மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார்...

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனை துன்பங்கள் மனிதர்களுக்கு. மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார் என்பதை உணர்ந்தே இருந்தாலும் துன்பங்களில் சிக்குண்டு கிடக்கும் போது அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்பதையும் மறந்துவிடவே செய்கிறோம்

மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார்...
X

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனை துன்பங்கள் மனிதர்களுக்கு. மீளக்கூடிய துயரங்களைத்தான் இறைவன் தருவார் என்பதை உணர்ந்தே இருந் தாலும் துன்பங்களில் சிக்குண்டு கிடக்கும் போது அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்பதையும் மறந்துவிடவே செய்கிறோம். நல்லவர்களாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு செய்பவராக இருந்தாலும் துன்பம் என்பது கர்மாக்களால் நிகழ்வதே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இறைவன் மீது நம்பிக்கையும் வைக்க வேண்டும். அதை உணர்த்தும் கதை இது.

ஓர் ஊரில் வைத்தியன் ஒருவன் இருந்தான். மிகுந்த நல்லவனான அவன் யார் வந்து என்ன கேட்டாலும் அவனால் இயன்ற உதவி எதுவாயினும் அதை மறுக்காமல் செய்வான். இறைவன் மீதும் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தான்.வைத்தியத்துக்காக காட்டிற்கு சென்று அரிய மூலிகை களைப் பறித்து வருவான். ஒருமுறை அரிய மூலிகையைத் தேடி காட்டில் நீண்ட தூரத்துக்கு சென்று விட்டிருந்தான்.வழி தெரியாமல் காட்டின் மற்றொரு மூலையை அடைந்தான். அங்கு சிறுதீவு போல் கடல் வழியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு முதல் ஒருவரையும் காண வில்லை.

சற்றுநேரம் கழித்து கட்டியிருந்த வேட்டியின் பச்சிலைச்சாறு தடவி நீண்ட கழியின் முனையில் கட்டி கழியை நட்டான். வழியில் ஏதேனும் கப்பல் வந்தால் இக்கழியைக் கண்டு இங்கு வரும் என்று நம்பினான். இரண்டு நாட்கள் தாண்டியும் எந்தவித கப்பலும் அவனை காப்பாற்றவில்லை. வயிறு பசியை அடக்க வேண்டுமே. காட்டில் இருக்கும் பழங்களை சாப்பிட்டான். விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு சிறிய வீடு ஒன்றை கழியாலும் இலைகளாலும் கொண்டு கட்டி வாழ்ந்துவந்தான். அந்தத் தருணத்திலும் இறைவனை வழிபடுவதை நிறுத்தவில்லை.

நாட்கள் கழிந்தது.ஒரு நாள் பழங்களைப் பறித்துவிட்டு தனது குடிசைக்கு திரும்பி கொண்டிருந்தான். தூரத்திலிருந்து தன்னுடைய குடிசை எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. இனி மீண்டும் ஒரு குடிசையை கட்ட வேண்டுமே என்ற எண்ணமும் துன்புறுத்தும் விலங்குகளின் எண்ணமும் வந்து அவன் சிந்தையை மயங்கச் செய்தது. ஐயோ இனி என்ன செய்வேன். என்னால் முடியவில்லையே என்று அழுதான். அடுத்து என்ன செய் வது இறைவா என்று நொந்தபடி அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து கப்பல் ஒன்று அவனை நோக்கி வந்தது. கப்பலில் ஏறி நன்றி சொன்னவன் எப்படி இங்கு வந்தீர்கள்? என்று கேட்டான். நீங்கள் புகையை வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதை உற்று கவனித்த போது இங்கு உதவி கேட்டு கழி இருந்ததையும் பார்த்தோம். அதனால் தான் வந் தோம் என்றான். கடுமையான சூழலில் இனி மீளவே முடியாது என்ற நம்பிக்கையை இழக்கும் நேரத்தில் கடவுளின் கருணையால் மீண்டிருக்கி றோம் என்று மகிழ்ந்தான்.

வாழ்வில் துன்பம் நேரும் போதெல்லாம் முன்னிலும் இறுக இறைவனைப் பற்றிக்கொள்ளுங்கள். மீளவே முடியாத துயரத்திலும் இறைவன் அருளால் மீண்டு வருவீர்கள்.

Newstm.in

newstm.in

Next Story
Share it