மாயங்கள் பல செய்யும் கிருஷ்ணனின் மகிமை…

கிருஷ்ணரை விரும்பாத மக்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அத னாலேயே இவரது பிறந்தநாளை இந்தியாவில் உள்ள மக்கள் விமரிசை யாக கொண்டாடுகிறார்கள். இன்றைய தினம் கண்ணனை வழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.

மாயங்கள் பல செய்யும்  கிருஷ்ணனின் மகிமை…
X

உலகத்தில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கி றார் ஸ்ரீ கிருஷ்ணர். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில்அவதரித்த நாளே கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் கேசவா, கோவிந்தா, கோபாலா என்றும் அழைக்கப்படுகிறார்.

இராமர் பிறந்த நவமி இராமநவமி என்று அவர் பெயரிலும், கந்த ஷஷ்டி சுப்ர மணியரின் பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணர் பிறந்த தின மான நாள் மட்டும் அவர் பிறந்த இடமான கோகுலம் மற்றும் பிறந்த திதி யான அஷ்டமியைச் சேர்த்து கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுகிறது. முழு மையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான் தான்.

மனிதர்களுக்கெல் லாம் நன்மை செய்வதற்கென்றே நான் பிறந்திருக்கிறேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ் ணர்.
ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய இறுதிக்காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக புராணங்கள் தெரிவிக்கிறது.

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. ஆண்டு தோறும் கிருஷ்ணனின் பிறப்பை கொண்டாடுகிறது இந்து சமயவிழா கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றழைக்கப் படுகிறது. வட இந்தியாவில் ராசலீலா என்ற பெயரில் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணரை விரும்பாத மக்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அத னாலேயே இவரது பிறந்தநாளை இந்தியாவில் உள்ள மக்கள் விமரிசை யாக கொண்டாடுகிறார்கள். இன்றைய தினம் கண்ணனை வழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.

கீதையின் நாயகன் இரவுநேரத்தில் அவதரித்ததால் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார். குழந்தை முதலே லீலைகள் புரிந்த அவதாரமானவர். உலகத்தை தன் வாய்க்குள் காட்டி தன் தாயை மகிழ்வித்தவர், பசுக்களை அழைத்துசெல்லும் போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர். பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது நாற்காலியில் கட்டப்பட்ட போது அந்த நாற்காலியோடு தனது விஸ்வரூபத்தைக் காட்டியவர்.

பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு காட்டியது ஸ்வரூப விஸ்வரூபம். இதை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது என்பது போலவே அவருடைய பெருமைகளையும் எழுத்தில் அடக்க இயலாது.

இத்தகைய சிறப்பு மிக்க கோகுலாஷ்டமியில் அவதரித்தவர் கிருஷ்ணபர மாத்மா. அந்த நாள் புண்ணியமிக்க நாள். ஆனாலும் அஷ்டமியிலும், நவமியி லும் நல்ல காரியங்களை செய்யகூடாது என்று ஏன் சொல்கிறார்கள் முன் னோர்கள். அதற்கும் காரணம் உண்டு. நாம் பிறந்த திதியை விசேஷமாக கொண்டாடுகிறோம்.

அதுபோல் பகவான் பிறந்த திதியை கொண்டாட வேண் டுமா. அன்றைய தினம் அவரை மட்டுமே நினைத்து அவருக்குரிய பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி ஸ்லோகங்கள் சொல்லி அவரது அருளை பெற லாம்.

newstm.in

Next Story
Share it