Logo

பாயஜாபாயின் உன்னத சேவை

 | 

தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாஜி ஆவார். அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக் கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம். புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையர் அலைந்து திரிந்து கேனப் பக்கிரியைக் ( சாய்பாபா)  கண்டு பிடித்து,  அவர் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் முன்னர் இலையை விரித்து, உண்ணக்கூடிய பொருள்களையும், காய்கறிகளையும், ரொட்டி முதலியவற்றையும் அதன் மேல் வைத்து, அவரைப் பலவந்தமாக உண்பித்தார்.

பாயாஜா பாயியின் நம்பிக்கையும் சேவையும் வியக்கத்தக்கதாகும். ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளையில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும் படி சாய்பாபாவை வற்புறுத்தினார். அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும்,  இறுதி மூச்சி வரையிலும் சாய்பாபா அதனை மறக்கவில்லை. அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில் கொண்ட சாய்பாபா, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவி செய்தார்.

தாய்க்கும், மகனுக்கும் அவர்களது பக்கிரியின்  மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது.  சாய்பாபா அடிக்கடி " ஆண்டி தனமே" உண்மையான பிரபுத் தன்மையாகும். ஏனெனில், அது எப்போதும் நிலைத்து இருக்கிறது. புகழ்ப்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை" என்று கூறுவார். சில ஆண்டுகளுக்குப் பின்னால், சாய்பாபா காட்டுக்குப் போவதை விட்டு விட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். தமது உணவை மசூதியிலேயே  உட்க்கொள்ளத் தொடங்கினார். அதிலிருந்து பாயஜாபாயியின் காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப் பெற்றன.

டாக்டர். வி.ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP