சுந்தரமூர்த்தி நாயனார் - தொடர்ச்சி 5

உனது பாதம் என் தலையில் படுவதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ என்றார். தம் அறியாமையை நினைத்து தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் - தொடர்ச்சி 5
X

சிவாலயங்களுக்குச் சென்று பைந்தமிழில் பரம்பொருளைப் பாட முனைந்தார் சுந்தரரார். திருநாவுக்கரசர் சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்த தில்லையை அடைந்தவர் அங்கு தங்குவதற்கு அஞ்சி சித்தவடம் என்னும் இடத்தில் தங்கினார்.நள்ளிரவு நேரம் எம்பெருமான் முதிய வேதியர் வடிவம் தாங்கி சுந்தரரார் தலை மீது தமது திருவடி படும்படி படுத்து உறங்கினார். இவரது பாதம் பட்டு விழித்த சுந்தரரார் ஐயா! தங்கள் பாதத்தை என் தலையில் வைத்திருக்கிறீர்கள் என்றார். அறியாமல் செய்துவிட்டேன் ஐயா மன்னித்துவிடுங்கள் என்றார் முதியவர்.

சுந்தரார் இடம் மாறி படுத்தார். பிறகும் அந்த முதியவர் அவரது தலையில் தமது பாதம் வைத்து படுக்கவே ஐயா மீண்டும் மீண்டும் என் தலையில் பாதம் பதிக்கிறீர்களே. தாங்கள் யார் என்றார்.என்னை இன்னுமா அறியவில்லை என்று மறைந்தார் எம்பெருமான்.உமது திருவிளையாடலை அறி யாமல் போனேனே... உனது பாதம் என் தலையில் படுவதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ என்றார். தம் அறியாமையை நினைத்து தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். மனவேதனையுடன் மறுநாள் தில்லை வாழ் எம்பெருமானைத் தரிசிக்க சென்றார். இவரது வருகையை அறிந்த அந்தணர்கள் இவரை கோலாகலமாக வரவேற்றனர்.

சிற்றம்பலத்தை அடைந்தவர் தில்லையம்பலத்தவரை உள்ளம் உருக வழிபட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கினார். பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். மகிழ்ந்த எம்பெருமான் சுந்தரா எம்மைக் காண ஆரூருக்கு வருவாயாக என்று அசரீரியாக மொழிந்தார். தில்லையை விட்டு செல்ல மனமில்லா விட்டாலும் கொள்ளிட நதியைக் கடந்து சீர்காழி வந்தவருக்கு ஞானசம்பந்தர் அவதாரம் செய்த தலம் என்பதால் இங்கும் அச்சம் உண்டானது. அதனால் நகரின் எல்லையில் நின்றவருக்கு உமையாளுடன் காட்சிதந்து அருளினார் எம்பெருமான். பதிகம் ஒன்று பாடி வழிபட்டார் சுந்தரரார்.
அங்கிருந்து வழியெங்கிலும் உள்ள சிவத்தலங்களை அடைந்த சுந்தரரார் திருவாரூர் எல்லைக்கு வந்தார். திருவாரூர் சிவனடியார்களின் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் என்னால் ஆட்கொண்ட சுந்தரரார் எம்மை காண வருகிறான். அவனை வரவேற்று இங்கு அழைத்து வாருங்கள் என் றார்.

அங்கிருந்த சிவனடியார்களின் வழியாக சுந்தரராரின் பெருமையை அறிந்த மக்கள் சுந்தரராரை வரவேற்க தயாரானார்கள். ஊரே விழாக்கோலம் பூண்டது. தோரணங்களும், மாவிலைகளும், மாக்கோலங்களும்,மலர்களும் அலங்கரிக்கப்பட்டது. தேவர்களும், தேவத்தூதர்களும் மலர் மாரி பொழிய சுந்தரரார் எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்ற பதிகத்தைப் பாடிய வண்ணம் ஆலயத்தினுள் நுழைந்தார். செந்தமிழ்த்தேனில் இன்னிசை கலந்த பதிகம் ஒன்றை பாடினார்.

யாம் உம் தோழரானதால் மணப்பந்தலில் உம்மை தடுத்தாட்கொண்ட நானே இப்போது நீ மணக்கோலம் பூண்டு வாழ்வில் மகிழ்ச்சியோடுஇருக்க அருளுகிறோம் என்றார்.இறைவனைத் தோழனாக கொண்டதால் தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டார் சுந்தரரார். திருவாரூரில் சில காலம் தங்கியிருந்து எம்பெருமானை பாமாலையால் அர்ச்சித்தார்.

கயிலாய மலையில் வீற்றிருக்கும் பார்வதி தேவியின் சேடியர் ஒருவளான கமலினி என்னும் பெயரைக் கொண்டவள் திருவாரூரில் பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளரலானாள். இளவயதிலிருந்தே அதிகாலை எழுந்து சிவனை நினைத்து வழிபட்டு வந்தாள்.ஒரு முறை பரவை யார் தமது சேடிகளுடன் கோயிலுக்கு வந்திருந்தாள். அப்போது சுந்தரரமும் தமது புடை சூழ ஆலயம் வந்திருந்தார். இருவரும் ஒருவரையொரு வர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டார்கள்.

இருவரது மனமும் ஒன்றிய உணர்வை அப்போதே உணர்ந்து மகிழ்ந்தார்கள். இருவரும் ஆலயம் விட்டு சென்றாலும் ஒருவரையொருவர் மறக்க முடியாமல் மனம் முழுக்க பரமனை நினைத்ததோடு மற்றவரைப் பற்றியும் நினைக்கத் தொடங்கினார்கள். இருவரும் மற்றவரைப் பற்றி உடனி ருந்தோர்களிடம் விசாரிக்க தொடங்கினார்கள். அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதும் அன்பும் அதிகரித்தது. காதல் கொண்டதால் காதலுக்கே உரிய ஆற்றாமையும், தூக்கமின்மையும், பசியின்மையும் கொண்டார்கள்.

இவர்கள் பால் அன்பு கொண்ட எம்பெருமானுக்கு தெரியாதா என்ன? அடியார்கள் கனவில் வந்து சுந்தரராருக்கும், பரவையாருக்கும் மணம் முடிக் கும்படி சொன்னவர் இருவரது கனவிலும் வந்து மணந்து கொள் ளும்படி பணித்தார். இருவரும் மகிழ்ந்தார்கள். சிவனடியார்கள் சீரும் சிறப்புமாக இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார்கள். இருவரும் மனமொத்த தம்பதியராய் வாழ்ந்து திருத்தொண்டு செய்து மகிழ்ந்து வந்தார்கள். அடி யார்கள் சேவையும், திருத்தொண்டு சேவையும் இனிதே செய்து எம்பெருமானின் அன்பை மேலும் பெற்றார்கள். அடியார்க்கு அடியாராய் இருக்க விரும்பிய சுந்தரநாயனாரின் செயலை தொடர்ந்து பார்க்கலாம்...

newstm.in

newstm.in

Next Story
Share it