பலன் தரும் காயத்ரி மந்திரம்...
ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு பாடல் காயத்ரி மந்திரம். இதை விஸ்வாமித்திரர் இயற்றியதாக கூறப்படுகிறது. உபநயன ங்கள் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.
பகவத் கீதையில் கிருஷ்ணனும் வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று பெருமைப்படுத்தியுள்ளார். விஸ்வாமித்திரர் தன் னுடைய உடலை திரியாக எரித்து, மகா சக்தியான காயத்ரி மந்திரத்தால் காயத்ரி அம்மனைத் தரிசித்து கணக்கிலடங்கா சித்திகளை அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டத்தைப் பெற்றவர்.
இதுசாவித்ரி மந்திரம் சரஸ்வதி மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் காலையில் காயத்ரி தேவிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்கா கவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. எந்த மந்திரங்கள் சொல்வதற்கும் மூல மந்திரமாக தாய் மந்திரமாக முதல் மந்திரமாக இருப்பது காயத்ரி மந்திரம் தான். மந்திர வழிபாடுகள் அனைத்திலும் காயத்ரி மந்திரத்துக்குத்தான் முதல் இடம். இந்த மந்திரம் சொல்லாமல் செய்யும் எந்த பூஜையும் பலனளிக்காது.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் என்கிறது சாஸ்திரங்களும்.மனதுக்குள் சக்திகள் பெருகவும், வைராக்கியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உரிய பலன் கிடைக்கும்.ஆபத் து காலங்களிலும் வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.
காயத்ரி மந்திரம்:
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
விளக்கம்:
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தையும் நாம் தியானிக்கிறோம். பூ, உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி. இந்த சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச் சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும்,இரண்டாவது வியாஹ்ருதிகளும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும். நான்காவது பர்க்கோதேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந: ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
108, 1008 முறை உச்சரித்தால் தான் பலன் என்று நினைக்காமல் மனதை ஒருமுகப்படுத்தி 27 தடவை கூறினாலே முழு பலனையும் பெறலாம். உடலும் உள்ளமும் தூய்மையும் வலிமையும் பெற இந்த மந்திரம் என்றும் துணையாக இருக்கும்.
newstm.in
newstm.in