எப்படி வேண்டினால் இறைவன் செவி சாய்ப்பார்...

வயலுக்கு நீர் பாய்ச்சுகிறோம். நீரை செடியின் வேரில் தான் விடுகிறோம். ஆனால் செடியின் வேர் மட்டும் நன்றாக இருந்து இதர பகுதிகள் அழிவுக்கு உள்ளாவதில்லை. அந்த நீர் செடி முழுமைக்கும் பாய் ந்து செடியை வளமாக வாழவைப்பது போல்தான் உலகில் எல்லோ ருக்காகவும் வேண்டும் போது உலகில் இருக் கும் நீயும் பயன்பெறுவாய்...

எப்படி வேண்டினால் இறைவன் செவி சாய்ப்பார்...
X

கடவுளை எப்படிப் பிராத்திக்க வேண்டும் என்று தெரியுமா? யாராவது கேட்டால் என்ன சொல்வோம். இதுஎன்ன பிரமாதம்.. எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அருள் செய், எனக்கு தொழிலில் இடையூறு நேராமல் வளர்ச்சியைக் கொடு, எனக்கு திருமணத்தடையை நீக்கி நல்ல குணாளனையோ/ குணவதியையோ அமைய செய், நான் குறையின்றி நிம்மதியாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வில் தரித்திர நிலையை உண்டாக்காமல் எப்போதும் செல்வம் தங்கும்படி அருள் செய். என்னுடைய குடும்பத்தில் சச்சரவுகளின்றி நிம்மதியாக இருக்க அருள்செய்..,. நிச்சயம் இவற்றில் ஒன்றைத்தான் நீங்கள் ஆண்டவனிடம் கேட்டு வழிபடுவீர்கள்.

எனக்கு, நான் இப்படியான வேண்டுதல்களுக்கு இறைவன் செவி கொடுத்தால் தானே உங்கள் எண்ணம் பலிக்கும். ஆனால் இறைவன் கேட்காத கேட்க விரும்பாத இத்தகைய வேண்டுதல்களை ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள். கார ணம் இது கலிகாலம். மனிதர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள். மாற்றப்பட்டுவிட்டார்கள். முன்பெல்லாம் வழிபாடுகள் தாண்டிய சிறப்பு வழிபாடுகள் பொதுநலமாக இருந்தது. பொது மக்கள் ஒன்றிணைந்து வழிபட தொடங்கியதில் உருவானதுதான் கோவில் திருவிழாக்கள், பூஜைகள், வேள்விகள் எல்லாமே.

இப்போது அவையெல்லாம் மெல்ல மெல்ல தேய்ந்து உருமாறிவிட்டது. அதனால் தான் மக்களின் வேண்டுதல்களும் பெரும் பாலும் எனக்கு, நான் என்று குறுகிவிட்டது. இதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாம். கலிகாலமாயிற்றே.மனிதர்களோடு மாண்புமிக்க அரசர்களும் சுயநலமாக சிந்திப்பதால்தான் நாட்டில் வளமை குறைந்துவருகிறது என்றார் பெரியவர் ஒருவர். அங்கிருந்த முனிவரின் காதில் இந்த பேச்சு சத்தம் விழுந்தது.

அரசரை ஏன் குற்றம் சொல்கிறார்கள் என்றுமுனிவருக்கு தெரியவில்லை.எனினும்காரணத்தைத்தெரிந்துகொள்ள முனிவர் அரண்மனைக்கு சென்றார். அவரை வரவேற்ற அரசரிடம்நீடுழிவாழ்க என்று வாழ்த்தினார்முனிவர்.அரசன் மிகவும் மகிழ்ந் தான்.அப்படியே தாங்கள் இறைவனிடம் என் நலனுக்காக வேண்டினால் நான் மேலும் மகிழ்வேன் என்றான் அரசன்.

அரசனின் ஆசைக்கேற்ப பூஜைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.முனிவர் பூஜை முடிந்ததும் உரக்க சத்தமிட்டப்படி ஆண் டவா...அகிலத்தில் உள்ள அனைவரையும் நன்றாக வாழ வை...!' என்று வேண்டினார். அரசனுக்கு மிகவும் அதிர்ச்சி. சிறிதுநேரம் கழிந்தது. பூஜைமுடிந்து அனைவரும் கிளம்பியதும் அரசன் முனிவரிடம் தனிமையில் தன் மனக் குறையை வெளியிட்டான்.

தாங்கள் பூஜை செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆனால் எனக்காக தாங்கள் பூஜை செய்ய வேண்டும் என்றுதான் சிறப்பு ஏற் பாடுகள் செய்தேன். ஆனால் தாங்கள் பூஜையில் எல்லாருக்காகவும் வேண்டினீர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு வேண்டு தல் வைக்கவில்லையே என்றான்.

முனிவருக்கு அவன் பேசியதன் அர்த்தம் புரிந்தது. இதற்காகத்தான் அவர்கள் அரசனை திட்டியிருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டார். பிறகு அரசே வயலுக்கு நீர் பாய்ச்சுகிறோம். நீரை செடியின் வேரில் தான் விடுகிறோம். ஆனால் செடியின் வேர் மட்டும் நன்றாக இருந்து இதர பகுதிகள் அழிவுக்கு உள்ளாவதில்லை. அந்த நீர் செடி முழுமைக்கும் பாய் ந்து செடியை வளமாக வாழவைப்பது போல்தான் உலகில் எல்லோருக்காகவும் வேண்டும் போது உலகில் இருக்கும் நீயும் பயன்பெறுவாய். எல்லோருக்கும் என்னும்போதே அகம்மகிழ்ந்து இறைவன் வேண்டியதை அள்ளித்தருவான் என் றார்.

உண்மைதான் என்ற அரசன் அன்று முதல் பொதுநலத்தோடு வாழ்ந்து மக்களின் அன்பை பெற்றான். சுயநலத்தை மனிதர்களே விரும்பாத போது இறைவன் எப்படி விரும்புவார்.

newstm.in

newstm.in

Next Story
Share it