தமிழ்ப் புத்தாண்டில் விஷுக் கனி....!

இப்படி கொடுக்கும் பணம் வருடம் முழுவதும் வளரும் என்பது ஐதிகம். வீட்டில் பூஜை செய்த பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று தலை வாழை விருந்தோடு உணவு உண்டு பலகாரங்களை பரிமாறிக்கொள்வார்கள்.

தமிழ்ப் புத்தாண்டில் விஷுக் கனி....!
X

ஸ்வஸ்தி ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் முதல் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுக்லபக்ஷ நவமியும், ஆயிலய நட்சத்திரமும் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 1 மணி 15 நிமிடத்துக்கு கடக இலக்னத்தில் பிறக்கவிருக்கிறது.

கேரள மக்கள் விஷுக் கனி காணுதல் என்னும் கொண்டாட்டத்தை இந்தப் புத்தாண்டு தினத்தில் கொண்டாடிமகிழ்வார்கள். வளமாக வாழும் நம்பிக்கை யைக் கொடுக்கும் புத்தாண்டு தொடக்கத்தில் விஷுக்கனி பார்த்தால் வருடம் முழுவதும் நன்மையே நடக்கும் என்பது ஐதிகம்.. கேரளாவை ஒட்டியுள்ள மாநிலங்களில் கொண்டாடப்பட்ட இம்முறை தற்போது தமிழகத்திலும் பரவ லாகியுள்ளது. விஷு கனி வழிபாடு வாழ்வில் மேலும் வளம் தரும் என்கிறார்கள் பலன்பெற்ற மக்கள்..

வருடப்பிறப்புக்கு முந்தைய நாள் வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்து மாவிலை தோரணங்களை வாயிலில் கட்ட வேண்டும். இரண்டு முனையிலும் ஒரு கொத்து வேப்பிலையைச் செருக வேண்டும். பூஜையறையில் ஒரு பெரிய தாம்பாளத்தட்டில் விதவிதமான பழங்களை நிரப்பி வைக்க வேண் டும். வெற்றிலைப்பாக்கு, புனிதமான புத்தகம், வெண்கல அல்லது ஐம்பொன் கலந்த சிறிய பாத்திரம் வழிய அரிசி, தங்கம் அல்லது வெள்ளிக்காசுகள் நகைகள், சில்லறைகள், நோட்டுகள் போன்றவற்றை நிரப்பி வழிய வைத்து அருகில் முகம் தெரியும் பெரிய கண்ணாடி ஒன்றை வைத்துவிடுவார்கள்.

மறுநாள் புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து கண்களைத் திறவாமல் குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் மெதுவாக பூஜையறை வந்து நிரம்பிய தாம்பாளத்தட்டைப் பார்த்து கண்ணாடியில் முகம் கண்டு வணங்குவார்கள். வருட துவக்கத்தில் மகிழ்ச்சித்தரக்கூடிய இப்பொருள்கள் வருடம் முழுக்க வீட்டிற்குள் தங்கும் என்பதே இந்த விஷுக்கனி வழிபாடு.. பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் எழுப்பி கண்களைத் திறவாமல் கைப்பிடித்து அழைத்து வந்து விஷுக்கனி காண வைப்பார்கள். கேரளாவில் மிக முக்கியமாக சம்பிரதாயத் தோடு இதைக் கடைப்பிடிப்பார்கள்.

குளித்து முடித்து புத்தாடை உடுத்தி வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் ஆசிர் வாதம் பெற்று. பூஜையறையில் வைத்திருக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி கொடுக்கும் பணம் வருடம் முழுவதும் வளரும் என்பது ஐதிகம். வீட்டில் பூஜை செய்த பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று தலை வாழை விருந்தோடு உணவு உண்டு பலகாரங்களை பரிமாறிக்கொள்வார்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it