சத்தி நாயனார்- 63 நாயன்மார்கள்

எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதால் சிவனடியார்களை துன்புறுத்தி இகழ்ந்து பேசுவது பெருங்குற்றம். அப்படி செய்பவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.

சத்தி நாயனார்- 63 நாயன்மார்கள்
X

விபூதி, ருத்திராட்சம், சடாமுடி கொண்ட சிவனடியார்கள் தன்னில் இலயித்து தன்னுள் எம்பெருமானாகிய சிவபெருமானை நிறுத்தி மகிழ்வர். எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதால் சிவனடியார்களைத் துன்புறுத்தி இகழ்ந்து பேசுவது பெருங்குற்றம். அப்படி செய்பவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.

சோழநாட்டில் வரிஞ்சையூர் பதியில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் சத்தி நாயனார். இவர் அதீத சிவத்தொண்டராக வாழ்ந்துவந்தார். இளமை முதலே சிவபெருமானின் மீது அளவற்ற பக்தியை கொண்டிருந்த சத்தி நாயனார் இளமையிலேயே சடைமுடியுடைய விடையவர்.

சிவனின் மீது பற்றுக்கொண்டு சிவனடியார்களுக்கு உதவுவதையே பெரும் பேறாக நினைத்து மகிழ்ந்து வாழ்ந்துவந்த சத்தி நாயனாருக்கு சிவனை யாராவது பழித்து அல்லது இகழ்ந்து பேசினால் அவர்களது நாவை தம்மிடம் இருக்கும் குறட்டினால் பிடித்து அரிவார். அவர்கள் நாவினை அரியும் வலுவைக் கொண்டிருப்பதாலேயே அவர் சத்தியார் என்றழைக்கபெற்றார். சிவனின் மீது கொண்டிருந்த அன்பினாலேயே இத்தகைய அன்பை செய்து வந்து சிவனின் அன்பை பெற்றார்.

சிவனடியார்களை யாரும் இகழா வண்ணம் முழுக்க முழுக்க சிவனுக்காகவே வாழ்ந்துவந்தார். அளவற்ற தொண்டாற்றி சிவனது பாதத்தில் சரண டைந்தார். ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it