Logo

காரணமின்றி கஷ்டங்களைக் கொடுப்பதில்லை இறைவன்...

இறைவன் எப்போதும் எனக்கு கஷ்டங்களை மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறான் என்று புலம்புபவர்கள் தான் அதிகம். ஆனால் காரண மின்றி கஷ்டங்களைக் கொடுப்பதில்லை இறை வன்...
 | 

காரணமின்றி கஷ்டங்களைக் கொடுப்பதில்லை இறைவன்...

இறைவன் எப்போதும் எனக்கு கஷ்டங்களை மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறான் என்று புலம்புபவர்கள் தான் அதிகம். ஆனால் காரணமின்றி கஷ்டங்களைக் கொடுப்பதில்லை இறைவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஒவ்வொரு கட்டத்திலும் நம் உடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருந்தால் அனைத்தையும் கடந்துவிடலாம். ஆனால் வெற்றி பெறும்போது நான் என்னும் ஆணவம் மட்டும் இருக்கவே கூடாது. 

மகாபாரதப் போர் முடிவுக்கு வந்த தருணம் கிருஷ்ணர் தேரில் அமர்ந்திருந்தார். அர்ஜூனன் தேருக்குள்ளேயே கம்பீரமாக நின்றிருந்தான்.தேர் முடிவுக்கு வந்துவிட்டதே அர்ஜூனா, கீழே இறங்கு என்றார் கிருஷ்ணர். அர்ஜூனன் வெற்றிக்களிப்பில் இருந்தான். என்ன கிருஷ்ணரே மறந்து விட்டீர்களே. நீர் தானே என்னை போரில் வெற்றி பெற செய்தீர். போரில் வெற்றிபெற்றவனைத் தேரோட்டியான நீர்தான் கைபிடித்து கீழே இறக்க வேண்டும். அதானே முறையும் கூட.அதை விட்டு என்னை தனித்து இறங்க சொல்கிறாயே என்று கேட்டான். 

கிருஷ்ணர், அர்ஜூனனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் முதலில் தேரிலிருந்து கீழே இறங்கு அர்ஜூனா என்றார் கண்டிப்புடன். அர்ஜூனனுக்கு கிருஷ்ணனின் கண்டிப்பு புரியவில்லை. அதனால் வருத்தத்துடன் கீழே இறங்கினான். மீண்டும் கிருஷ்ணரின் கோபக்குரல் கேட்டது. தேரை விட்டு தள்ளி நில் அர்ஜூனா என்றார். அதுவரையில் வெற்றி பெற்ற மமதையில் இருந்த அர்ஜூனனுக்கு  தான் வெற்றி பெற்றது கூட மறந்து விட் டது.

கிருஷ்ணனின் மனமாற்றத்துக்கு காரணம் என்ன? ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று பல கேள்விகள் அர்ஜூனனின் மனதை வில் அம்பு போல் தாக்கியது. அர்ஜூனன் எதுவும் பேசாமல் அமைதியாக தள்ளி நின்றான். அவன் முகம் வாடியிருந்தது. ஒதுங்கி நின்ற அர்ஜூனனைக் கண்டு புன்ன கைத்த கிருஷ்ணர் தேரில் இருந்து இறங்கி  அர்ஜூனனின் அருகில் வந்தார். கிருஷ்ணர் தேரை விட்டு இறங்கிய தருணம் தேர் தீப்பற்றி எரிந் தது.அர்ஜூனன் ஒன்றும் புரியாமல் தேரை பார்த்தான்.

கிருஷ்ணர் புன்முறுவலுடன் பார்த்தாயா அர்ஜூனா.. தேர் பற்றி எரிவதால் தான் உன்னை தேரிலிருந்து கீழே இறங்க சொன்னேன் என்றார். ஏன் கிருஷ்ணா தேர் இவ்வளவு உக்கிரமாக தீப்பற்றி எரிகிறது? என்று கேட்டான் அர்ஜூனன்.போரின் போது கெளரவர்கள் ஏவிய அஸ்திரங்களில் சக்திகள் மிகுந்திருந்தது. அந்த சக்தியைத் தடுக்கும் பொருட்டு நானும் அனுமனும் தேர்க்கொடியில் அமர்ந்திருந்தோம். அதனால் அவற்றால் வலி மையைக் காண்பிக்க முடியவில்லை. அதனால் தான் உன்னை கீழே இறங்க சொன்னேன். அதன்  பிறகு நானும் அனுமனும் வெளியேறியதும் அந்த சக்திகளின் வினையால் தேர் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதை உணராமல் நீயோ நான் உன்னை கைப்பிடித்து கீழே இறக்கி வெற்றிபெற்றதை மகிழ்ந்து அங்கீகரிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாயே என்றார் கிருஷ்ணர் புன்னகையோடு. ஆமாம் நான் சற்று நேரத்தில் சுயநினைவை இழந்துதான் விட்டேன் கிருஷ்ணா என்றான் அர்ஜூனன். உடனே கிருஷணன், இன்னொன்று அர்ஜூனா போரில் வெற்றி பெற்றதும் உனக்கு வெற்றி மிகுதியில் கர்வம் வந்துவிட்டது. ஆனால் இந்த கர்வம் உன்னை அழித்துவிடும் என்பதை  மறந்துவிடாதே என்றார்.

தேர் பற்றி எரிந்தது போலவே அர்ஜூனனின் ஆணவமும்  அந்த நொடியே எரிந்து சாம்பலானது. காரண காரியங்களின்றி இறைவன் எதையும் செய்வதில்லை என்பதை உணர்ந்துகொண்டான் அர்ஜூனன். நாமும் உணர்வோம்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP