Logo

உணவுப் பஞ்சம் வராமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

 | 

அடிப்படை தேவைகளான உணவு,உடை,இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி.

அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்த பசியை போக்கும் உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது. 

இந்த ஸ்லோகத்தை  தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.

அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்

முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்

தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்

த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

- அன்னபூர்ணா த்யானம்

பொருள்:

அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.  

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP