Logo

ஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும் -பாகம்.1

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்கு தெரியும். நானே அவனுடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்.
 | 

ஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும் -பாகம்.1

ஒரு நாள் மத்தியானம் ஆரத்தி முடிந்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாபா கீழ்க்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்.

" நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்கு தெரியும். நானே அவனுடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் - அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவனணக்கிறேன். இப்பிரஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துவேன், ஆட்டுவிப்பேன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனும்மாம். என்பால் கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும். எல்லா பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்."

ஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும் -பாகம்.1

இத்தகைய அழகான, விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப்போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன். அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்) அதாவது நான் ஒரு வேலை பெறுவேன் என்னும் எண்ணம் என் மனதில் சுழன்றது. நான் அங்ஙனம் நிகழுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எதிர்கால நிழ்ச்சிகளைக் கண்ணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையானயின. நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன். ஆனால் அது குறுகியகால அளவுடையது. பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன். என் குரு சாயிபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாகச் சமர்ப்பித்தேன்.

இவ்வத்தியாயத்தை முடிக்கும் முன்பாக பல்வேறு இடைஞ்சல்களான தூக்கம், சோம்பல், மனது அலைதல், உணர்வுகளுடன் உறவு இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும், சிதைவுமற்ற கவனத்தை சாயிபாபாவின் கதைகளுக்கு அளிக்கும் படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிப்கொள்கிறேன். அவர்களது அன்பு இயற்கையானதாக இருக்கட்டும். பக்தியின் ரகசியத்தை அவர்கள் அறியட்டும். மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம்.

ஓர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும். அதாவது சாயிபாபாவின் கதைகளைக் கேட்பது. இது அவர்களின் அறியாமையை அழித்து அவர்களுக்கு முக்தி நல்கும். ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப்போல், சாயிபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்ததில் வீற்றிருக்கட்டும் .
           

ஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும் -பாகம்.1
வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP