Logo

தண்டனையில் மிகவும் கடுமையானது... மன்னிப்பு…...!

யாருடைய குறைகளையும் பெரிதாக்காமல் குறைகளே என்றாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இறைவன் விரும்புவதும் இத்தகைய குணத்தைத் தான்.
 | 

தண்டனையில் மிகவும் கடுமையானது... மன்னிப்பு…...!

யார் ஒருவர் என்ன செய்தாலும் அவரை தண்டித்து கடுமை காட்டுவதை விட பெரிய தண்டனை அவரை மன்னித்து விடுவிப்பதுதான் என்கிறது இந்து தர்மம். அத்தகைய மன்னிப்பை பெற்றவர்கள் மீண்டும் வாழ்க்கையில் எவ்வித தவறும் செய்யமாட்டார்கள் என்றும் வலியுறுத்துகிறது. இதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாம்.

முனிவர் ஒருவர் இருந்தார். அவரது ஆசிரமத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும். அவர் பிரச்னைகளை அணுகி தீர்வு சொல்லும் விதம் மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருந்ததால் எப்போதும் அவரிடம் கூட்டம் இருக்கும். முனிவரைப் பற்றி கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு மக்கள் எல்லாம் அவரை தேடி ஓடி வந்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நல்ல தீர்ப்புகளை சொல்லி வந்தார் முனிவர்.

திருடன் ஒருவன் இருந்தான். மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் சென்று அவர்களது ஆபரணங்களைத் திருடி வந்தான். முனிவரின் ஆசிரமத்தில் கூட்டம் கூடுவதை அறிந்து ஆசிரமத்துக்குள் நுழைந்தான். நல்ல வேட்டை கிடைத்தது. தொடர்ந்து இதே போல் மக்களின் கவனம் திசைதிரும்பும் போது அவர்களது நகைகளைத் திருடிவிடுவான். ஒருமுறை இப்படிச் செய்யும் போது முனிவரின் சீடர்களிடம் மாட்டிக்கொண்டான். இனி இப்படிச் செய்யக்கூடாது என்று சீடர்கள் அறிவுறுத்தி அவனை வெளியனுப்பினார்கள். ஆடினகாலும் பாடின வாயும் சும்மாயிருக்குமா என்ன?
திருடன் மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தான்.

இம்முறையும் மாட்டிக்கொண்டான். உனக்கு தண்டனை கொடுத்தால்தான் திருந்துவாய் என்று அவனை முனிவரின் முன்னால் கொண்டு போய் நிறுத்தி நடந்ததை தெரிவித்தார்கள். முனிவர் எதுவும் பேசாமல் அவனை பார்த்தார். பிறகு எதுவும் சொல்லாமல் சீடர்களை பார்த்து ”அவனை விட்டுவிடுங்கள்” என்றார். ஒரு சீடன் மட்டும் முனிவரைப் பார்த்து ”குருவே இது இரண்டாவது முறை. இனியும்  இவனை தண்டிக்காமல் விட்டால் இவனுடைய கைவரிசை நீண்டுவிடும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. அதனால் தாங்கள் இவனுக்கு தக்க தண்டனை கொடுத்தே தீர வேண்டும்” என்றான். ஆனால் முனிவர் ”இவனுக்கு தண்டனை அளிப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும்  இல்லை” என்று மறுத்துவிட்டார். திருடனுக்கு மகிழ்ச்சி பெருத்தது.

ஆசிரமத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்துகொண்டார்கள். நீண்ட நாள் கழித்து மீண்டும் அந்தத் திருடன் உள்ளே நுழைந்தான். இம்முறையும்  அவன் கைவரிசையைக் காட்டி மாட்டிக் கொண் டான். சீடர்கள் அவனை நைய புடைத்து முனிவர் முன்னிலையில் நிறுத்தினார் கள். ”நாங்களும் ஒவ்வொரு முறையும் அவனை கொண்டு வந்து நிறுத்துகிறோம். நீங்களும் அவனை மன்னித்து விடுகிறீர்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். முனிவர் சீடர்களையும், திருடனையும் மாறி மாறி பார்த்தார். 

”என்னிடம் குருகுல வாசம்பயில வந்திருக்கும் நீங்கள் கற்க வேண்டியவற்றை சிறப்பாக கற்றுகொண்டு விட்டீர்கள். ஆனால் இவன் களவை தவிர வேறு எதையும் கற்கவில்லை. அதனால் அவனை  இங்கேயே தங்க வையுங்கள். அவனை மனிதனாக்கி வெளியே அனுப்புகிறேன். இல்லையென்றால் முழு கள்வனாகி விடுவான் என்றார். திருடன் ஓடி வந்துமுனிவரின் காலில் விழுந்தான். தாங்கள் என்னை தண்டித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மன்னிப்பு கொடுத்து தண்டித்து உங்கள்சீடனாகவும் ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கதறினான்.

யாருடைய குறைகளையும் பெரிதாக்காமல் குறைகளே என்றாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இறைவன் விரும்புவதும் இத்தகைய குணத்தைத்தான். 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP