வினைகளைத் தீர்க்கிறதா புண்ணிய தீர்த்தங்கள்...

பாவம் தொலைக்கும் புண்ணிய யாத்திரைகளில் வினைகளைத் தொலைப்பதற்கு பதிலாக நம்மை அறியாமல் அதிகரித்துக்கொண்டு வருகிறோம். மாறாக இறைவனை வழிபட்டும் எனக்கான பலன்கள் கிடைக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம்...

வினைகளைத் தீர்க்கிறதா புண்ணிய தீர்த்தங்கள்...
X

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகரும், சென்றாடு தீர்த்தங்கள் ஆயினான் காண் என்று தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் தீர்த்தத்தின் புண்ணியம் பற்றி கூறியிருக்கிறார்கள். வாரியார் சுவாமிகள் நமது வினைகளை தீர்ப்பதால் தீர்த்தம் என்று பெயர்பெற்றது என்கிறார்.

தீர்த்தம் என்பது என்ன? இந்து தர்மத்தின் படி புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டால் பாவங்கள் தொலையும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அப்படி பாவம் தொலைக்கும் புண்ணிய யாத்திரை களில் வினைகளைத் தொலைப்பதற்கு பதிலாக நம்மை அறியாமல் அதிகரித்துக்கொண்டு வருகிறோம். மாறாக இறைவனை வழிபட்டும் எனக் கான பலன்கள் கிடைக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

மகான்கள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், ஞானிகளின் பாதங்கள்பட்ட இடங்களே புண்ணிய தலங்கள்என்றுஅழைக்கப்படுகின்றன. அத்தகைய இடங்களில் நம் உடல் முழுவதும் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்கினால் நாம் எடுத்த பிறவி முழுமையடையும். புண்ணிய தலங்கள் இருக் கும் இடத்துக்கு செல்லும் போது அங்கு தரிசனம் செய்தபிறகே இதர பணிகளை செய்ய வேண்டும். அப்படி செல்லும் போது அத்தலத்தில் இருக் கும் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குவதைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

தீர்த்தமாடிய பிறகு அங்கிருக்கும் புண்ணிய மூர்த்திகள் வழிபாடும், முன்னோர்களுக்கான சடங்கும், அன்னதானமும் உரிய முறையில் செய்யும் போது சிவபுண்ணியர்களுக்கான பேறை பெறுகிறோம். தீர்த்தங்களில் தெய்வத்தை வணங்கி மூழ்கும் போது நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும், நம்மை பின்தொடரும் வினைகளும் நம்மோடு தீர்த்தத்தில் மூழ்கிவிடுகின்றன. மீண்டும் நாம் மூழ்கி எழும்போது அவை நம்மோடு எழுவதில்லை. நம்மை தொடர்வதில்லை. அதைத் தொடர்ந்து நாம் வழிபடும் புண்ணியமிக்க தலங்களில் இறைவனை மனதார நினைத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது வினைகள் எழாமல் நசுக்கப்படுகின்றன.

பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோஷம் முதலிய பாவங்கள் கூட தீர்த்தங்களில் நீராடினால் போகும் என்கிறார்கள் ஆன்மிக பெரி யோர்கள்.தலமூர்த்திகளை வணங்கும் போது அஸ்திரங்களை சாற்றி மாலை அணிவித்து வழிபாடு செய்த பிறகு கிடைக்கும் மலர்களை வீட் டுக்கு எடுத்துவர முடியாது என்றால் அருகில் இருக்கும் நீர் நிலைகளில் விட்டுவிட வேண்டும்.

தொடர்ந்து பல புண்ணிய தலங்களுக்குச் செல்வதாக இருந்தால் கோயிலில் அளிக்கப்படும் விபூதி, குங்குமத்தை தனியாக எடுத்து வந்து பிரசாதம் தருவது மேலும் சிறப்பு. இந்த பிரசாதங்களைப் பெற்றவர்களால் அந்த தலத்துக்கு சென்று நேரடியாக தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் அதன் பலனை பெறுவார்கள்.

புண்ணிய யாத்திரை செல்பவர்கள் அங்கு கிடைக்கும் பூஜை பொருள்களை வாங்கி வந்து தங்களது இஷ்ட தெய்வத்துக்கோ. குல தெய்வத்துக்கோ சமர்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டுக்கு பிறகே பிற காரியங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் யாத்திரைகளின் பலனை முழுமையாக பெற முடியும்.


newstm.in

newstm.in

Next Story
Share it