உபநிஷதத்திற்கு விளக்கம் கூறிய சிறுமி !!

உபநிஷதத்திற்கு விளக்கம் கூறிய சிறுமி !!

உபநிஷதத்திற்கு விளக்கம் கூறிய சிறுமி !!
X

மராட்டிய மொழியில் புலமை பெற்றவர் தாஸ்கணு. பெரும் அறிஞரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சாய்பாபாவின் தீவிர பக்தர்களில் இவரும் ஒருவர்.

ஈசோ உபநிஷத்திற்கு மராட்டிய மொழியில் உரை எழுத நினைத்தார். உபநிஷத்துக்களின் தாய் போன்றது ஈசோ உபநிஷதம். அவருக்கு திருப்தியாக இல்லை. மீண்டும் மீண்டும் பலமுறை முயற்சி செய்தும் அவருக்குத் திருப்தி கிடைக்கவே இல்லை.அப்புறம், இன்னும் பல மாறுதல்களைச் செய்தார். அதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

உபநிஷதம் என்பதே மகத்தானது. அதிலும் அவற்றுக்கு எல்லாம் தாய் போன்ற ஈசோ உபநிஷதம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு மகத்தானது. அதற்கான உரையை எழுதுவதற்கு வெறும் புலமை மட்டும் போதாது. ஞானிகளின் கருணையும், அவர்களின் வழிகாட்டிதலும் நிச்சயமாக வேண்டும் என்று நினைத்தார்.
அப்படிப்பட்ட ஞானி யார்?

உடனடியாக ஷீரடியை நோக்கிப் பயணமானார். சாய்பாபாவின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு, தன்னால் ஈசோ உபநிஷதத்திற்கு சிறப்பான முறையில் உரை எழுத முடியாமல் இருப்பதையும், அதன் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் கூறினார் தாஸ்கணு.தனக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றுவதாகவும், சாய்பாபா மனது வைத்தால் மட்டுமே சிறப்பாக உரை எழுத முடியும் என்றும் முழுமையாகச் சரணடைந்தார் தாஸ்கணு.
சாய்பாபா புன்னகை புரிந்தார்.
"ஈசோ உபநிஷதத்தில் உனக்குத் தோன்றும் சந்தேங்களுக்கு சரியான விளக்கத்தைச் சொல்வதற்கு நான் எதற்கு? உன் ஊருக்கு நீ திரும்பிச் செல்லும் வழியில் பம்பாயின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீடு உள்ளது. அந்த வீட்டில் வேலை பார்க்கும் சிறுமியே உன் சந்தேகங்களை நல்ல முறையில் தீர்த்து வைப்பாள்" என்றார் சாய்பாபா.

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கிண்டலாகச் சிரித்தனர். உபநிஷதத்திற்கு வேலைக்காரச் சிறுமி விளக்கம் தருவாள் என்பது அவர்களுக்கு விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமே தெரிந்தது.ஆனால், தாஸ்கணு அதனை வேடிக்கை என்று நினைக்கவே இல்லை. அங்கிருந்து புறப்பட்டார்.தமது ஊருக்கு செல்லும் வழியில் பம்பாயின் கடைசிப் பகுதியான விலேபார்லே என்ற இடத்தில் இருக்கும் தமது நண்பர் சாஹேத் தீட்சித் என்பவரைச் சந்திப்பதற்காகச் சென்றார். அன்று தீட்சித் வீட்டிலேயே தங்கியிரிந்தார்.
பொழுது விடிந்ததும் குளித்துவிட்டு சாய்பாபாவை நினைத்துக் கண்களை மூடிக் பிராத்தனை செய்தார். அப்போது யாரோ பாடுவது கேட்டது.

வெளியே வந்து பார்த்தார்.
அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமிதான் பாத்திரங்களைக் கழுவிய படி இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள்.
அந்த பாடலை உற்றுக்கவனித்தார்.

" சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!
அதன் பார்டர் கூட எத்தனை அருமை!
எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!
அந்த ஏழைச் சிறுமி கிழிந்து அழுக்கடைந்த பாவாடையைக் கட்டியரிந்தாள். ஆனால் புத்தம் புதுப் பாவாடை அணிய அவள் விரும்புகிறாள் என்பதைத்தான் அந்தப் பாடல் உணர்த்தியதாக தாஸ்கணு நினைத்தார்.

உடனே அச்சிறுமிக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்தார். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவன் அதை அணிந்து கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாள். ஓடினாள். நடனம் ஆடினாள். உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அச்சிறுமி ஆனந்தக் கூத்தாடியதைப் பார்த்து ரசித்தார் தாஸ்கணு. மறுநாள் பொழுது விடிந்ததும் அந்த சிறுமியின் வருகைக்காக ஆவலோடு காத்தாருந்தார். அந்தப் புத்தாடையை இன்றும் அணிந்து கொண்டு அச்சிறுமி உற்சாக வலம் வரும் அழகை ரசிக்க மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால் ரசிக்க மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

அச்சிறுமி அதே கிழிந்த பாவாடையை அணிந்து வந்தாள். ஏன் புத்தாடையை அணியவில்லை? எப்போதாவது வெளியே எங்காவது போகிறதுபோது அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக் கூறினாள்.
ஆக, அவளது தொழில் தர்மப்படி அழுக்கு உடைதான் அணிய வேண்டும் .

ஆனாலும், முதல்நாள் அவள் முகத்தில் இருந்த சோகம் தற்போது முற்றிலுமாக காணாமல் போயிருந்தது. உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் காணப்பட்டாள். அந்த வித்தியாசத்தைத் தெளிவாகவே உணர்ந்தார் தாஸ்கணு.இதுநாள் வரை அவருக்குக் குழப்பத்தையும் சந்தோஷமாகவும் காணப்பட்டாள்.அந்த வித்தியாசத்தைத் தெளிவாகவே உணர்ந்தார் தாஸ்கணு.

இதுநாள் வரை அவருக்குக் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கொடுத்துக் கொண்டிருந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கான தெளிவான விளக்கம் இப்போது அவருக்குக்குக் கிடைத்துவிட்டது."நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனப்பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாம் நம் மனப் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்குக் கிடைக்கும் எல்லாவற்றையும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாம் கடவுளின் பரிசே" என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது."
இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்தும். இது நாள் வரை தாஸ்கணுவைக் குழப்பிக் கொண்டிருந்ததும் இதுவே தான்.

இப்போது ஓர் ஏழைச் சிறுமியின் வாயிலாக சந்தேகங்கள் தீர்ந்தது. பாடலுக்கான விளக்கமும் கிடைத்தது. சாய்பாபாவின் மீது கொண்டிருந்த தீவிர பக்தியால் தான் இது அனைத்தும் நடந்தது என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்?.

ஆன்மீக எழுத்தாளர்
Dr.V.ராமசுந்தரம்.

Next Story
Share it