Logo

காசி யாத்திரைக்கு வயது ஒரு தடையில்லை...

காசி தரிசனம் கோடி பிறவிகளின் பாவ வினை களையும் நீக்கவல்லது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். நீங்காத பாவங்கள் கூட நீங்கி விடும் காசி யாத்திரை பயணம்.முக்தி தரும் காசி பயணம் என்று பல சிறப்புகளைக் கொண் டிருக்கும் காசி பயணம் கடமையை முடித்த பிறகே என்று ...
 | 

காசி யாத்திரைக்கு வயது ஒரு தடையில்லை...

இந்து தர்மத்தின் படி வாழ்வில் ஒருமுறையாவது புண்ணியம் தரும் யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக காசி யாத்திரை. ஒரு வன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு குடும்ப கடமைகளை முடித்த பிறகே துறவறம் மேற்கொள்ள வேண்டும். அதன்படி பார்த்தால் 60 வயதுக்குப் பிறகு தான்  காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சிலர் சொல்கிறார்கள். 

இன்னும் சிலர் காசியாத்திரை என்பது பித்ரு தோஷங்கள் தீர்க்கவும், பித்ரு கடன் செய்வதற்கும் என்றும் கூறுகிறார்கள். இதுதான் பிரதான நோக் கமாகவும் பரப்பி வருகிறார்கள். ஆனால் பரம்பொருளைத் தரிசிக்க வயது ஒரு தடையில்லை என்பதே ஆன்மிக பெரியோர்கள் உணர்த்தும் உண்மை.

புனித யாத்திரையை மேற்கொள்ள 60 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்கு நாமே வகுத்துக்கொண்டது. ஆனால் இள மையிலேயே  உடல் உறுதியாக இருக்கும் நிலையிலேயே  புனித யாத்திரைகள் மேற்கொண்டு பரமனைத் தரிசிக்கும் பேறு பெற வேண்டும். அத்த கைய வாய்ப்புகள் நாடி வந்தாலும் நீங்கள் தேடி போனாலும் பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்.

காசி தரிசனம் கோடி பிறவிகளின் பாவ வினைகளையும் நீக்கவல்லது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். நீங்காத பாவங்கள் கூட நீங்கிவிடும் காசி யாத்திரை பயணம்.முக்தி தரும் காசி பயணம் என்று பல சிறப்புகளைக் கொண்டிருக்கும் காசி பயணம் கடமையை முடித்த பிறகே என்று  சொன்னாலும் கூட இளமையிலேயே காசிக்கு சென்று  புனித கங்கையில் நீராடி விசாலாட்சி அம்மனோடு ஸ்ரீ விஸ்வநாதரைத்  தரிசித்தால் உல கில் இருக்கும் அனைத்து பயன்களும் கிடைக்க செய்வார் சிவபெருமான்.

காசியாத்திரை என்பது இராமேஸ்வரத்தில் தொடங்கி இறுதியில் இராமேஸ்வரத்திலேயே நிறைவடைய வேண்டும். இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி கடலில் மூன்று முறை மூழ்கி எழவேண்டும். அப்போது ஒவ்வொரு முறையும் ஒரு பிடி மண்ணை எடுக்க வேண்டும்.முதல் கைப்பிடி மண் சேது மாதவலிங்கம் என்றும், இரண்டாவது கைப்பிடி மண் பிந்துமாதவ லிங்கம் என்றும், மூன்றாவது கைப்பிடி மண் வேணு மாத வலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த மூன்று லிங்கங்களைப் பூஜித்து முதல் லிங்கத்தை வைத்துக்கொண்டு இரண்டு மற்றும் மூன்றாவது லிங்கத்தை கடலில் கரைக்க வேண் டும். முதல் லிங்கமான சேதுலிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் கொண்டுவந்து காசி யாத்திரையில் திரிவேணி சங்கமத்தில் சேதுமாதவ லிங் கத்தைக் கரைக்க வேண்டும். அதன்பிறகே புனித கங்கையில் நீராடி கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து அங்கிருக்கு ஆலயங்களில் வழிபட்டு கயாவுக்கு செல்ல வேண்டும். 

கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததும் பிறகு கங்கையில் நீராடி விஸ்வநாதனை வழிபட்டு கங்கை நீரை கொண்டுவந்து இராம நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த யாத்திரை வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டு சேர்க்கும் என்பதோடு மகிழ்ச்சியையும் தங்க வைக்கும். 

யாத்திரைக்கு வயது பேதமில்லை என்பதால் அனைவரும் புனித யாத்திரையான காசி யாத்திரை மேற்கொள்ளலாம் என்று மகா பெரியவாவும் அறிவுறுத்துகிறார்.  


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP