சக்திபீடம்-12 மங்களாம்பிகை

பிள்ளையார் உலகமே அன்னையார் தான் என்று அன்னையைச் சுற்றிவந்த பழத்தைப் பெற்று கொண்டார். இதை உணர்த்தும் வகையில்தான் இத்தலத்தைல இறைவனுக்கும் இறைவிக்கும் ஒரே பிரகாரம் என்கிறீர்கள் என்கிறது...

சக்திபீடம்-12 மங்களாம்பிகை
X

அம்மனின் சக்தி பீடங்களில், விஷ்ணு சக்தி பீடமாக விளங்குகிறது, மங்களாம்பிகை திருத்தலம். இது, மந்திரிணி சக்தி பீட மாகும். சக்தி பீடங்களில் முதன்மை பீடமாக இது விளங்குகிறது. தேவாரத்தலம் பாடப்பெற்ற 89 வது திருத்தலம் ஆகும்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில், தண்ணீரால் உலகம் அழிய தொடங்கிய போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று சிவபெருமானிடம் கேட்கிறார். புண்ணியத்தலங்களில் உள்ள மணலை எடுத்து, அமுதம் சேர்த்து பிசைந்து, மாயக்கும்பம் ஒன்றை செய்து, அதில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்கவிடு என்று கூறினார். பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்து வந்து, ஓரிடத்தில் தங்கியது. சிவன் அதன் மீது பாணம் விட, அதன் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் பரவி வெண்மணலுடன் கலந்து லிங்கம் உருவானது. அதுவே கும்பேஸ்வரர் என்ற பெயர் பெற்றது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் குரு சிம்மராசியிலும், சூரியன் கும்பராசியிலும் நுழையும் பெளவுர்ணமி நாளில் மகாமக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறடு.

லிங்கத்தின் அடிப்பாகம் பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக் கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கின்றது.

இங்கு மூலவர் ஆதிகும்பேஸ்வரர்,அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மங்கள நாயகி, மந் திர பீடேசுவரி, மந்திர பீட நலத்தள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். சம்பந்தர் இவளை வளர்மங்கை என்று அழைக் கிறாள். சிவனும் சக்தியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராய் இருக்க சக்திக்கு பாதி உடலை தந்தது போல் தனது மந்திர சக் திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல இறைவிக்கு வழங்கியிருக்கிறார். இங்கு அம்பாள் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திக ளுக்கு அதிபதியாக மந்திர பீடேஸ்வரி என்னும் திருநாமத்தைப் பெற்றிருக்கிறாள்.

சக்திபீடம்-12 மங்களாம்பிகை

ஊரின் நடுவே மகாமக குளம் அமைந்திருக்கிறது. மகாமக திருநாளில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, சரயு நதிகள் தனது பாவங்களைப் போக்கி கொள்ள இந்த குளத்தில் நீராடுவதாக ஐதிகம். இத்திருநாளில் மனிதர்களாகிய நாமும் நீராடினால் நீராடியவர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பதோடு அவரைச் சார்ந்த சந்ததியினருக்கும் இப்புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம்.

கோயில்களில் இறைவனையும் இறைவியையும் சுற்றி வர தனித்தனி பிரகாரங்கள் உண்டு. ஆனால் இத்தலத்தைல் இறை வனையும் இறைவியையும் ஒருசேர சுற்றிவரும் வகையில் பிரகாரம் ஒன்றாக அமைந்திருக்கிறது. நாரதர் கொடுத்த கனி யைப் பெற பிள்ளையாரும், முருகனும் உலகை சுற்றிவர வேண்டும் என்ற நிபந்தனையின் போது முருகன் லோகத்தை சுற்ற பிள்ளையார் உலகமே அன்னையார் தான் என்று அன்னையைச் சுற்றிவந்த பழத்தைப் பெற்றுகொண்டார். இதை உணர்த்தும் வகையில்தான் இத்தலத்தைல இறைவனுக்கும் இறைவிக்கும் ஒரே பிரகாரம் என்கிறீர்கள் என்கிறது புராணக் கதை.

தல பிரார்த்தனை:

இறைவி மந்திர பீடேஸ்வரியை நினைத்து வழிபடும் பிரார்த்தனைகள் அனைத்துமே அவளது அருளால் குறையின்றி நிறைவேறும். திருமணத்தடை, குழந்தைப்பேறு, கல்வி, நிறைந்த செல்வம் போன்ற வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கும் அம்மனுக்கு அபிஷேகம் ஆடைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

சக்தி பீடங்களில் முதன்மையான பீடமாக விளங்கும் மங்களாம்பிகையை நேரம் கிடைக்கும் போது தரிசித்து வாருங்கள். செல்வம் பெருகும்.

newstm.in

newstm.in

Next Story
Share it