Logo

சுந்தரமூர்த்தி நாயனdமார்- தொடர்ச்சி 6

இறைவனை வழிபடுவது எளிது அவரது அடி யார்களை வழிபடுவது அரிது இந்த அடியார்க ளுக்கு அடியேனாகும் நாள் என்றோ? என்று நினைத்து அவர்களை ஒதுங்கி உள்ளே சென்றார்.
 | 

சுந்தரமூர்த்தி நாயனdமார்- தொடர்ச்சி 6

சுந்தரராரும், பரவையாரும் மணமுடித்து அடியார்கள் சேவையும், திருத்தொண்டு சேவையும் இனிதே செய்து எம்பெருமானின் அன்பை மேலும் பெற்றார்கள். ஒரு நாள் சுந்தரர் தனித்து கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த அடியார்களைக் கண்டார். இறைவனை வழிபடுவது எளிது அவரது  அடி யார்களை வழிபடுவது அரிது  இந்த அடியார்களுக்கு அடியேனாகும் நாள் என்றோ? என்று நினைத்து அவர்களை ஒதுங்கி உள்ளே சென்றார்.

அங்கிருந்த தொண்டர்களில் விறல்மிண்ட நாயனாரும் ஒருவர். அவர் சுந்தரரின் ஒதுக்கத்தைத் தவறாக புரிந்துகொண்டு அவர் மீது சினங் கொண் டார். அவருக்கு காதுகேட்கும்படியாக முதலில் வணங்கத்தக்க தொண்டர்கள் இங்கிருக்கும் போது கோயிலுக்குச்சென்று என்ன பயன் என்று கேட் டார். அதைக் கேட்டு சுந்தரர் அடியார்களுக்கெல்லாம் அடியேனாகும் பேறை அருள வேண்டும் என்று வழிபட்டார்.

அக்கணமே எழுந்தருளிய எம்பெருமான் அடியார்கள் பெருமையைப் பற்றி பாடுமாறு கூறினார். சுந்தரர் அஞ்சியபடி அடியார்களின் திருத்தொண் டைப் பற்றியும் பெருமையையும் புகழையும் சிறப்பையும் அறியாதவன் நான். அவர்களது சிறப்பை எங்கனம் என்னால் பாடமுடியும். தாங்கள் தான் அத்தகைய பேறை எனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

எம்பெருமானின் திருவருளால் தொண்டர்களின் தூய சரித்திரத்தைத் தொகுத்து கூறும் திருப்பதிகத்தை இனிய தமிழில் பாடினார். இதுவே திருத் தொண்ட தொகையாகும்.சுந்தரராரின் பக்தியை கண்டு நெகிழ்ந்த நாவலூர் அடுத்த குண்டையூர் என்னும் தலத்தில் இருந்த குண்டையூர்கிழார் எம் பெருமானிடமும், அடியார்களிடமும் அன்பு கொண்டவர். அடியர்களுக்கு தொண்டு செய்யும் பொருட்டு உணவு பொருளை சுந்தரராருக்கு வழக்க மாக அனுப்பி வைப்பார்.

ஒருமுறைபஞ்சம் ஏற்பட்ட போது சுந்தரருக்கு அனுப்ப முடியவில்லையே என்று கவலை கொண்டு எம்பெருமானிடம் முறையிட்டார்.அன்றிரவு  அவர் கனவில் தோன்றி சுந்தரராருக்கு அனுப்ப நெல்குவியலை உதவுவதாக கூறி அதன்படியே குபேரனைக் கொண்டு நெல் குவியலை குவித் தார். சுந்தரராரின் மீது எம்பெருமான் கொண்ட பக்தியினைக் கண்டு உருகிய குண்டைக்கிழார் நெல்லை அனுப்ப முடியாலம் பரவையாரின் திரு மாளிகை சென்று சுந்தரராரை காண சென்றார். ஆனால் இடையில் சுந்தரராரின் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் நெல் குவியலை உண்டாக் கிய விஷயத்தை சொல்லவே குண்டைக்கிழாரரை பார்க்கும் பொருட்டு சுந்தரரார் நாவலூர் வந்தடையும் முன்னரே இருவரும் ஒருவரையொரு வர் சந்தித்துக்கொண்டார்கள்.

சுந்தரரிடம் பஞ்சம் ஏற்பட்டதால் அனுப்ப முடியாமல் எம்பெருமானிடம் முறையிட அவர் வானளவு நெல் குவியலை உண்டாக்கியதை பரவசத்து டன் கூறினார் குண்டைக்கிழார். நெல்குவியலை கண்ட அவர் இதை எப்படி திருவாரூருக்கு எடுத்து செல்வது என்று மலைத்தார்.  இதையும் எம் பெருமானிடமே கேட்போம் என்னும் பொருட்டு நீள நினைத்தப்படியே என்னும் திருப்பதிகம் பாடினார். அப்போது வானத்திலே அசரீரி ஒலித்தது.

நம்முடைய பூதகணங்கள் இன்று இரவு திருவாரூர் முழுதுமுள்ள மனையில் நெல்லை நிறைக்கும் என்பதைக் கேட்டதும் சுந்தரரார் மனம் மகிழ்ந் தார். பிறகு குண்டையூரார் வீட்டில் அமுது உண்டு திருவாரூர் திரும்பினார் சுந்தரர். மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு குவிந்திருந்த நெற்குவிய லைக்  கண்டு மகிழ்ந்தனர். சுந்தரராரை புகழ்ந்தனர். அவரவர் வீட்டில் உள்ள நெல்களை அம்மக்களே எடுத்து ஆளலாம் என்று அறிவித்தார் சுந்தர ரார். சுந்தரராரின் பக்தியை எண்ணி மெய்சிலிர்த்தனர் மக்கள்.

குண்டைக்கிழார் போன்று திருவாரூர் அடுத்துள்ள திருநாட்டியத்தான் குடி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்துவந்த கோட்புலி நாயனாரும் சுந்தரர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் வைத்திருந்தார். இவருடைய வேண்டுக்கோளுக்கிணங்க இவரை சந்திக்க வந்தார் சுந்தரர். கோட்புலியார் இவரை அலங்கரித்த பீடத்தில் அமரவைத்து இவரது பொற்பாதங்களை கழுவி தமது குடும்பத்தார் மீது தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டார். தமது புதல்வி யர்களை வாழ்த்துமாறு சுந்தரரிடம் பணித்தார். சிவாலயத்துக்கு எல்லோரும் சென்றபோது சுந்தரரார் கோட்புலி நாயனாரின் தொண்டை சிறப் பித்து பதிகம் பாடினார். பிறகு திருவாரூருக்கு திரும்பினார்.

திருவாரூரில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.பரவையார் தருமங்கள் செய்வதோடு ஆண்டவன் சன்னிதியில் நடனம் ஆடி மகிழ்வாள். அடியார்களுக்கு உதவ மேலும் பொன்னும் பொருளும் திரட்ட பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு அன்பர்களோடு புகலூர் சென்றார். அங்கு சடைமுடி பெருமானிடம்  தாம் வந்துள்ள காரணத்தைக் கூறி பதிகம் பாடி அன்றிரவு கோயில் திருப்பணிக்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த செங்கற்களை எடுத்து வந்து அதையே பீடமாக்கி அதன் மீது துணிவிரித்து துயில் கொண்டார்.

மறுநாள் காலை செங்கற்கள் அனைத்தும் செம்பொன் கட்டிகளாக மாறியிருந்தது. அந்த குவியலோடு  பரவையாரிடம் வந்து சடைமுடி பெருமா னின் அருளை ஆனந்தமாக கூறி மகிழ்ந்தார். எனினும் உத்திர விழாவுக்கு இன்னும் பொருள்கள் வேண்டி இருந்தது. தொடர்ச்சியில் இது குறித்து பார்க்கலாம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP