Logo

இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்... வெளிப்படும் மர்மக் குரல்கள்

மர்மக்குரல்களின் மர்மங்கள் விடுபட முடியாதபடி இங்கு வந்து தங்கி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்களுக்கும் இத்தகைய குரல் கள் காதில் விழுந்தது. ஆனால் அது மனிதர் களின் சத்தமா அல்லது கோயில் கருவறை யிலிருந்தோ உள்ளிருந்தோ...
 | 

இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்... வெளிப்படும் மர்மக் குரல்கள்

இலட்சக்கணக்கான ஆலயங்களைக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆலயமும் தனிச் சிறப்புகளையும் தனி வரலாறையும் கொண்டிருக்கிறது. சில ஆலயங்களின் வரலாறு கேட்கும் போதே பக்தர்களின் உடலை சிலிர்க்க செய்யும். இன்னும் சில கோவில்கள் ஆன்மிக ஆச்சர்யங்களை உள் ளடக்கி விடை தெரியாத மர்மங்களைக் கொண்டிருக்கும்.  

அப்படியான மர்மங்கள் நிறைந்திருந்தாலும் அதை தெளிவாக உணரமுடியாது. அநேக இடங்களில் இது பக்தர்களால் உணரவும் முடியாது. சில கோவில்களில் ம்ட்டுமே அதன் மர்மங்கள் பக்தர்களையும் எட்டிவிடும். அவை உண்மையா? எப்படி இப்படியெல்லாம்  நடக்கும்?  யார் இதை நடத் துகிறார்கள் என்ற ஆராய்ச்சிகள் ஒரு புறம் இருந்து மர்மங்களுக்கு விடை காண முடியவிட்டாலும் அப்படி ஒரு நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். அப்படி ஒரு சுவாரஸ்யமான மர்மங்கள் நிறைந்த கோவில் பற்றி இன்று பார்க்கலாம்.

பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸார் என்னும் பகுதியில் அமைந்திருக்கிறது ராஜராஜேஸ்வரி பால திரிபுரசுந்தரி கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இருக்கும் அம்மனே பால திரிபுர சுந்தரி என்று அழைக்கப்படுகிறாள்.வாழ்வில் உண்டாகும் சங்கடங்களையும் சஞ்சலங்களை யும் தீர்த்து வைக்க வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன்  பக்தர்களின் வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்குவதாக பக்தர் கள் நெகிழ்கிறார்கள்.

இந்தக் கோவிலில் உள் நுழையும் போதே முன்பக்க வாயில் பிரம்மாண்டமாக வரவேற்கிறது. பகல் நேரங்களில் அம்மன் பாலதிரிபுர சுந்தரிக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இரவு நேரங்களில் கோயில்களின் உள்ளே மர்ம குரல்கள் கேட்பதாக இங்கிருக்கும் மக்களும், பக்தர்களும் தெரிவிக்கிறார்கள். இது எப்போதாவது நிகழும் நிகழ்வு அல்ல. அன்றாடம் அனுதினமும் இத்தகைய குரல்கள் கேட்பதா கவும்,  கோவில்களில் உள்ள சாமிசிலைகள் தான் தங்களுக்குள் பேசி கொள்வதாகவும் இங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். 

இரவு நேரங்களில் பேச்சு குரல்களை நன்றாக கேட்க முடிகிறது. ஆனால் வார்த்தைகளை அறிய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில் கேட்கும் பேச்சுக்குரலால் சிலர் இக்கோவிலை மர்மமான கோவில் என்று அழைத்தாலும் இது தாய் திரிபுர சுந்தரியின் கருவ றையிலிருந்து வெளிவரும் அருள்வாக்கு அசரீரி அல்ல என்று சொல்கிறார்கள் அம்மனுக்கு பூசை செய்யும் பூசாரிகள். 

இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்... வெளிப்படும் மர்மக் குரல்கள்

எதனால் இத்தகைய நிகழ்வு உண்டாகிறது என்று ஆன்மிக ஞானிகளுக்கும், பெரியோர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாமலேயே இருக் கிறது. மர்மக்குரல்களின் மர்மங்கள் விடுபட முடியாதபடி இங்கு வந்து தங்கி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்களுக்கும் இத்தகைய குரல்கள் காதில் விழுந்தது. ஆனால் அது மனிதர்களின் சத்தமா அல்லது கோயில் கருவறையிலிருந்தோ உள்ளிருந்தோ கடவுளின் சிலைகள் பேசும் சத்தமா என் பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நதி மூலம் ரிஷி மூலம் ஆராயக்கூடாது என்பார்கள்.நாமும் கடவுள் பேசுகிறாரா? கருவறையிலிருந்து சத்தம் வருகிறதா? என்ன சொல்கிறார் கடவுள் என்று ஆராய்ந்து  மர்மங்களை நினைத்து குழம்பாமல் இராஜ இராஜேஸ்வரி பாலதிரிபுர சுந்தரியை வழிபடுவோம். வாழ்வில் நல்ல திருப்புமுனையைக் கொண்டு சிறப்பான வாழ்வை பெறுவோம்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP