சுந்தரமூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 4

எங்கே சென்றார் இந்த முதிய வேதியர் என்று கலங்கிய சுந்தரரார் கோயிலுக்குள் நுழைந்து சுற்றி சுற்றி வந்தார். ஆனால் எங்கு காணினும் அவரைக் காணவில்லை. சுந்தரராருக்கு கண்களில் நீர் மல்கியது.

சுந்தரமூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 4
X

ஆரூரார் சம்மதத்தோடு முதிய அந்தணரின் நீட்டோலையை அவையில் இருப்பவர்கள் முன்னிலையில் வாசிக்க முடிவு செய்யப்பட்டதை நேற்று பார்த்தோம். அதன் தொடர்ச்சி..

அவையோரில் இருந்த ஒருவர் ஓலையைப் பிரித்து உரக்க வாசித்தார். அதில் திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரானாகிய நான் திருவெண்ணெய் நல்லூரைச் சார்ந்த பித்தனுக்கு எழுதிக்கொடுத்தது. நானும் என்னுடைய மரபில் வருபவர்களுக்கும் இவருக்கு வழி வழியாக அடிமை தொழில் செய்து இருப்போம். இதை உள்ளம் ஒன்றுபட்டு எழுதி அளிக்கிறேன். இது என்னுடைய கையெழுத்து என்று எழுதியிருந்தது.

எல்லோரும் ஆச்சரியமாக ஓலையை வாங்கிப் பார்த்தார்கள். சாட்சி கையெழுத்தும் அதில் இடப்பட்டிருந்தது. சாட்சி கையெழுத்திட்டவர்க ளுக்கு அது எப்போது என்று தெரியாவிட்டாலும் அது தன்னுடைய கையெழுத்துதான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். அதே போன்று ஆரூரா ரின் பாட்டானார் எழுதிய மற்றொரு ஓலையில் இருந்து அவரது கையெழுத்தும் முதியவர் அளித்த ஓலையில் இருந்த கையெழுத்தும் சரி பார்க்கப்பட்டது. அவையில் இருப்பவர்கள் முதியவர் சொல்வது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்கள்.

முதியவரின் பக்கம் தீர்ப்பு உண்டானது. ஆரூராருக்கு எதுவும் புரியவில்லையென்றாலும் அவையின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டார். அவையோர் முதியவரிடம் தாங்கள் இந்த ஊர் என்று சொன்னீர்கள். ஆனால் உங்கள் இருப்பிடம் எது என்பதை எங்களுக்கு காட்டுவீர்களா என்று கேட்டார் கள். வாருங்கள் என்ற முதியவர் அவையில் இருப்போரை அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள திருவட்டுறை என்னும் திருக்கோயிலை அடைந்தார்.

அவரை பின்தொடர்ந்தவர்கள் அவரை நெடுநேரம் காணாது தங்கள் இல்லம் திரும்பினார்கள். ஆனால் அடிமையாக இருக்க வந்த சுந்தரர் மட் டும் ஆலயத்தின் வாயிலிலேயே காத்துக்கொண்டிருந்தார். எங்கே சென்றார் இந்த முதிய வேதியர் என்று கலங்கிய சுந்தரரார் கோயிலுக்குள் நுழைந்து சுற்றி சுற்றி வந்தார். ஆனால் எங்கு காணினும் அவரைக் காணவில்லை. சுந்தரராருக்கு கண்களில் நீர் மல்கியது. உண்மையை உணர்ந்தார். இதுவரை தம்மை வாக்குவாதத்துக்கு அழைத்து வழக்கு தொடுத்து இங்கு கொண்டு வந்து நிறுத்தியது எம்பெருமானே என்று உணர்ந்தார்.

தன்னை ஆட்கொண்ட ஐயனை இன்று சந்திக்காமல் செல்லக்கூடாது என்று மனதில் உறுதி கொண்ட சுந்தரரார் ஆலயத்தைச் சுற்றி சுற்றி வந்தார். எங்கு தேடினும் மாயத்தோற்றத்தில் வந்த முதியவரைக் காணவில்லை. அப்போது கோயில் முழுவதும் கதிரவனின் முழு ஒளிபோல் பேரொளி எழுந்தது. முதிய வேதியர் தோற்றத்தில் வந்து சுந்தரராரை ஆட்கொண்ட எம்பெருமான் உமையாளுடன் காட்சி தந்தார்.தேவர்கள் பூமாரி பொழிய மணியோசை எழும்ப சுந்தராருக்கு காட்சி தந்த எம்பெருமான் திருவாய் மலர்ந்தார்.

முற்பிறவியிலேயே என்னுடைய சிறந்த பக்தனான நீ அப்போது மாதர் மீது ஈர்ப்பு கொண்டதால் தான் இப்பிறவியை மீண்டும் எடுக்க நேர்ந்தது. மீண்டும் ஒரு பிறவி உன்னை தொடராமல் இருக்கவே தகுந்த நேரத்தில் உம்மை யாம் ஆட்கொண்டோம் என்றார்.அதுவரையிலும் முதியவர் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணத்தை அறிந்த ஆரூராருக்கு மேனி சிலிர்த்தது. ஆனந்தம் பொங்கியது. வணங்கிய கரங்களை கீழே இறக்காமல் இறைவனை கண் குளிர தரிசித்தார். என்னோடு வாக்குவாதம் செய்து வன்மையாக பேசியதால் உனக்கு வன்றொண்டான் என்னும் பெயரை இடுகிறேன். தமிழ்பாக்களால் என்னை பாடுவாயாக என்றார்.

ஏதும் அறியாத எம்மை நீர் தமிழ்பாக்களால் பாடு என்றால் நான் யாது பாடுவேன் என்றார் மனம் கொள்ளா துயரத்தோடு, எம்மைதான் பித்தா என்று அழைத்தாயே அப்படியே பாடு என்றார். ஐந்தெழுத்து மந்திரத்தை தியானித்தப்படியே பித்தா பிறைசூடி பெருமானே என்று அடி எடுத்து எம்பெருமான் மீது திருப்பதிகம் ஒன்றை பாடினார் சுந்தரர். அவரது இசையில் மயங்கிய பெருமான் திருவருள் புரிந்தார். மகிழ்ந்த சுந்தரரார் மீண்டும் திருநாவலூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் மீதும் திருப்பதிகங்கள் பாடினார்.

எம்பெருமான் சுந்தரராரை ஆட்கொண்டதால் அவரை மணக்கவிருந்த சடங்கவியின் திருமகளும் ஆரூராரையே மனதில் நினைத்து அவரது நினைவாலேயே சிவலோகம் செல்லும் பேறை அடைந்தார். சுந்தரரார் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று பைந்தமிழ் பாட விரும்பினார்.
சுந்தரரார் செல்லும் இடமெல்லாம் சிவபெருமான் பின் தொடர்ந்த சுவாரசியம் குறித்து நாளை பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it