Logo

சாக்கிய நாயனார் -63 நாயன்மார்கள்

எம்பெருமானே இது என்ன சோதனை என்னை இத்தகைய துன்பத்துக்கு ஆளாக்கி விட்டாயே. எத்தகைய தவறை செய்து விட்டேன். என் பிழையை மன்னிப்பீரா என்று கலங்கினார்.
 | 

சாக்கிய நாயனார் -63 நாயன்மார்கள்

திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குடியில் பிறந்தவர் சாக்கியநாயனார். சிவபெருமானின் மீது கொண்டிருந்த அன்பு போலவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும், அருளையும் கொண்டிருந்தார். சிவனடியார்கள் மீதும் சிவனின் மீதும் பேரருளை வைத்திருந்தார்.

இப்பிறவியோடு முக்தி பெற வேண்டும் என்று விரும்பிய சாக்கியர் நன்னெறி நூல்களைக் கற்க விரும்பினார். இதற்காக காஞ்சிபுரம்சென்று அங்கிருக்கும் சாக்கியர்களிடம் பழகினார். பலநூல்களைக் கற்றறிந்தும் நல்ல நெறிகளைக் காண முடிய வில்லை என்னும் எண்ணம் உண்டானது.இதனால் சைவ, சமய நூல்களையும் கற்றார். நூல்களால் பெற முடியாததை சிவ பெருமானை சரணடந்தால் பெறலாம் என்னும் தெளிவை உணர்ந்துகொண்டார்.

தாம் இருந்த சாக்கிய வேடத்துடனேயே சிவபெருமானை நித்தமும் தொழுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அருவம், உருவம் என காணும் எல்லா பொருள்களிலும் சிவனையே கண்டவர் சிவனின் பெருமையை உணர்ந்து நாள்தோறும் அவரை வழிபட்ட பிறகே உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒருமுறை வெட்டவெளி வழியே சென்றிருந்த போது யாரும் கேட்பாரற்று பூஜை செய்ய வழியின்றி சிவலிங்கம் ஒன்று தனிமையில் கிடந்தது. இதைக் கண்டதும் இவருக்கு வருத்தமாக இருந்தது.யாரும் கேட்பாரற்று கிடக்கும் நிலையில் இருக் கும் லிங்கத்தை தாமே பூஜிக்கலாம் என்று நினைத்தார். அருகில் மலரும், நீரும் இல்லாத நிலையில் ஐந்தெழுத்து மந்தி ரத்தை உச்சரித்தப்படி கீழே கிடந்த கல்லை எடுத்து லிங்கத்தின் மேல் எறிந்தார்.

பக்தனின் அன்புக்கு கட்டுப்பட்டஇறைவனுக்கு கல்லின் வலி தெரியவில்லை. மாறாக பக்தனின் அன்பு மட்டுமே தெரிந்தது. குழந்தை அன்போடு தவழ்வதை போன்று இறைவனும் மகிழ்வுற்றார். இறைவனை கல்லால் அடிக்கும் செயல் நமக்கு தவறாக தெரிந்தாலும் அன்பால் செய்வதை அன்போடு ஏற்றுக்கொண்டார் சிவபெருமான்.

சிவனின் மீது எறியும் கல் மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்க ஒவ்வொருநாளும் லிங்கத்தைத் தேடி வந்து கல் எறிந்து வந்தார். தான் இப்படி கல் எறிவதைக் கண்டால் ஊரார் ஏசினாலும் பிறகு சாக்கியன் என்பதால் வெறுப்பின் மிகுதியால் இதை செய்கிறேன் என்று எண்ணுவார்கள் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆனால் சிவனின் மீது தான் கொண்டி ருக்கும் ஈடுபாடு சிவன் அறிந்தால் போதும் என்று நினைத்தார்.

சாக்கிய நாயனார் -63 நாயன்மார்கள்
 

இப்படியே அன்றாடம் லிங்கத்தின் மீது கல் எறிவதும் அதைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் வீட்டுக்கு சென்று உணவருந்துவ துமாக சிவனது நினைப்பில் வாழ்ந்தார். ஒரு நாள் லிங்க வழிபாட்டை மறந்து உணவருந்த அமர்ந்துவிட்டார். அப்போது தான் லிங்கத்தை வழிபட மறந்ததை நினைவு கூர்ந்தார்.

எம்பெருமானே இது என்ன சோதனை என்னை இத்தகைய துன்பத்துக்கு ஆளாக்கி விட்டாயே. எத்தகைய தவறை செய்து விட்டேன். என் பிழையை மன்னிப்பீரா என்று கலங்கினார். மனம் தளராமல் எம்பெருமானிடம் ஓடினார். வேகமாக கீழே கிடந்த கல்லை எடுத்து எம்பெருமானின் மீது எறிந்தார். பக்தி பெருக்கோடு நின்றிருந்தார்.

அவரது அன்புக்கு கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியோடு எழுந்தருளினார். எம்பெருமானாகிய சிவபெருமானின் காணக் கிடைக்காத கோலத்தைக் கண்ட சாக்கிய நாயனார் இரண்டு கரங்களையும் தலை மேல் குவித்து உடல் முழுவதும் நிலத்தில் பரவ வீழ்ந்து பணிந்தார். சிவபெருமானோடு  கயிலாயத்தில் வாழும் பேறை சாக்கிய நாயனாருக்கு அளித்து மகிழ்ந்தார் எம்பெருமான்.

சிவாலயங்களில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது. 

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP