சக்தி பீடம் -14 ஸ்ரீ பிரமராம்பா தேவி

நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகே சிவனை காணமுடியும் என்னும் உரிமையையும் அவருக்கு கொடுத்தார். நந்தியின் சகோதரனான பர்வதனும் தமை யனைப் பின்தொடர்ந்து சிவனை நோக்கி விரதமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

சக்தி பீடம் -14 ஸ்ரீ பிரமராம்பா தேவி
X

சக்திபீடங்களில் சைல சக்திபீடம் என்றழைக்கப்படுகிறது தாயார் பிரமராம்பாள் வீற்றிருக்கும் மல்லிகார்ஜூனர் திருக் கோயில். ஸ்ரீ சைலத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் சிவனின் 12 ஜோதிர்லிங்கதலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எம்பெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 268 வது திருத்தலம் ஆகும்.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரமராம்பிகை ஆலயம் அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின் கீழ்ப் பகுதி விழுந்த இடமாக இது விளங்குகிறது.

தலவரலாறு:
சிலாதர் என்ற மகரிஷி குழந்தைப்பேறு வேண்டி சிவனை நோக்கி தவமிருந்தார் எம்பெருமானுடைய அருளால் இவருக்கு நந்தி, பர்வதன் என்ற ஆண்குழந்தைகள் இவருக்கு பிறந்தது. சிலாதரின் குழந்தைகளைப் பார்க்க வந்த சனகாதி முனிவர்கள் நந் திக்கு ஆயுள் குறைவு என்றார்கள். இதைக் கேட்டு வருந்திய சிலாதரின் துயரை நீக்க நந்தி சிவனை நோக்கி தவம் புரிந்தார்.

நந்திபகவானின் தவத்தை மெச்சிய சிவபெருமான் நந்தியைத் தன் வாகனமாக மாற்றிக்கொண்டார். நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகே சிவனை காணமுடியும் என்னும் உரிமையையும் அவருக்கு கொடுத்தார். நந்தியின் சகோதரனான பர்வதனும் தமையனைப் பின்தொடர்ந்து சிவனை நோக்கி விரதமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

தல சிறப்பு:
இத்தலம் மலையுச்சியில் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் கீழி ருந்து 3 மணி நேர பயணத்துக்கு பிறகே ஸ்ரீ சைலத்தை அடைய முடி யும். சிவபெருமான் நந்தியை தன்னுடைய வாகனமாக கொண்டது இத்தலத்தில் தான்

சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். நந்திபகவான் அவதரித்ததலம். நந்தியே மலையாக சிவனைத் தாங்கும் இத்தலத்தில் தான் விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம் இது.

பிரதோஷத்தன்று நந்திபகவானை வணங்கினால் புண்ணியம் என்று சொல்வார்கள்.நந்தி அவதரித்த தலத்திற்கே சென்று அவ ரை வணங்கி வந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும். காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும், கங்கையில் 2000 முறை குளித்த புண்ணியமும், இத்தல இறைவனை வணங்குவதால் பெறலாம் என்கிறது கந்த புராணம். சிவத்தலங்களுக்கு முதன்மையான இடம் கயிலாயம் என்றால் நந்தி பகவானுக்குரிய முதல் இடம் ஸ்ரீ சைலமாக இருக்கிறது.

இத்தலத்தில் சிவன் சன்னிதி கீழே அமைந்திருக்கிறது. பிரமராம்பாளைத் தரிசிக்க சிவனைத் தாண்டி 30 படிக்கட்டுகள் உயர மாக ஏறி தரிசிக்க வேண்டும்.மனத்தூய்மையோடு எவ்வித நித்ய கர்மமுமில்லாமல் மல்லிகார்ஜுனரை வணங்கலாம். ஜோதிர் லிங்கத்தின் தலையைத் தொட்டு வணங்கலாம். தரிசனம் ஒன்று போதும் எல்லா புகழும் பெறுவார்கள் என்கிறார்கள்.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி படைவீரர்களோடு ஸ்ரீ சைலத்தைக் கடக்கும் போது மலைக்காடுகளில் இயற்கை எழிலி லும் தன்னை மறந்து வீரர்களைத் தெற்கு நோக்கி யாத்திரை புரிய கட்டளையிட்டு இத்தல இறைவன் ஸ்ரீ மல்லிகார்ஜுனனை தரிசித்து தியானத்தில் ஈடுபட்டான். பக்தியில் தம்முடைய நிலையை மறந்து குடும்பத்தையும் மறந்தான். எஞ்சிய வாழ்நாளை இங்கேயே கடந்துவிடலாம் என்று நினைத்து அதில் உறுதியும் கொண்டான்.

இறைவி ஸ்ரீ பிரம்மராம்பா தேவி பவானி வடிவில் சிவாஜிக்கு காட்சி அளித்தாள். சிவாஜிக்கு பெரியவாளைத் தந்து கடமை உணர்வை எடுத்துரைத்ததோடு பகைவரை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்தினாள். அன்று முதல் பல வெற்றிகளைக் குவித்த சிவாஜி சத்ரபதி சிவாஜி என்றழைக்கப்பட்டார். சக்தி பீடங்களில் மூன்றாவது சக்திபீடமாக இத்தலம் விளங்குகிறது.

இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் இருக்கும் நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என்கிறார்கள் பக்தர்கள். கலி யுகம் முடியும் தருணத்துக்குள் நாம் ஸ்ரீ பிரம்மராம்பா தேவியையும், ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் தரிசித்து வருவோமா?

newstm.in

newstm.in

Next Story
Share it