பூமிக்கடியில் முளைத்த சிவலிங்கத்தில் வற்றாத நீருற்று -அதிசய தலம்...

இந்துமதத்தில் பல் வேறு அதிசயங்கள் கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒன்று சுயம்புலிங்கங்களின் மீது எப்போதும் அபிஷேகம் செய்துகொண்டிருக்கும் அற்புத நிரூற்றுகள்.

பூமிக்கடியில் முளைத்த சிவலிங்கத்தில் வற்றாத நீருற்று -அதிசய தலம்...
X

ஒவ்வொரு பிறவியிலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தான் மீண்டும் மீண்டும் மனிதனை பிறக்க வைத்து அவர்களுக்கு பிரச்னைக ளையும் உண்டுபண்ணுகின்றன என்கிறது இந்துமதம். மனிதன் செய்த இத்தகைய பாவங்களை எளிதில் போக்கக்கூடிய வலிமை மிக்க முதன்மை யான கடவுள் சிவபெருமானே.

இந்து சமயத்தில் சிவனை மும்மூர்த்திகளில் முதன்மையானவனாக குறிப்பிடுகிறார்கள். படைத்தல்,காத்தல், அழித்தல், அருளுதல், மறைத்தல் என்று ஐந்து பணிகளுக்கு அடிப்படையான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உருவாக்கிய சிவபெருமான் அண்டம் அழிந்தாலும் நிலைத்து நிற்ப வர் என்பதால் சதாசிவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானதாக வேதவியாசர் கூறுகிறார்.

இறைவனின் விருப்பப்படி ஆங்காங்கே தானாக தோன்றிய லிங்கம் சுயம்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது. பாரதத்தில் இருக்கும் பழமை மிக்க சிவாலயங்கள் பல்வேறு ஆன்மிக அதிசயங்களையும், ஆச்சர்யங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கில் இருக்கும் திரியம்பகேஸ்வரர் கோவில்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாக கொண்டு அமைந்திருக்கின்றன.ஆனால் இந்த தலத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் போன்ற கடவுளின் முகங்களைக் கொண்டு அமைந்திருப்பது காணக் கிடைக்காத தனித்துவமான சிறப்பு.

கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் கருங்கற்களால் அழகிய சிற்பஙளுடன் இக்கோயில் கட்டப்பட்டுள் ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது இங்கிருக்கும் சுயம்பு லிங்கம். மற்ற ஆலயங்களில் இருப்பது போல் அல்லாமல் தரைமட்டத்துக்கு கீழ் லிங்கம் உருவாகியிருக்கிறது.

பூமிக்கடியில் முளைத்த சிவலிங்கத்தில் வற்றாத நீருற்று -அதிசய தலம்...

இந்தக் கோவிலின் கருவறை தாழ்வாக அமைந்திருக்கிறது. அதன் மேல் இருக்கும் மண்டபத்தில் இருந்து தான் இறைவனை தரிசிக்க முடியும். இந்த லிங்கத்துக்கு ஆவுடையர் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று பள்ளமாக அமைந்திருக்கிறது. இங்கு தானாகவே ஊற்று ஒன்று உருவாகி அதிலிருந்து வழியும் நீர் இங்குள்ள மூன்று சுயம்பு லிங்கங்களை எப்போதும் அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறது. இந்த ஊற்று நீர் இன்ன இடத்திலிருந்து தான் வருகிறது என்று கண்டறிய முடியாத அளவுக்கு புதிராகவே இருக்கின்றது. நீரூற்று அபிஷேகம் எத்தனை வருடங்களாக நடந்துவருகிறது என்பதும் அறியப்படாமல் இருக்கிறது.

கெளதம ரிஷி முனிவர் தன்னுடைய தவத்தின் பயனாக இங்கு வந்து சிவனை வழிபட்ட போது தன்னுடைய ஜடாமுடியில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட்டதாகவும் அதுதான் கருவறையில் ஊற்றாக பெருகி தரைமட்டத்துக்கு கீழே இறக்கும் சுயம்புலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்து நீரூற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவரது வேண்டுகோளுக்கிணங்கவே மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சுயம்பு லிங்கமாக இங்கே அருளுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கங்கள் உருவாக ஆன்மிக ரீதியாக பல காரணங்கள் குறிப்பிட்டாலும் அறிவியல் ரீதியாக இந்த கருவறை ஊற்றின் ரகசியத்தை இன்று வரை அறியமுடியவில்லை.அறிவியலால் அறிய முடியாத ஆன்மிகத்தைக் கொண்டிருக்கும் இந்துமதத்தில் பல் வேறு அதிசயங்கள் கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒன்று சுயம்புலிங்கங்களின் மீது எப்போதும் அபிஷேகம் செய்துகொண்டிருக்கும் அற்புத நிரூற் றுகள். சிவபக்தர்கள் நிச்சயம் காணவேண்டிய அற்புத அதிசயமிக்க தலம் திரியம்பகேஸ்வரர்.

newstm.in

newstm.in

Next Story
Share it