Logo

சுந்தரமூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 7

சுந்தரரார் குளத்தில் இருக்கும் பொற்காசு மூட் டையை தேடினார். ஆனால் எங்கும் அகப்பட வில்லை. எம்பெருமானின் திருவிளையாடல் என்றெண்ணி பொன்செய்த மேனீயிர்...
 | 

சுந்தரமூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 7

பொன்கட்டிகளோடு வந்த சுந்தரரார் மீண்டும் பரவையாரிடம் விடைபெற்று நன்னிலத்து பெருங்கோயில் அடைந்து அங்கு பதிகம் பாடி எம்பெரு மானை மகிழ்வித்து, அங்கிருந்து காவிரி கரையைக் கடந்து திருமழப்பாடி, திருவானைக்காவல், திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலங்களில் சென்றும் பதிகம் பாடினார். அங்கிருந்து காஞ்சி திருப்போரூரை வந்தடைந்தார்.

அங்கு நந்தியை மட்டும் கண்ட சுந்தரரார் எம்பெருமானைத் தேடி வயற்பக்கம் வந்தார். அங்கு உழவுத்தொழில் செய்யும் பணியாளனாகவும், அவர் உடம்பில் பாதிபெற்ற பார்வதி தேவி பணிப்பெண்ணாகவும் உழவில் ஈடுபட்டிருக்க, தேவர்கள், சிவகணத்தலைவர்கள் வயலில் உழுது வேலை பார்த்தார்கள். ஐயன் மீது அளவற்ற பக்தி கொண்ட சுந்தரரார் மறையவனரசன் செட்டி தன் தாதை எனத்தொடங்கும் பதிகம் ஒன்றை பாடினார்.

 பிறகு திருவெஞ்சாமக்கூடல் திருக்கற்குடிமலை சென்று சிவதரிசனம் முடித்து,கூடலையாற்றூர் சென்று அங்கிருந்த பதியை வணங்காமல் சென்றார். ஆனால் வழியில் எம்பெருமான் அவர் முன்னால் தோன்ற சுந்தரர் அவரிடம் திருமுதுகுன்றூருக்கு வழி கேட்க அவர் கூடலையாற் றுக்கு செல்லும் வழியை விளக்கி எல்லை வரை அழைத்து வந்து மறைந்தார். எம்பெருமானே அந்தணராக வேடம் தரித்து வந்தவர் என்று உணர்ந்த சுந்தரரார் பாமாலை பாடி பிறகு முதுகுன்றூருக்கு வந்தார்.

அங்கு பரமனின் பாதத்தைப் போற்றி மெய்யை முற்றுப்பொடி பூசி என்னும் பதிகத்தைப் பாடினார். இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு பொற்காசுகள் கொடுத்து மகிழ்ந்தார். இவற்றை மணிமுத்தாறில் மூழ்க செய்து திருவாரூரில் எடுத்துக்கொள் என்றும் ஆணை பிறப்பித்தார். அதேபோல் செய்த சுந்தரர் கடம்பூர் சென்று அங்கு பரமனை வணங்கி சிவ நாமத்தை ஜபித்து ஊர் திரும்பினார்.

எம்பெருமான் ஆணைப்படி மணிமுத்தாறில் மூழ்க வைத்த பொற்காசுகளை திருவாரூரில் எடுக்க பரவையாரை அழைத்தார். மக்கள் அனைவ ரும் அங்கு திரண்டனர். ஆற்றில் விட்டது குளத்தில் எப்படி கிடைக்கும் என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. சுந்தரரார் குளத்தில் இருக்கும் பொற்காசு மூட்டையை தேடினார். ஆனால் எங்கும் அகப்படவில்லை. எம்பெருமானின் திருவிளையாடல் என்றெண்ணி  பொன்செய்த மேனீயிர் என்னும் பதிகத்தைப் பாடினார்.  

பொற்குவியல் கிடைக்காததால் மீண்டும் அவரை நினைத்து பரவையார் முன்னிலையில் பொற்குவியல் எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பதிகம் பாட பொற்குவியலை கரங்களில் பெற்றார். சுற்றியிருந்தவர்கள் எம்பெருமானின் அருளை நினைத் தும், சுந்தரராரின் பக்தியை நினைத்தும் உருகினார்கள். அந்த ஆண்டு பங்குனி விழாவை சிறப்பாக நடத்தினார்கள் சுந்தரராரும், பரவையாரும்.

பரவையாரிடம் விடைபெற்று அன்பர்களோடு மீண்டும் சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாட முனைந்தார். வழிநெடுகிலும் எம்பெருமான் அவர் களுக்கு துன்பம் நேராமல் காத்தார். வழி நெடுகிலும் அவர்களுக்கு உணவு தண்ணீர் கிடைக்க திருவருள் புரிந்தார். இப்படியே சிவாலயங்கள் தோறும் சென்று தரிசித்த சுந்தரரார் காஞ்சி வந்தார். அவரை வரவேற்று அடியார்கள் மகிழ்ந்தார்கள். காஞ்சி காமாட்சியைக் கண்டு மனம் குளிர்ந்த சுந்தரரார் மீண்டும் சிவாலயங்கள் தரிசிக்க சென்றார்.

திருவொற்றியூரில் எம்பெருமானைத் தரிசிக்க வந்தபொது கோயில் மண்டபத்துள் தங்கியிருந்த சங்கிலியார் நறுமணமிக்க மலர்களை மாலைக ளாக்கி எம்பெருமாக்கு சேர்ப்பித்து விட்டு மின்னலென மறைந்தாள். ஆனால் அதற்குள் அவளை கண்டுகொண்ட சுந்தரரர் அவள் மீது அன்புகொண் டார். பரவையார் போல இவளையும் எனக்கு மணமுடித்து தரவேண்டும் என்று எம்பெருமானிடம் வேண்டினார். எம்பெருமானும் சம்மதித்து இருவருக்கும் மணம் செய்துவைக்கும்படி அடியார்களிடம் பணிந்தார்.

சுந்தரரார் இந்த ஊரை விட்டு நான் செல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுக்க திருமணம் இனிதே நடந்தது. இருவரும் அன்பில் மகிழ்ந்து வாழ்ந் தார்கள். அச்சமயம் திருவாரூர் பெருவிழா பற்றிய நினைவு சுந்தரராருக்கு வந்தது. எப்படியாயினும் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்த சுந் தரரார் அந்த ஊரை விட்டு காலடி பட்டதும் தன்னுடைய கண்களை இழந்தார். இழந்த கண்களை மீண்டும் பெற்றாரா. தொடர்ந்து பார்க்கலாம். 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP