இருபத்தைந்து மாடிகள் கட்ட உதவிய சாய்பாபா

சாய்பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தேவ். இவர் எந்தவொரு காரியத்தை செய்யும் முன் சாய்பாபாவிடம் அனுமதி வாங்காமல் எந்த ஒரு காரியம் செய்யவதில்லை என்ற தன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இருபத்தைந்து மாடிகள் கட்ட உதவிய சாய்பாபா
X

சாய்பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தேவ். இவர் எந்தவொரு காரியத்தை செய்யும் முன் சாய்பாபாவிடம் அனுமதி வாங்காமல் எந்த ஒரு காரியம் செய்யவதில்லை என்ற தன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர் ஒரு ஐந்து மாடிக் கட்டிடம் கட்ட ஆவல் கொண்டார். அதற்கு வேண்டிய பணத்தையும் சேமித்து வைத்திருந்தார். ஆனாலும் சாய்பாபாவின் அனுமதி இல்லாமல் எப்படி இந்தக் கட்டிடத்தைக் கட்ட முடியும் .

விரைந்தார் ஷீரடிக்கு. சாய்பாபாவின் தரிசனமும் கிடைத்தது . சாய்பாபாவின் முன் பக்தியுடன் நின்று, அவரின் பொற்பாதம் தொட்டு வணங்கிய தேவ் , மெல்ல தயங்கியவாறு , தனது எண்ணத்தை தெரிவித்தார். “சாய்பாபா அனுமதி மறுத்தால் என்ன செய்வது? தனது ஆசை நிராசையாகி விடுமே !" என்ற கவலை அவர் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது.

சாய்பாபா அவரையே உற்று நோக்கினார். அவரின் ஆசை சாதாரண மனிதர்களுக்கே படம் பிடிக்கிற மாதிரி தெரிகிற போது, சாய்பாபாவால் எவ்வாறு உணரமுடியாமல் போய்விடும்? பதில் ஏதும் பேசாமல் தரையில் ஏதோ கோடு கிழித்தார். எண்ணிப் பார்த்தால் அதில் 25 கோடுகள் இருந்தன . இதற்கு என்ன அர்த்தம் ? அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை.

சற்று நேரத்திற்குப் பிறகு சாய்பாபா கூறினார் , " ஒரு கோட்டிற்கு ஒரு ரூபாய் வைத்து 25 கோட்டிற்கும் 25 ரூபாய் தட்சிணையாகக் கொடு "என்றார். ஆகா! ஐந்து மாடிக் கட்டிடம் கட்ட சாய்பாபா அனுமதி வழங்கிவிட்டார். அதற்கு தட்சிணை யாக 25 ரூபாய் கேட்கிறார் என்று நினைத்த தேவ்வின் மனம் சந்தோஷத்தில் ரப்பர் பந்தாகத் துள்ளாட்டம் போட்டது.

சற்றும் யோசிக்காமல் உடனடியாக 25 ரூபாய் பணத்தை எடுத்து தட்சிணை யாக சாய்பாபாவிடம் கொடுத்து விடைபெற்றார். ஊருக்கு திரும்பிய தேவ், தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக ஐந்து மாடிக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கினர். ஆனால், அப்போது ஒரு எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது.

ஐந்து மாடியுடன் அந்த கட்டிடம் முடிந்து போகாமல் வளர்ந்து கொண்டே போனது. நண்பர்கள் பலரும் ஏதேதோ யோசனைகள் தெரிவிக்க, 25 மாடி கொண்ட கட்டிடமாக அதனைக் கட்டி முடித்தார் தேவ். ஆக ,சாய்பாபா வரைந்த 25 கோடுகளுக்கான அர்த்தம் அப்போது தான் புரிந்தது தேவ்விற்கு. அந்தக் கட்டிடம் இன்றளவும் இருந்து வருகிறது.
இருபத்தைந்து மாடிகள் கட்ட உதவிய சாய்பாபா
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it