காலங்களை வென்ற சாய்பாபா!!

சாய்பாபாவின் போதனைகள் மட்டுமே காலத்தை வென்ற, இந்த உலக மகா சக்தியான அன்பு உணர்வினை நமக்கு என்றென்றும் ஊட்ட வல்லவையாகும்.

காலங்களை வென்ற சாய்பாபா!!
X

சாய்பாபாவின் போதனைகள் மட்டுமே காலத்தை வென்ற, இந்த உலக மகா சக்தியான அன்பு உணர்வினை நமக்கு என்றென்றும் ஊட்ட வல்லவையாகும்.

ராமராக, கிருஷ்ணராக, புத்தராக, ஏசுவாக, அல்லாவாக மட்டுமல்லாமல் இப்படி பல்வேறு அவதாரங்களாக பகவான் இருக்கிறார் என்பது நமது அடிப்படை நம்பிக்கை. இந்தப் பல்வேறு வடிவங்களின் மொத்த உருவமே சாய்பாபா ஆகவே, சாய்பாபாவை வழிபட்டால் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட புண்ணியம் பாக்கியமும் கிடைக்கும். எல்லாச் சமயங்களையும் ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும். மத ,இன ,மொழி வேறுபாடுகள் நீங்கும். சாய்பாபா ஒருவரே அனைவரின் பிரார்த்தனைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றி வைக்கிறார் . பக்தர்களின் பாவங்களைப் போக்கி நன்னெறிப்படுத்துகிறார் .

மனித உள்ளங்களில் ஏற்படும் அனைத்து ஆசைகளை நிறைவேற்றிக் வைக்கிறார் சாய்பாபா. இவ்வுலக வாழ்கை ஆசைகளான செல்வச் செழிப்பு, நோய் நீக்கம் ,வேலை வாய்ப்பு குழந்தை நலம் போன்ற மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளை அருள் பாலித்து வழங்கி வருகிறார் சாய்பாபா.
ஓம் ஸ்ரீ சாய்ராம்

டாக்டர். வி. ராமசுந்தரம், ஆன்மிக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it