மாங்கல்யத்தைக் காக்கும் விசேஷ பூஜை! இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!

மாங்கல்யத்தைக் காக்கும் விசேஷ பூஜை! இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!

மாங்கல்யத்தைக் காக்கும் விசேஷ பூஜை! இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!
X

அம்பிகை வழிபாடு செய்ய அனைத்து நாட்களுமே உகந்தவை எனினும் பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்ய சிறப்பான பலன்களை பெறலாம்.அதிலும் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்குரிய மாதம் அதனால் இந்த பெளர்ணமியில் தாயார் வழிபாடும் உகந்ததே.
இந்த புரட்டாசி பௌர்ணமியில் அம்பிகைக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். நாட்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். சகல ஐஸ்வரியமும் கிடைக்க பெறலாம்.


அதேபோல், மாதந்தோறும் வரக்கூடிய பெளர்ணமி பெண் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்களை வணங்கவேண்டிய நாள்.
பெளர்ணமியில் காலையும் மாலையும் வாசலில் கோலமிடு விளக்கு ஏற்றிவைத்தல் சிறப்பு. பூஜையறையில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்பிகைக்கு செந்நிற மலர்கள் சார்த்தினால் இன்னும் சிறப்பு.
முழு நிலவு தோன்றும் பெளர்ணமி தினத்தில் சந்திரனையும், அம்பிகையையும் வழிபாடு செய்திட மனதில் உள்ள குழப்பங்களைப் போக்கி வாழ்வில் நிறைவைத் தரவல்லது.
இந்த நாளில் திருவிளக்கு வழிபாடு, கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம்,அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வணங்கலாம். வீட்டிலுள்ள பெண்கள் தொடர்ந்து இதனைக் கடைப்பிடித்து வர தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Tags:
Next Story
Share it