Logo

சிறப்புலி நாயனார்

ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுது உண்டதால் இறைவனுக்கு ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரும் உண்டு. சிவனடியார்களிடம் இவர் கொண்டிருந்த தூய்மையான் அன்பும், திருத்தொண்டும்
 | 

சிறப்புலி நாயனார்

இரந்தவர்க்கு இல்லையென்று சொல்லும் குணமிக்கவர்கள் வாழ்ந்த ஊர் திருவாக்கூர். இப்பகுதியில் இருக்கும் மலர்களுக்கென்று தனி நறுமணம் உண்டு. எந்நேரமும் சிவபூஜையும், ஹோம குண்டல புகையும் சூழ்ந்திருக்கும். இத்தகைய பெருமை மிக்க ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றி னார் சிறப்புலி நாயனார்.

சிவனடியார்களின் மீது அன்பு மழை பொழிவார். அடியார்களின் மீது பேரன்பு கொண்ட சிறப்புலி நாயனாருக்கு விபூதி தரித்தவர்களைக் கண்டதும் அவர்களை வணங்கி இனிமையான சொல்களால் வரவழைத்து அமுது படைத்து மகிழ்வார். இளவயதிலிருந்தே சிவன் மீது தீரா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தினமும் ஐந்தெழுத்து மந்திரத்தை முக்காலமும் நியமமாக ஓதி வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி மகிழ்வுற்றார்.

சிவகாம முறைப்படி வேள்விகளை நடத்தி வரும் இவர் சிவனடியார்கள் நாடி வந்தால் இல்லையென்று சொல்லாமல் மனம் கோணாமல் அனை வருக்கும் அமுது படைப்பார். இவரது இத்தகைய குணத்தை சீர்கொண்ட புகழ் வள்ளல் என்று சுந்தரர் போற்றியுள்ளார்.சிவ சாதாக்கியம்,அமுர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கர்ம சாதாக்கியம் என்னும் பஞ்ச சாதாக்கியங்களுள் சிறப் புலி நாயனார் கர்ம சாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து சிவனை வழிபட்டார்.

ஒருமுறை சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய விரும்பினார். ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே குறையவே நாயனாருக்கு மன வருத்தம் உண்டானது. என் ஐயனே! அடியார்களில் ஒருவர் குறைவது எனக்கு மன வேதனை அதிகப்படுத்துகிறது. நான் என் செய்வேன் என்று மனம் உருகி வேண்டினார். அடியாரின் உருக்கமான வேண்டுதல் எம்பெருமானை எட்டியது.

இனியும் பக்தன் வாடலாமா என்று நினைத்த எம்பெருமான், தாமே சிவனடியார் வேடம் பூண்டு நாயனாரின் இல்லத்தில் நடக்கும் அன்னதானத் தில் கலந்துகொள்ள வந்தார். இறைவனின் அருளை எண்ணி மகிழ்ந்த சிறப்புலி நாயனார் அனைவரையும் உபசரித்து அமுது படைத்தார். அன்ன தானம் முடிந்த பிறகு இறைவன் காட்சி தந்தார்.

ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுது உண்டதால் இறைவனுக்கு ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரும் உண்டு. சிவனடியார்களிடம் இவர் கொண்டிருந்த  தூய்மையான் அன்பும், திருத்தொண்டும் சிவனுக்கு இவர் பால் அன்பை அளித்தது. நெறி தவறாத இவரது ஆன்மிக வாழ்வு அனை வரும் போற்றுதலுக்குரியதாக இருந்தது. இறுதியில் இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.

சிவாலயங்களில் கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தன்று இவருக்கு குரு பூஜை கொண்டாடப்படுகிறது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP