வழக்குகளில் வெற்றி தேடித் தரும் திதி நித்யா தேவி விஜயா!

நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றி தேடித் தரும் திதி நித்யா தேவி விஜயா!
X


நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை வழிபடலாம்.

சக்தியின் அம்சமாக விளங்கும் இவள், ஆணவத்தை அடக்கி பக்தர்களைக் காப்பதிலும் அருள்புரிகிறாள். கலைத்துறையில் ஈடுபட விரும்புபவர்கள், கலைத்துறையில் வெற்றிபெறவும். வளர்ச்சியோடு நீடித்த புகழை பெறவும் இந்த திதி நித்யா தேவி விஜயா அருள் புரிகிறாள்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்தி ரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

நீங்கள் வளர்பிறை துவாதசி அல்லது தேய் பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி விஜயா. அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி, விஜயாவை வணங்கினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கலைத்துறையில் வளர்ச்சி ஏற்படும்.

விஜயா:
திதி நித்யாதேவிகளில், விஜயா பன்னிரெண்டாவது இடத்தில் வாசம் செய்கிறாள். அதிகாலை சூரியனை போல், ஜொலி ஜொலிக்கும் விஜயாவின்…. மகுடமும் ஜொலிக்கிறது. நெற்றியில் பிறை நிலவு சூடி காட்சிதருகிறாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கேடயம், அம்பு, வில், வாள், மாதுளம் கனி, அல்லிமலர் போன்றவற்றை ஏந்தி பத்து திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறாள்.

வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, தன்னுடைய மென்மையான பாதத்தை, தாமரை மலர் மீது பொருத்தியிருக்கிறாள் திதி நித்யா தேவி விஜயா.

மூலமந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it