அற்புத சிகிச்சை அளித்த ஷீரடி சாய்பாபா !!

அற்புத சிகிச்சை அளித்த ஷீரடி சாய்பாபா !!

அற்புத சிகிச்சை அளித்த ஷீரடி சாய்பாபா !!
X

மனிதன், ஒழுக்கத்தை வளர்க்கவே பக்தி நெறியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகை போன்றவற்றை வளர்ப்பது.பக்தியைப் புகட்டும் எளிய பாடம் இறை நெறி.

பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்குக் கற்று அறிந்தவர் தேவை. அதுப்போல இறை நெறியை அடைவதற்கும் ஒரு வழிக்காட்டி தேவை.
அவ்வாறு இறைநெறியை வளர்க்க நினைத்தவர்களுக்கு சிறப்பான வழிக்காட்டியாக இருத்தவர் தான் ஷீரடி சாய் பாபா. இவர் செய்த அற்புதங்களை உற்று நோக்கி பார்க்கும் போது, அவரின் பேராற்றல் என்பது நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. சாய்பாபாவின் அற்புதங்கள் எண்ணற்றவை அவைகளில் ஒன்று.

ஷீரடி சாய்பாபா மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்த பக்தர் நானா சாஹேப். ஒருமுறை, அந்தப் பக்தருக்கு முதுகுப் புறத்தில் கட்டி ஒன்று வந்தது. மருத்துவரிடம் காண்பித்தபோது அறுவை சிகிச்சை செய்துதான் கட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே, நானாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த இடத்தின் மேல் தளத்தில் இருந்த சில ஓடுகள் திடீரென்று சரிந்து விழுந்தன. குப்புறப் படுத்திருந்த நானாவின் முதுகில் இருந்த கட்டியின் மீது கூர்மையான ஓடு ஒன்று விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தார் நானா.
உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் நானாவின் நிலைமையைப் பார்த்து அதிர்ந்து போயினர். கட்டி உடைந்து இரத்தமும் சீழுமாக வெளியேறியது.
அவசரமாக நானாவை மருத்துவர்கள், பரிசோதித்தனர்.
என்ன ஆச்சரியம்!
அறுவை சிகிச்சை செய்யாமலேயே கட்டி உடைந்து போயிருந்தது.
" உங்களுக்கு இனிமேல் அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்து மட்டும் போதும் " என்று தெரிவித்தார்கள்.
குணமாவதற்கு சில நாட்கள் ஆகின.
முழுமையாகக் குணமானதும் சாய்பாபாவைப் பார்ப்பதற்காக விரைந்து சென்றார் நானா.
அவரை பார்த்த சாய்பாபா புன்னகையுடன் அருகில் வருமாறு அழைத்தார். நானாவும் பவ்யமாக சாய்பாபா அருகே சென்றார். அப்போது தனது ஆட்காட்டி விரலை நானா முன்பாக நீட்டினார் சாய்பாபா.
நானாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
" எதற்கு ஆட்காட்டி விரலை நீட்டுகிறார் சாய்பாபா? என்று குழம்பினார்.
" உனக்கு முதுகில் இருந்த கட்டியைப் பற்றி என்னிடம் நீ சொல்லாவிட்டால், எனக்கு தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டி விரலால் கூரையில் இருந்து ஓட்டினை தள்ளி உனக்கு சிகிச்சை அளித்ததே நான்தான்" என்றார் சாய்பாபா.

இதை கேட்டதும் புல்லரித்துப் போன நானா, பரவசத்தில் நெகிழ்ந்து போனார்.
தனது உண்மையான பக்தனுக்கு கஷ்டம் வருகிறபோது அவனைக் காத்தருளுவது தான் சாய்பாபாவின் மாண்பு.

ஆன்மீக எழுத்தாளர்
Dr.வி.ராமசுந்தரம்.

Next Story
Share it