வெற்றிலை தீபம் ஏற்றுவதால் இவ்வளவு பலன்களா!!

வெற்றிலை தீபம் ஏற்றுவதால் இவ்வளவு பலன்களா!!

வெற்றிலை தீபம் ஏற்றுவதால் இவ்வளவு பலன்களா!!
X


வெற்றி+இலை என்பதை பிரித்தால் வெற்றியின் இலை என வரும். இதையே நாம் வெற்றிலை என்கிறோம். நம் நாட்டில் நடக்கும் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் வெற்றிலையையானது அலங்கரிக்கும். வெற்றிலைக்கு பல புராண வரலாறுகள் இருக்கின்றன.

"வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது"அந்த அளவிற்கு வெற்றிலையானது புராணம் காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும். அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு சேர்ந்த ஒரு காம்பினேஷன் மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.

இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும். இதன்படி 12 வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு முதல் ஆறு வெற்றிலைகள் ஐயும் மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்க வேண்டும்.

அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபமேற்றி வழிபட வேண்டும்.பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விட வேண்டும் விளக்கு எரியும் பொழுது ஒரு நல்ல நறுமணம் வீசும். இவ்வாறான வெற்றிலை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

newstm.in

Next Story
Share it