பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சாய்பாபா

ஹரிகனோபா என்பவர் நிம்கான் என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சாய்பாபாவின் தெய்வீக சக்திகளை பற்றி ஹரிகனோபா என்பவருக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. சாய்பாபாவைத் தரிசிக்க ஷீரடிக்கு வந்திருந்தார் . மசூதிக்குள் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்தார்.

பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சாய்பாபா
X

ஹரிகனோபா என்பவர் நிம்கான் என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சாய்பாபாவின் தெய்வீக சக்திகளை பற்றி ஹரிகனோபா என்பவருக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. சாய்பாபாவைத் தரிசிக்க ஷீரடிக்கு வந்திருந்தார் . மசூதிக்குள் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்தார். என்றாலும் அவருக்கு சாய்பாபா மீது நம்பிக்கை இன்னும் வரவில்லை. அதே சிந்தனையுடன் வெளியில் வந்தார். வெளியேவந்து பார்த்த போது நான் அணிந்து இருந்த புத்தம் புதிய செருப்பு அங்கு காணவில்லை.

அதே ஏமாற்றத்துடன் அவர் விடுதிக்கு திரும்பினர். மனத்திற்கு நிம்மதி காணாமல் போயிற்று. வெறும் காலுடனேயே சென்றார். சாப்பிடச் செல்லுமுன் வழக்கம் போல பூஜை செய்தார் . ஆனால் அவர் மனம் மட்டும் பூஜையில் பதியாமல் , தனது காணாமல் போன செருப்பிலேயே கிடந்து இருந்து. பூஜை முடிந்து சாப்பிடும் போதும் கூட அவருக்கு அதே நினைப்பு தான். சாப்பிட்டு விட்டு வந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்து பார்த்தார். ஒரு சிறுவன் கம்பு நுனியில் புது ஜோடி செருப்பை கட்டித் தொங்க விட்டபடி வந்தான். அது அவருடைய காணாமல் போன செருப்புதான். ஆனால், அது தனக்குச் சொந்தமானது என்பதும் எப்படி அந்தச் சிறுவனுக்கு தெரியும்? என்ற கேள்விகள் மனத்திற்கு ஓடி கொண்டு இருந்தன .

‘‘இங்கு ஹரிகனோபா என்பவர் யார்? அவர் இந்த செருப்புகளை பெற்றுச் செல்லலாம்” என்று கூறியபடி வந்தான். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அவனை ஹரிகனோபா தடுத்து நிறுத்தினார், “நான்தான் ஹரி” என்றார். உடனே அந்த சிறுவன், அவரிடம் புதுச் செருப்புகளை கொடுத்துவிட்டு, இதை சாய்பாபா உங்களிடம் ஒப்படைத்து விட்டு வருமாறு கூறினார். ஹரிகனோபாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சாய்பாபாவுக்கு எப்படி தன்னைத் தெரியும்? தன் விலை உயர்ந்த செருப்பு தொலைந்து போனது எப்படி சாய்பாபாவிற்கு தெரியும்? அந்த புதிய செருப்பை எப்படி மீட்டு கொடுத்து அனுப்பினார்? என்று அடுக்கடுக்காக தமக்குள் கேள்விகள் எழுப்பி வியந்து போனார் ஹரிகனோபா

அந்த நிமிடமே அவர் மனதில் சாய்பாபா மீது உண்மையான பக்தி ஏற்பட்டது. உடனே மீண்டும் மசூதிக்கு ஓடிச் சென்று சாய்பாபா கால்களில் விழுந்து கண்ணீர் மல்க ஆசி பெற்றார். சாய்பாபா அவரைப் பார்த்து புன்னகைத்தார். “தன்னை நம்பி சீரடிக்கு வந்தவரை நான் வந்த யாரையும் சும்மா அனுப்பியதாக வரலாற்றிலேயே இடம் இல்லை”. என்றார் சாய்பாபா. நம்பிக்கையோடு என்னிடம் கேளுங்கள், பொறுமையாக காத்து இருங்கள் நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும் என்று சாய்பாபா அடிக்கடி பக்தர்களிடம் சொல்வார்.
ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சாய்பாபா

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

Newstm.in

newstm.in

Next Story
Share it