக்கீர்  காலடி மீண்டும் ஷீரடியில்  திரும்ப படுவதற்கான ஒரு சந்தர்பம் பாட்டீல் இல்ல திருமணம் ஒரு காரணமாக இருந்தது. பாட்டீல் வீட்டு திருமணம் ஷீரடியில் நடந்தது. இத்திருமணம் 1858 ஆம் ஆண்டு நடந்தது. பேண்டு வாத்தியங்கள் முழங்க ஷீரடியில்  முக்கிய விதிகளில் திருமணக்குழுவினர் ஊர்வலமாக சென்றனர். ஏராளமான கூட்டம், ஊரே திரண்டிருந்து அவர்களை வேடிக்கைப் பார்த்தது.

அப்போது கோயில் பூசாரி மகள் "சபதியும்" கூட்டத்தோடு கூட்டமாக அந்த திருமணக் குழுவினரை வேடிக்கை பார்த்தார். அப்போது அவர் கண்களில் ஃபக்கீரும் தென்பட்டார்.  அவருக்கு சந்தேகம். இங்கிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனாரே அந்த பக்கீரா இவர்? மீண்டும் கண்கள் நன்கு கசக்கி விட்டு, உற்று  பார்த்தார்  ஃபக்கீரேதான். உடனே மகிழ்ச்சி மனம் முழுதும் பொங்கி வழிய அவர் அருகே போய், "யா, சாய்" என்று உற்சாகம் பொங்க வார்த்தைகளை அள்ளித்தெளித்து அவரை வரவேற்றார் சபதி. மராத்தி மொழியில் அப்படி இவர் அழைத்தற்கு தமிழில் , "சாமியாரே வருக" என்று அர்த்தம்.

ஷீரடி சாய்பாபா பெயர் வந்த ரகசியம்!  பாகம்.2

இந்த அழைப்பைக் கேட்டதும் ஃபக்கீர் திடுக்கிட்டார். புன்னகையுடன் அவர் அழைப்பை ஏற்றார்.
அதன் பிறகே , ஃபக்கீரை  அனைவரும் "சாய்" என்றே அழைக்கத்தொடங்கினார்கள் அதுவே இன்றளவும் நிலைத்து, கோடானுகோடி மக்களை, அவர் வசம் ஈர்த்து வருகிறது.

பின்பு, பாட்டீல் இல்லத் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. சந்த் பாட்டீல் தனது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் தமது ஊரை நோக்கித் திரும்பினார். சாய் பாபாவையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் ஷீரடி மக்களோ சாய் பாபாவை மீண்டும் பாட்டீலுடன் அனுப்ப அன்புடன் மறுத்தனர். சாய்பாபாவின்  தெய்வீக சக்தியை உணர்ந்த சபதி உட்பட பலரும் சாய்பாபா ஷீரடியிலே, அவர்களுடன் தங்கி இருக்க வேண்டும். என்று உறுதியாக விருப்பம் தெரிவித்தனர். இறுதியாக ஷீரடி  மக்களே வென்றனர். சாய்பாபாவை ஷீரடியில் தங்க செய்வது என்று ஓரு மனதாக முடிவு செய்தனர். 

சாய்பாபாவும் அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.  இதனால் மனம் வருந்திய பாட்டீல் அரைகுறை மனதுடனேயே சாய்பாபாவை ஷீரடியில் விட்டுவிட்டு தமது ஊரை நோக்கி சென்றார்.
சாய் பாபாவும் மீண்டும் ஊரின் வெளிபுறத்தில் இருந்த  அதே வேப்பமரத்தை நோக்கி சென்றார். அங்கேயே தன் வாசத்தை மறுபடியும் அமைத்துக்கொண்டார். கண்களை மூடி பழையபடியே தியானம் செய்ய தொடங்கினார். திடீரென காட்டு பகுதிக்குள் சென்று தனியே உளாவினார். அவ்வூர் மக்களிடம் அதிகம் பேசாமல் மௌனம் காத்தார். தனது புதிர் பொதிந்த நடவடிக்கைகளை சாய்பாபா தொடர்ந்தார்.
                                                                                                                                                                                                                           (தொடரும்)

ஷீரடி சாய்பாபா பெயர் வந்த ரகசியம்!  பாகம்.2

    வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP