சிறுத்தொண்ட நாயனார்

இங்கு பரம்பொருளான எம்பெருமான் மீது வைத்த பாசம் பெற்ற பிள் ளையை பலி கொடுக்கவும் தயாராகிவிட்டது. இத்தகைய அன்பை இறைவன் மீது வைத்திருந்தவர்

சிறுத்தொண்ட நாயனார்
X

பெற்ற பாசம் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வோம். ஆனால் இங்கு பரம்பொருளான எம்பெருமான் மீது வைத்த பாசம் பெற்ற பிள் ளையை பலி கொடுக்கவும் தயாராகிவிட்டது. இத்தகைய அன்பை இறைவன் மீது வைத்திருந்தவர் சிறுத்தொண்ட நாயனார்.

காவிரி ஆறு பாயும் சோழநாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபில் அவதரித்தார்.பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் பரஞ்ஜோதி. இவர் நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணிபுரிந்தார். வேதங்களில் வல்லவரான இவர், போர் புரிவதிலும் தீரமாக செயல் பட் டார். சிவபெருமானிடம் அன்பு கொண்டிருந்த இவர் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலும் முதன்மையானவராக இருந்துவந்தார்.

எதிரி நாட்டு படைகளோடு போர் புரிந்து அவர்களை வீழ்த்தும் போதெல்லாம் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. எதிரி நாட்டை தோற் கடித்து அங்கிருக்கும் செல்வ வளத்தை அடியோடு புரட்டி எடுத்து வந்து தம் மன்னனிடம் சேர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இவரது ஆற்றல் மிக்க பணி அரசருக்கு இவர் மீது மிகுந்த ஆச்சரியத்தையும் மதிப்பையும் தேடிக்கொடுத்தது. பரஞ்சோதியார் மறுபுறம் சிவத்தொண்டிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிவத்தொண்டில் பரஞ்சோதியாரின் ஈடுபாடு குறித்து அமைச்சர்கள் மன்னனிடம் சிலாகித்து பேசினார்கள். சிவனடியார்களுக்கு தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்திய நரசிம்ம பல்லவர் உடனடியாக பரஞ்சோதியை அழைத்து சிவத்தொண்டு செய்து வரும் சிவனடியார்களான உங்களை கொலை செய்ய வைக்கும் பணியில் ஈடுபட வைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

நானாக இப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்டேன் மன்னா அதனால் இது தவறு என்று உணர வேண்டாம். இல்லை பரஞ்சோதி நீ ஆயிரம் சமாதா ன ம் சொன்னாலும் என்னால் ஏற்க இயல வில்லை. இனி உன் மனம் போல் சிவத்தொண்டு புரிவதில் ஈடுபடு என்று கூறி அவருக்கும் நிலமும், செல்வமும், ஆநிரைகளையும் பரிசளித்தார். சிவத்தொண்டு செய்வதற்கு கசக்குமா என்ன பரஞ்சோதியாரும் மன்னரிடம் இருந்து செல்வக் குவி யலை பெற்று தமது ஊருக்கு திரும்பினார்.

தனது மனைவியுடன் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்துவந்தார் பரஞ்சோதியார். இவர்களது அன்புக்கு அடையாளமாக ஆண்மகன் பிறந்தான்.அவனுக்கு சீராளன் என்னும் பெயரை வைத்து வளர்த்து வந்தார்கள். இருவரும் சிவனடியார்களுக்கு அமுது அளித்த பிறகே உணவ ருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். சிவனடியார்கள் முன்பு தன்னையும் சிறுவனாக பாவித்து அவர்களுக்கு பணி விடை செய்து மகிழ்ந் ததால் பரஞ்சோதி சிறுத்தொண்டர் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

சிவத்தொண்டில் தன்னையே தாழ்த்திக்கொண்ட சிறுத்தொண்டரின் பக்தியை உலகம் உணர வேண்டாமா என்று நினைத்தார் சிவபெருமான். ஒரு நாள் சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வராததால் சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் கவலையோடு காத்திருந்தார்கள். ஒருவரும் வராததால் சிறுத்தொண்டர் நான் போய் சிவனடியார்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார். அச்சமயம் ஈசனே பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்கட்டாங்குடி ஊருக்கு வந்தார்.

சிறுத்தொண்ட நாயனாரின் வீட்டுக்கு வந்து அமுது வேண்டினார். மகிழ்ந்த சிறுதொண்டரது மனைவி அடியாரை அமுதுக்கு அழைத்தார்.தாங்கள் உள்ளே வந்து அமருங்கள் என்று கூறினாள். சரி நான் இங்கிருக்கும் அத்தி மரத்தின் கீழ் இளைப்பாறுகிறேன். அவர் வந்தால் என்னை பார்க்க சொல் என்றார்.

வெளியில் சென்று திரும்பிய சிறுத்தொண்டர் வீட்டுக்கு வந்து அடியாரை எங்கும் காணவில்லை என்று கவலை கொண்டார். மனைவி மகிழ்வு டன் அடியார் வந்ததயும் அவர் அத்திமரத்தில் காத்திருப்பதாகவும் சொல்ல விரைந்து ஓடினார். அதன் பிறகு நர மாமிசம் கேட்ட சிவனடியாரும் அதை நிறைவேற்றிய சிறுதொண்டரின் பக்தியையும் நாளை காணலாம்.


newstm.in

newstm.in

Next Story
Share it