பங்கிட்டு கொடுப்பதன் மூலம் பாரம் குறைந்துவிடும்

மனிதப்பிறவியை எளிதாக கடக்க முடியும். ஆனால் சிலர் வாழ்வு முழுமையும் ஏற்படும் இன்பம் துன்பம் அனைத்தையும் சுமந்துகொண்டு செல்வதையே விரும்புகிறார்கள். அவையெல்லாம் நிரந்தரமல்ல என்றாலும் அவற்றை ஆயுளுக்கு சுமந்து அல்லல் படுகிறார்கள்.

பங்கிட்டு கொடுப்பதன் மூலம் பாரம் குறைந்துவிடும்
X

மனிதப்பிறவியை எளிதாக கடக்க முடியும். ஆனால் சிலர் வாழ்வு முழுமையும் ஏற்படும் இன்பம் துன்பம் அனைத்தையும் சுமந்துகொண்டு செல்வதையே விரும்புகிறார்கள். அவையெல்லாம் நிரந்தரமல்ல என்றாலும் அவற்றை ஆயுளுக்கு சுமந்து அல்லல் படுகிறார்கள். இவர் களுக்கான தீர்வை விளக்கும் கதையைப் பார்க்கலாம்.

துறவி ஒருவரிடம் செல்வந்தன் ஒருவன் வந்தான். ஐயா என்னிடம் அளவுக்கதிகமான செல்வம் இருக்கிறது. ஆனால் எதையும் அனுபவிக்கவும் முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை. இடையூறுகளும் இல்லை.ஆனால் மனம் மட்டும் கனமாக இருக்கிறது. மனம் திருப்தி அடை யாமல் இருக்கிறது. என்ன செய்வது? நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்டான்.

துறவி எதுவும் பேசாமல் இதற்கான தீர்வை வார்த்தையால் விளக்க முடியாது. என்னோடு சில காலம் தங்கியிரு உனக்கே புரியும் என்றார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். துறவியின் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்துவந்தான். துறவி எங்கே போனாலும் அவருடன் இவனும் பயணித்தான்.

ஒருமுறை துறவி மலைப்பிரதேசம் செல்ல விரும்பினார். இவனையும் உடன் அழைத்தார். எப்படியாவது மனம் அமைதி பெற வேண்டுமே என்று உடலை வருத்தினாலும் பரவாயில்லை. நான் உங்களுடன் வருகிறேன் என்று இவனும் சம்மதித்து கிளம்பினான்.வழிநெடுக்க துறவி அவனை உபயோகமில்லாத பொருளை தூக்க செய்வதும் விடச்செய்வதும் என்று கட்டளை பிறப்பித்துக்கொண்டே வந்தார். இவனும் சலிக்காமல் செய்துவந்தான்.

ஒருவழியாய் தன் பயணத்தை திரும்பிய துறவி அவனிடம் மூன்று கனமான கல்லை கொடுத்து இதையும் தூக்கிவா என்றார். அவனும் மறுத்துப் பேசாமல் தூக்கி வந்தான். கொஞ்ச தூரம்சென்றதும் ஐயா மிகவும் கனமாக இருக்கிறது என்றான்.அதனாலென்ன ஒரு கல்லை கீழே போட்டுவிடு என்றார். இவன் ஒரு கல்லை போட்டான். துறவி அவனிடம் இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். பரவாயில்லை ஓரளவு கனம் குறைந்திருக்கிறது என்றான்.

மேலும் சிறிது தூரம் நடந்திருப்பார்கள். துறவி அவனிடம் இரண்டு கல் வைத்திருக்கிறாயே கையில் இருக்கும் இன்னொரு கல்லையும் கீழே போட்டுவிடு என்றார். அவனும் மகிழ்ச்சியாக ஒரு கல்லை போட்டான். துறவி மீண்டும் கேட்டார். இப்போது எப்படி இருக்கிறது என்று.அவன் இன்னும் கனம் குறைந்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றான்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததும் துறவி அவனிடம் கையில் இருக்கும் எஞ்சிய கல்லையும் கீழே போட்டுவிடு என்றார். அவனும் அவர் சொன்ன படி அந்தக் கல்லை கீழெ போட்டுவிட்டான். இப்போது கையில் எந்த கனமுமில்லை என்று மனமுவந்து அவனே துறவியிடம் கூறி ஏன் கல்லை சுமக்க செய்தீர்கள் அதை கீழே போடவும் வைத்தீர்கள் என்று கேட்டான்.

துறவி அமைதியாக சொன்னார். கல்லை கீழே போட போட கனமில்லாமல் மனதில் நிம்மதியோடு நடந்து வந்தாயே அதே போல்தான் கவலை களை மனதில் ஏற்றாமலும்,அளவற்ற செல்வத்தை சுமக்காமலும் வாழ்ந்தால் எந்த பாதிப்பும் மனதில் உண்டாகாது. உன்னிடம் இருக்கும் அள வற்ற செல்வம் தான் உனக்கு மன அமைதியை தரவில்லை. இருப்பதை பங்கிட்டு கொடு.உன் பாரம் குறையும். மன அமைதி கிடைக்கும் என்றார்.

உண்மையை புரிந்து கொண்டேன் என்று துறவிக்கு நன்றி கூறியவன் பிறருக்கு உதவி செய்து பெரு வாழ்வு வாழ்ந்தான்.இன்பமோ துன்பமோ எதையும் சுமக்காமல் மனதில் ஏற்றாமல் அதன் போக்கில் விட்டுவிட்டால் வாழ்வை எளிமையாக மகிழ்ச்சியாக கடந்துவிடலாம். எதுவானால் என்ன பங்கிட்டு கொடுப்பதன் மூலம் பாரம் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.


newstm.in

newstm.in

Next Story
Share it