Logo

சக்தி பீடம் - 3: காசி விசாலாக்ஷி

இந்துக்களின் புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி. புராதனமான நகரான இது, முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. மகான்களான ஆதிசங்கரர், இராமனுஜர், குமரகுருபரர், முனிவர்கள், ஞானிகள், ரிஷிகள் தடம்பதித்த புனித பூமி. வாரணா, ஹசி என்னும் இரண்டு நதிகளுக்கிடையே ஓடுவதால் இது வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. பனாரஸ் என்றும் காசி மாநகரம் அழைக்கப்படுகிறது. ஒளி, மங்காத ஞானம் என்பது காசிக்கு பொருள்.
 | 

சக்தி பீடம் - 3: காசி விசாலாக்ஷி

இந்துக்களின் புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி. புராதனமான நகரான இது, முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. மகான்களான ஆதிசங்கரர், இராமனுஜர், குமரகுருபரர், முனிவர்கள், ஞானிகள், ரிஷிகள் தடம்பதித்த புனித பூமி. வாரணா, ஹசி என்னும் இரண்டு நதிகளுக்கிடையே ஓடுவதால் இது வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. பனாரஸ் என்றும் காசி மாநகரம் அழைக்கப்படுகிறது. ஒளி, மங்காத ஞானம் என்பது காசிக்கு பொருள்.

காசி முக்தி கொடுக்கும் தலம். இங்கிருக்கும் காசி விஸ்வநாதர், 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானவர். 51 சக்தி பீடங்களில், அம்மன் விசாலாக்ஷி வீற்றிருக்கும் இத்தலமும் ஒன்று. தேவியின் காது வளையங்கள் மற்றும் கண்கள் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.

தலவரலாறு:
தட்சண், சிவனை அழைக்காமல் யாகம் செய்த போது தாட்சாயிணி சிவனின் பேச்சை மீறி தந்தையை எதிர்த்தாள். அப்போது தீயில் மாய்ந்த தாட்சாயிணியைக் கண்டு சிவன் ஊழித்தாண்டம் ஆட, திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை துண்டித்தார். அதில் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு இடத்தில் சிதறி விழுந்தன. ஆவேசமடைந்த சிவன், பார்வதியின் உடல் பாகங்களைக் கொண்டு காசிக்கு வந்தார். 

அப்போது, சிவன் பார்வதியின் காதில் தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதில் இருந்த காதணிகளைக் காணாத சிவபெருமானின் கண்களில் திருமால் தென்பட்டார். தமது சக்கரத்தால் கிணறு தோண்டி அருகே அமர்ந்து, சிவனை நோக்கி தரிசனம் செய்தார். அவரிடம் சென்று அம்பிகையின் காதணியைக் கேட்க அவர் அருகில் இருந்த கிணற்றைக் கை காண்பித்தார். 

சக்தி பீடம் - 3: காசி விசாலாக்ஷி

சிவன் கிணறை எட்டிப்பார்க்க அச்சமயம் சிவனின் காதுகளில் இருந்த குண்ட லமும் விழுந்தது. அப்போது கிணற்றில் பிரகாசமான பேரொளியுடன் வெளிப்பட்ட சிவலிங்கத்தில் சக்தி, சிவன் இருவரது சக்தியும் ஐக்கியமாக இருந்தது.
அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து திருமால் வழிபட்டதோடு, தொடர்ந்து சிவனை நோக்கி தவமிருந்து, இந்த ஜோதிர்லிங்கத்தை மக்கள் வழிபடவேண்டும் என்றும், சிவனது பிறையில் குடிகொண்டிருக்கும் கங்கை இந்த லிங்கத்தை அபிஷேகித்து இங்கு நீராடும் மக்களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்றும் வேண்டினார். 

சிவபெருமானும், திருமாலின் விருப்பத்துக்கிணங்க அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி, இன்றும் மக்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.  அவருக்கு விசாலாக்ஷியை மணமுடித்துவைத்தார் திருமால்.  எம்பெருமான் விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகி றார். மூலவர் மரகதத்தால் ஆனவர்.

தல சிறப்பு:
காசியைப் பற்றி குறிப்பிட தனி சிறப்பு என்பதே இல்லை எனலாம். ஏனெனில், காசியம்பதி ஆனது வேதகாலம், புராண காலத்துக்கு முந்தையது. சூரியனின் புதல்வரான சனி,  சிவனை நினைத்து தவம் செய்து நவக்கிரகங்களில் ஒரு வராகவும், மற்றொரு புதல்வர் எம தர்மன் எம்பெருமானை நோக்கி தவம் செய்து, எமலோகத்துக்கு அதிபதியாகவும் ஆயினர்.

பிரம்மதேவன் இத்தலத்தில் யாகம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள். இராமயணத்தில் இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க, இராமன் இங்கிருந்து மண் கொண்டு சென்று இராமேஸ்வரத்தில் லிங்கம் செய்து வழிபட்டு, தனது தோஷத்தை நீக்கி கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமாக கூறப்படுகிறது. பல ஞானிகளும், யோகிகளும், சப்த ரிஷிகளும் இங்கு தவம் புரிந்து பல பேறுகளை அடைந்திருப்பதால், சொல்லில் அடங்கா சிறப்புகளைப் பெற்றது காசியம்பதி.
சக்தி பீடமாக திகழும் அன்னை விசாலாக்ஷி கோயில், தென்னிந்திய பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. 

தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை விசாலாக்ஷி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும்  உள்ளோரால் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில், அன்னை விசாலாக்ஷி எனப்படும் மணி கர்ணிகா பீடத்தில் அமர்ந்து, அழகுற அருள்பாலிக்கிறாள். தன்னை அன்போடு வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றுகிறாள் அந்த அம்மன்.

சக்தி பீடம் - 3: காசி விசாலாக்ஷி

நவராத்திரியின் போது 9 நாட்களும் நவதுர்க்காவடிவில் தோன்றும் தேவியானவள், அப்போது வேண்டுபவர்களுக்கு வேண்டியதை தருகிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாக்ஷி தன் மடி மீது கிடத்திக் கொள்வதாகவும், விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிப்பதாகவும் நம்பப்படுகிறது.

சக்திபீடத்தில் கங்கை கரையோரத்தில், நீராடுவதற்கென்று  64 படித்துறைகள் தீர்த்தக்கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில்அம்மன் அருட்பாலிப்பதால் இது மணிகர்ணிகா பீடம் என்று அழைக்கப்படுகிறது

தல பெருமை:
காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை, பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. 
கங்கையில் நீராடினால் நமது தேகமும், விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன. முக்தி தலங்களாக குறிப்பிடப்படும் தலங்களில், காசி முதல் தலமாக சிறப்பு பெற்றுள்ளது. சைவர்கள் இதை பூலோக கைலாயம் என்றும் போற்றுகிறார்கள்.

தல பிரார்த்தனை:
பிரார்த்தனைகளில் பெரிய பிரார்த்தனை, பாவங்களை போக்கி முக்தியைப் பெறும்பேறுதான். விசாலாக்ஷியிடம் உருகிவேண்டினால் வேண்டியது வேண்டிய படி கிடைக்கும்.
வாழ்வில் ஒருமுறையாவது காசி பயணம் மேற்கொள்ளுங்கள், ஜோதிர்லிங்க தரிசனமும், சக்தி தரிசனமும் அமைய பெற்று பாவங்கள் தொலைந்து புதிய ஆன்மாவாய் வெளிவருவீர்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP