Logo

தர்மத்தை நிலைநாட்ட போராடித்தான் ஆக வேண்டும்…

உதாரணபுருஷர்களே பயந்து நடுங்கிய கலிகாலத்தில் வாழும் நாம் தர்மத்தை நிலைநாட்ட எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
 | 

தர்மத்தை நிலைநாட்ட போராடித்தான் ஆக வேண்டும்…

கலியுகம் எப்படி இருக்கும் என்பது குறித்து மகாபாரதத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஒருமுறை கடைவீதிக்கு சென்றிருந்தான்.ஒரு கடையின் முன்பு  பேசும் கிளியை  கூண்டில் அடைத்துவைத்திருந்தர்கள். அதைக் கண்டதும் கிளியை வாங்க வேண்டும் என்று கடைக்காரனிடம் சென்றான்.

அதன் உரிமையாளன் கிளிக்கு காசு கொடுக்க வேண்டாம். நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு பதில் உரைத்துவிட்டு நீ கிளியை எடுத்துச் செல் லலாம் என்றான்.சகாதேவனும் அதற்கு உடன்பட்டான்.ஒரு பெரிய கிணறு. அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை  இறைத்து  ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம்.  ஆனால் அந்த சிறிய கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து மீண்டும் பெரிய கிணறை நிரப்ப இயலாது.அது ஏன்? என்று கேட்டான்.

சகாதேவனுக்கு விடை தெரியவில்லை. அதனால் நகுலனை வரவழைத்தான். அவனிடம் ஒருவருக்கு ஒரு கேள்வி என்ற கிளியின் உரிமை யாளன் ஊசிக்குள் யானை நுழைந்துவிட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் நுழையவில்லை அது ஏன்? என்று கேட்டான். நகுலனாலும் பதில் சொல்ல இயலவில்லை.

அர்ஜூனனை வரவழைக்கலாம். அவன் மிகவும் புத்திகூர்மையுள்ளவன் என்று அவனை அழைத்தார்கள். அவனிடம் நடந்ததை விவரித்தார்கள். சரி என்னுடைய கேள்வி என்ன? என்று  கேட்டான் அர்ஜூனன். விளைச்சல் மிகுந்த வயல் செழிப்பாக வேலியெல்லாம் போடப்பட்டு  இருந்தது. ஆனால் அறுவடை செய்யலாம் என்றிருந்தபோது பயிர்கள் எதுவும் காணவில்லை. வேலியும் சேதமாகவில்லை என்றான்.அர்ஜூனன் பதில் தெரியாததால் யோசனையோடு அங்கேயே அமர்ந்துவிட்டான்.

அரண்மனையில் தர்மர், பீமனை அழைத்து சகோதரர்கள் மூவரும் காலை முதல் காணவில்லையே.எங்கே இருக்கிறார்கள் பார்த்து அழைத்து வா என்றார். பீமனும் அவர்களைத் தேடினான்.ஓரிடத்தில் மூவரும் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பினான்.

மூவரின் முகவாட்டத்தைக் கண்ட தர்மர் என்னவாயிற்று என்றார். நடந்த அனைத்தையும் கூறினார்கள். தர்மர் அதிர்வதைக் கண்டார்கள். அண்ணா ஏன் இந்த  அதிர்வு என்றார்கள். கலி புருஷன் வந்துவிட்டான். கலி காலம் பிறக்கப்போகிறது என்றார் தர்மர் அந்த மூன்று கேள்விகளுக் கும் பதில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

பெரிய கிணறு என்பது  பெற்றோர்களையும் சிறிய கிணறு என்பது பிள்ளைகளையும் குறிக்கும். பெற்றோர்கள் கடினப்பட்டு பிள்ளைகளை காப்பாற் றினாலும் அவர்களது இறுதிகாலத்தில் ஒரு பிள்ளைக் கூட காப்பாற்றாது என்பது தான் இதற்கு பதில்.

இரண்டாவது கேள்வியின் படி நாட்டில் அதர்மங்களும் அக்கிரமங்களும் தலைவிரித்தாடும். இவை யானைக்கு உதாரணமாகவும்,  தர்மமானது யானையின் வாலுக்கு உதாரணமாகவும் சொல்லி நன்மையானது இந்தளவே இருக்கும். அதிலும் கடும் போராட்டத்திற்கு பிறகே என்று உலகை ஊசியாக உவமைப்படுத்தி கேட்டிருக்கிறார்.

மூன்றாவது கேள்வியில் வேலி என்பது அதிகாரிகளையும், பயிர்கள் என்பது மக்களையும் குறிக்கும்.  மக்களை காக்க வேலி போன்று இருக்க வேண்டிய அதிகாரிகளே பயிர்களை அழித்துவிடுவார்கள் என்பதே இதற்குரிய பதில். இப்படித்தான் கலியுகம் இருக்கும். அதனால் தான் எனக்கு நடுக்கம் ஏற்பட்டது என்றார் தர்மர்.

உதாரணபுருஷர்களே பயந்து நடுங்கிய கலிகாலத்தில் வாழும் நாம் தர்மத்தை நிலைநாட்ட எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP