Logo

சுந்தர மூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 8

இனி பரமனே கதி என்று எம்பெருமானிடமே தன் குறையைக் கூறி வருந்திய சுந்தரரார் இறைவ னையே பரவையாருக்கு தூது போக விழைத்தார். சுந்தரர் மீது கொண்ட பக்தியின்...
 | 

சுந்தர மூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 8

எம்பெருமானிடம் உள்ளம் உருக தனக்கு விடைகொடுக்குமாறு கேட்க பரமனின் ஊன்றுக்கோல் ஒன்று அவரை பற்றியது.அங்கிருந்து வந்து காஞ்சி காமாட்சியை வணங்கி கண் பார்வை திரும்ப பெற பதிகம்பாடி கெஞ்சினார். அவருக்கு எம்பெருமான் இடக்கண் பார்வையை அளித்து காட்சி கொடுக்க எம்பெருமானின் தரிசனம் கண்டு அகமகிழ்ந்தார் சுந்தரரார்.

பின்னர் அங்கிருந்து சிவயாத்திரை தொடர்ந்தார். இரவு பகல் பாராமல் நடைபயணம் மேற்கொண்டதால்  சுந்தரராருக்கு வெப்பு நோய் தாக்கியது. திருத்துறுத்தி பெருமானிடம் பிணி தீர பாடிய சுந்தரராருக்கு கோயிலின் வடபுறத்தில் உள்ள குளத்தில் நீராட வேண்டும் என்று எம்பெருமானின் அசரீரி ஒலித்தது. அங்கு மூழ்கி மின்னும்  ஒளியைப் போன்ற தேகத்தைப் பெற்றார்.

திருவாரூர் சென்றவர் எம்பெருமானை நினைத்து வலக்கண் வேண்டும் என்று இறைஞ்சி பதிகம் பாடி அவரது அருளால் வலக்கண்ணையும் பெற் றார் ஆனால் பரவையாருக்கு செய்த துரோகத்தை நினைத்து அங்கு செல்லாமல் கோயில் மண்டபத்தில் தங்கிவிட்டார். சுந்தரரார் ஏற்கனவே சங்கிலியாரை மணமுடித்து வாழும் வாழ்க்கையை கேட்ட பரவையார் உண்ணாமல் உறங்காமல் தவித்துவந்தார். சுந்தரரார் மீது கோபம் கொண் டார்.

இந்நிலையில் அவர் வருகையைத் தெரிவிக்க வந்த அன்பர்களை மாளிகை உள்ளே விடாமல் கதவடைத்து விட்டார்கள். மீண்டும் சுந்தரரார் உலக இயல்புகளை அறீந்தவர்களைக் கொண்டு பரவையாரிடம் தூது அனுப்பினர். ஆனால் பரவையார் உறுதியாக சுந்தரராருடன் மீண்டும் வாழ்வு என்பது கிடையாது என்று கூறிவிட்டர். இனி பரமனே கதி என்று எம்பெருமானிடமே தன் குறையைக் கூறி வருந்திய சுந்தரரார் இறைவ னையே பரவையாருக்கு தூது போக விழைத்தார். சுந்தரர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நடுசாமத்தில் எம்பெருமான் புடைகள் சூழ பரவையாரின் மாளிகையை அடைந்தார்.

அர்ச்சகர் வேடம் தரித்து பரவையாரிடம் பேசி மீண்டும் சுந்தரராருடன் வாழ வேண்டும் என்றார் ஆனால் பங்குனி விழாவன்று காத்திருந்தும் வராத சுந்தரராருடன் மீண்டும் வாழமுடியாது. அப்படி கட்டாயப்படுத்தினால் உயிரை இழந்துவிடுவேன் என்று திருப்பி அனுப்பிவிட்டாள் பரவை யார்.இறைவனை தூது அனுப்பினோமே என்று வருந்திய சுந்தரார் எம்பெருமான் திரும்பி வந்ததும் மன்னிப்பு கேட்டார். ஆனால் உனக்காக நான் பேசியது எல்லாமே வீணாகிவிட்டது சுந்தரா என்றார்.

ஐயனே இப்படி சொல்லிவிட்டீர்களே. எனக்காக பரவையாரிடம் தாங்கள் திருவிளையாடல் நிகழ்த்தக்கூடாதா. இன்று இரவு தாங்கள் பரவையாரி டம் என்னை சேர்ப்பிக்காவிட்டால் நான் உயிர் துறப்பது உறுதி என்று எம்பெருமானின் பாதம் பற்றி உருகினார் சுந்தரரார். மீண்டும் முயற்சி செய்கிறேன். உனக்காக பரவையாரிடம் செல்கிறேன் என்று எம்பெருமான் பரவையாரிடம் செல்ல விழைந்தார். இடையில் அந்தணராக வந்தவர் எம்பெருமானே என்று உணர்த்தும் வண்ணம் பரவையார் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பரவையாரும் கலக்கத்தில் இருந்தாள்.எம்பெருமானை மதியாமல் அறிவிழந்துவிட்டேனே என்று துன்பம் கொண்டு அமர்ந்திருந்தவள் மீண்டும் தேவ சிவ கணங்கள் புடை சூழ வரும் எம்பெருமானைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து அவரை வரவேற்று அஞ்சி நடுங்கி நின்றிருந்தாள். தம் அடிமை தோழரை ஏற்று மீண்டும் இல்வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று எம்பெருமான் கேட்க. என்ன தவம் செய்தேன் தாங்கள் என் இல்லத்தை நாடிவர. நீங்கள் கூறி நான் மறுப்பதேது என்று சம்மதம் சொல்ல எம்பெருமான் சுந்தரரிடம் சென்றார். பிறகு பரவையாரும், சுந்தரராரும் மகிழ்ச்சியாக இல்வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார்கள்.

சேரமான் பெருமாள் நாயரைக் காணும் பொருட்டு மீண்டும் பரவையாரிடம் விடைபெற்று கிளம்பினார் சுந்தரரார். இவரது வருகையை அறிந்த சேரமான் விழாக்கோலம் தரித்து  தன் சேனைகளுடன் ஊர் எல்லையில் இவரை வரவேற்றான். இருவரும் அன்பின் மிகுதியால் ஆரத்தழுவி மகிழ்ந்தார்கள்.

சேரமன்னன் அவரை அன்போடு அரண்மனைக்கு அழைத்து சென்று தம்முடைய அரியணையில் அமரவைத்து மகிழ்ந்தான். இருவரும் சிவால யங்கள் சென்று மகிழ்ந்து பதிகம் பாடி இன்புற்று இருந்தார்கள். அதன் பிறகு...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP